சமுத்திரச் சாவுகளுக்குக் காரணம்! வித்யா’வின் விண் பார்வை!

சமுத்திரச் சாவுகளுக்குக் காரணம்! வித்யா’வின் விண் பார்வை!

சமுத்திரச் சாவுகளுக்குக் காரணம்
துணிச்சலே!

விசுவாசத்தினாலே அவர்கள்
சிவந்த சமுத்திரத்தை
உலர்ந்த தரையைக்
கடந்துபோவதுபோலக்,
கடந்துபோனார்கள்;
எகிப்தியர் அப்படிச்
செய்யத்துணிந்து
அமிழ்ந்துபோனார்கள்

(எபிரெயர் 11:29)

நீச்சல் தெரிந்தவர்கள்
மட்டுமல்ல, அத்தனைபேரும்
நீச்சல் வீரர்கள்!

குதிரை வீரர்கள்,
பார்வோன் தவிர
அத்தனைபேரும்
போர் பயிற்சி பெற்றவர்கள்

பார்வோன்
பேச்சு பயிற்சியில்
தேர்ச்சி பெற்றவன்

இங்கே நீச்சலோ
பயிற்சியோ
பேச்சுத் திறமையோ
வேலைக்கு ஆகாது

அத்தனை பெரிய
பார்வோனின் சேனை
துணிச்சலினால்
அந்த சிவந்த சமுத்திரத்தில்
அமிழ்ந்துபோனது

விசுவாசமுள்ளவர்களுக்கு
திறக்கப்பட்டிருக்கும் வழி.
அவிசுவாசமுள்ளவர்களால்
பயன்படுத்தப்பட முடியாது

துணிவு வேண்டும், ஆனால்
இப்படிப்பட்ட துணிச்சல்
வேண்டாம்
.

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
Pastor | Writer | Radio Speaker
ஜீவதண்ணீர் ஊழியங்கள்
மதுரை 14