கிறிஸ்தவர்கள் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கலாம் அரசியல் கட்சிகளில் பொறுப்பு வகிக்கலாம். ஆனால்
முழு நேர ஊழியர்கள் பிழைப்புக்கு அடுத்த அலுவல்களில் சிக்கிக் கொள்ள கூடாது. அப்படி அரசியல் கட்சிகளில் பொறுப்பு வகிக்கிறவர்களுக்கு
- ஆத்தும பாரம் இருக்காது.
- ஜெப ஆவி இருக்காது.
- ஊழிய வாஞ்சை குறையும்.
- தற்பொழிவை நாடுவார்கள்
- .மனிதனை பிரியப்படுத்துவார்கள்.
- பணப்பிரச்சினையில் மாட்டிக் கொள்வார்கள்.
- .கட்டப்பஞ்சாயத்து செய்வார்கள்.
- .தேவ சத்தம் சித்தம் தூரமாக இருக்கும்.
- .பொய் புரட்டில் பழகிவிடுவார்கள்.
- .மொத்தத்தில் தேவ கிருபையையும் பிரசன்னத்தையும் இழந்து அழைப்பை அசட்டைப்பண்ணி ஊழியத்தை மாத்திரம் அல்ல குடும்பத்தையே இழக்கும் அபாயம் ஏற்படும்.
நண்பர்களே யாரையும் குற்றப்படுத்தும் முகாந்தரமாக இதை எழுதவில்லை அது எனக்கு அவசியம் இல்லை. கண்ணால் பார்த்தேன் பார்த்து கொண்டிருக்கிறேன் ஆகவே எழுத வேண்டும் என்று அன்புடன் எழுதுகிறேன்.
(குறிப்பு :திருச்சபைகளுக்கு ஆதரவாக ஊழியத்திற்கு ஆதரவாக கிறிஸ்தவ அமைப்புகள் மற்றும் கட்சிகளில் ஊழியர்கள் பொறுப்பு வகிப்பது தவறு அல்ல)
David Livingstone