திராணி உள்ளவர்களாகுங்கள்

திராணி உள்ளவர்களாகுங்கள்

இதோ, திராணியும் வல்லமையுடைய ஒருவன் ஆண்டவரிடம்தில் இருக்கிறான். அவன் கல்மழையைப் போலவும், சங்காரப் புசல் போலவும், புரண்டு வருகிற பெருவெள்ளம் போலவும் வந்து கையினாலே அதைதரையில் தள்ளி விடுவான். (ஏசா 28 : 2).

இந்தக் குறிப்பில் திராணி என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி கவனிக்கலாம். தேவனிடத்தில் இருக்கிற மக்கள் திராணியும் வல்லமையும் உடையவர்கள். தேவனிடத்தில் திராணியுள்ள அந்த மனிதன்யார் என்றால் அது நீங்கள்தான். நாம் திராணியுள்ளவர்களாகும்படி தேவன் விரும்புகிறார். தேவனுக்கு தேவை திராணியுள்ளவர்கள் அதாவது சாதிக்கக்கிற வல்லமையுள்ளவர்களே. எப்படிப்பட்ட திராணி தேவை என்பதை சிந்திக்கலாம்.

 1. பிசாசின் தந்திரங்களை எதிர்த்து நிற்கிற திராணியுள்ளவர்களாகுங்கள்
  (எபே : 6 : 11) (2 கொரி : 2 : 11 , 11 : 3)
 2. இரட்சிக்கிற அல்லது விடுவிக்கிற திராணியுள்ளவர்களாகுங்கள்.
  (சங் 146 : 3), (மத் 10 : 8)
 3. நன்மை செய்கிற திராணியுள்ளவர்களாகுங்கள்
  (நீதி 3 : 27), (2 கொரி 1 : 4), (கலா 6 : 9), (யாக் 4 : 17)
 4. கொடுக்கிற திராணியுள்ளவர்களாகுங்கள்
  (2 கொரி 8 : 3), (லேவி 14 : 22), (1 நாளாக 29 : 14)
 5. கற்றுக்கொள்கிற திராணியுள்ளவர்களாகுங்கள்
  (மாற்கு 4 : 33), (1 பேது 2 : 3.)
 6. சோதனையை சகிக்கிற திராணியுள்ளவர்களாகுங்கள்
  (1 கொரி 10 : 13), (யாக் 1 : 13-15)
 7. தன்னைத்தான் காத்துக்கொள்கிற திராணியுள்ளவர்களாகுங்கள்
  (மத் 27 : 42) கள்ளன், (1 கொரி 9 : 27)

இந்தக் குறிப்பில் திராணியுள்ளவர்களாகுங்கள் என்பதை குறித்து சிந்தித்தோம். யாரெல்லாம் தேவனுக்காக திராணியுள்ளவர்கள் என்பதை குறித்து சிந்தித்தோம். மேல் சொன்னபடியுள்ளவர்கள்தான் தேவனுடைய பார்வையில் திராணியுள்ளவர்கள். நீங்கள் திராணியுள்ளவர்களா என்பதை சோதித்து பாருங்கள்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur