தலமையத்துவத்தில் இருக்க கூடாத சுபாவங்கள்.

தலமையத்துவத்தில் இருக்க கூடாத சுபாவங்கள்.

பதவி நிரந்தரம் என்கிற மயையான எண்ணம்.

என்னை யாரும் இனிமேல் அசைக்க முடியாது என்கிற கர்வம்.

நான் உன்னை ஒருகை பார்ப்பேன் என்கிற பழிவாங்கும் எண்ணம்.

என்னை வேண்டுமென்றால் வந்து பார் என்கிற தோரணை.

எதிர் எதிர் நபர்களிடம் அவர்களுகேற்ற படி பேசி கோள் சொல்லி ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது நல்லவர் போல நடித்து பதவியை தக்க வைக்கும் பதவி மோகம்.

வசதி மற்றும் செல்வாக்கு உள்ளவர்களுக்கு மற்றும் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஏற்றபடி நீதியை வளைத்து செல்வாக்குயற்றவர்களின் நியாத்தை புரட்டும் நீதியற்ற தன்மை.

தன் பதவியை தக்க வைக்க பிறரை தூண்டி விட்டு அதில் குளிர் காயும் கபட பக்தி.

செலின்