அப்பமும் ஆயுதமாகும்            வித்யா’வின் பதிவு

அப்பமும் ஆயுதமாகும் வித்யா’வின் பதிவு

உலகம் ஒரு வலிய
போர்க்களம்


வாழ்க்கையோ
என்றும் போராட்டம்

 
இன்றைக்கு மட்டுமல்ல
அன்றைக்கும் அப்படியே
 
கி.மு. 2-ல்
இஸ்ரவேல் மக்களின்
நியாயாதிபதி
ஒருவன் வாழ்ந்தான்
அவன் பெயர் கிதியோன்
 
கிதியோன் என்றால்
வெட்டுகிறவன்

என்று அர்த்தம்
 
பெயருக்கும்
வாழ்க்கைக்கும்
சம்பந்தம் இல்லாமல்
வாழ்ந்தவன்


ஏழு ஆண்டுகளாக 
நெருக்கப்பட்ட சூழ்நிலை
 
அமலேக்கியரும்
கிழக்கத்திப் புத்திரரும்
இஸ்ரவேலரின் செழிப்பை
கொள்ளையடித்துக்
கொண்டிருந்தனர்


அவர்களை எதிர்க்க
இஸ்ரவேலில் எவருக்கும்
பெலன் இல்லை
பயம் ஆட்கொண்டிருந்தது

தன் சொந்த நிலத்தில்
விளைந்ததை சுதந்திரமாய்
அனுபவிக்க கிதியோனுக்குத்
தைரியமில்லை


ஆலைக்கு சமீபமாய்
அவன் கோதுமையை
போரடித்தான்
 
அவன் வாழ்க்கையும்
இதனால் போரடித்துப்போய்
இருந்தது

தாழ்வு மனப்பான்மையில்
தாராளமாய் குடிகொண்டிருக்கும்
அவனின் உள்ளத்தைக்
கர்த்தர் கவனித்தார்

வெட்ட வேண்டியவன்
சுட்ட கோதுமை அப்பமாக
சுருண்டு கிடக்கிறானே


இவனை உருண்டோடும்
அப்பமாக மாற்றினால் என்ன?


தேவன் நினைத்தார்
நிறைவேற்றினார்
 
போர் முனையில் இருக்கும்
ஒரு போர்வீரன் கனவு கண்டான்
அருகில் இருந்தவன் அதற்கு
விளக்கமும் சொன்னான்


சுட்டிருந்த ஒரு
வாற்கோதுமை  அப்பம்
மீதியானியரின்
பாளையத்திற்கு
உருண்டு வந்தது

அது கூடாரம் மட்டும்
வந்தபோது
அதை விழத்தள்ளி
கவிழ்த்துப் போட்டது

கூடாரம் விழுந்துகிடக்கிறது
என்றான் ஒருவன்


இது கிதியோன் என்னும்
இஸ்ரவேலனுடைய
பட்டயமே அல்லாமல் வேறல்ல
 
தேவன் மீதியானியரையும், 
இந்த சேனை அனைத்தையும்
அவன் கையிலே 
ஒப்புக்கொடுத்தார் என்றான்

(நியாயாதிபதிகள் 7:13 14 )
 
கோதுமையில் வாற்கோதுமை
மென்மையான தானியம்.
 
கர்த்தர் சமூகத்தில்
மென்மையான உள்ளம்
இருந்தால் போதும்

 
நெருக்கப்பட்ட தானியம்
மாவானது


மீதியானியரால்
நெருக்கப்பட்டான்
கிதியோன்

 
பலவிதமான நெருக்கங்கள்
உன்னையும் சூழ்ந்திருக்கிறதா?

 
புரட்டப்பட்ட மாவு
பின்னர் அக்கினியால்
சுடப்படுகிறதே
 
உனக்கும் சோதனையால்
சுடப்பட்ட அனுபவம் உண்டா?

 
கர்த்தர் எங்களோடிருந்தால்
இவையெல்லாம் எங்களுக்கு
நேரிடுவானேன்?

கர்த்தரிடம் கதறுகிறான்
கிதியோன்


விளைவு என்ன?
சுடப்பட்ட மாவு
வலிமை தரும்
அப்பமாக மாறுகிறது

 
உருண்டோடும் தன்மை
சுடப்பட்ட அப்பத்திற்கு
எப்போதும் இருக்காது
 
தோசை உருண்டோடியதைப்
பார்த்திருக்கிறீர்களா?

இல்லையே!
 
ஆனால் ஆண்டவரால் ஓர்
அற்புதம் நிகழ்ந்தது
 
பிட்கப்படவேண்டிய அப்பம்
எதிரியின் கூடாரத்தைப்
பிய்த்தெறிந்துவிட்டது
இதுதான் தேவ வல்லமை

 
அப்பம் ஆயுதமாக,
அதாவது
கிதியோனின்  பட்டயமாக
மாறியது

 
ஜீவ அப்பமாகிய இயேசு
பிசாசையும் மரணத்தையும்
ஜெயித்தார்
 
உனக்கு
ஆவியின் பட்டயத்தைத்
தந்துள்ளார்

 
உயிருள்ள அப்பமாக
ஓடிக்கொண்டே இரு

 
அது உருவின பட்டயமாக மாறும்
உனக்கு எதிர்ப்படும் பிசாசின்
கூடாரங்கள் அழியும்

 
கர்த்தர் மீதியானியரின்
பாளையத்தை உங்கள் கைகளில்
ஒப்புக்கொடுப்பாராக
.

Written by
Pastor S. Victor Jeyapal
(2004-க்கு முன் எழுதப்பட்டது)

+++++++++++++++++++
Compiled by
Pastor J.Israel Vidya Prakash B.Com.,

Founder of Living Water Ministries, Madurai
Director, Literature Dept. tcnmedia.in
“Nallaasaan” International Award Holder, Malaysia