Check-in God’s will in everything that we do? Or How to take decision in line with God’s will?

There are few questions must be asked before taking any prior decision to check whether it is God’s will or not!

The desires, the dreams, the revelation, the prophetic word and the situation upon which moves in taking decisions. Please ask the appropriate questions to decide whether it is from God or not?

1. Is it implying God’s wisdom or indicating divine knowledge in it? God’s wisdom is foolishness to the world.

நாம் எடுக்கும் தீர்மானம் தேவ அறிவையும் ஞானத்தையும் வெளிப்படுத்துகிறதா? தேவ ஞானம் மனித ஞானத்திற்கு அப்பாற்பட்டது. அது உலகத்திற்கு பைத்தியமாக தோன்றும்.

2. Does it getting us confused or giving us self satisfaction? If it is confused and self satisfied means it is not from God.

நாம் எடுக்கும் தீர்மானம் நமக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறதா? அல்லது சுய திருப்தியை ஏற்படுத்துகிறதா? சுய திருப்தி மற்றும் குழப்பம் கர்த்தருடையது அல்ல.

3. Does it contradict to the word of God? Or confirm to the human idea and world? If that so then it is not from God.

நாம் எடுக்கும் தீர்மானம் வேதாகமத்திற்க்கு முரண்பாடாக இருக்கிறதா? அல்லது மனித திட்டதிற்கு உலகத்திற்கு ஏற்றார் போல் இருக்கிறதா? அப்படி இருந்தால் அதே தேவனிடம் இருந்து வந்தது அல்ல.

4. Does require faith and inspire us to move in obedience? Or does it depend on human effort or human resources?

நாம் எடுக்கும் தீர்மானம் விசுவாசம் மற்றும் விசுவாச கீழ்ப்படிதல் தலை சார்ந்து இருக்கிறதா? விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதல் தேவனிடம் இருந்து வருகின்றது. அல்லது சுய பெலம் மற்றும் பணத்தை சார்ந்து இருக்கிறதா? சுயம் பணம் இது நம்மை சார்ந்தது.

5. Does it emphasis God’s moral characters reflecting kingdom values and God’s power? Or does it come from feeling and infatuation? Check the definition of God’s love in I Cor 13. Compare it with your feelings.

நாம் எடுக்கும் தீர்மானம் தேவ சுபாவத்தை மற்றும் வல்லமையை தேவராஜியாய வரைமுறைகளை கொண்டு வலியுறுத்துகிறதா? அப்படியென்றால் அது கர்த்தரிடம் இருந்து வந்தது. மனித உணர்வு மோகத்தின் அடிப்படையில் வந்தால் அது தேவனிடம் இருந்து வந்தது அல்ல!

6. Does it give us engery, joy and happiness with our personilty elevation? Or does it manipulate and fear us?

நாம் எடுக்கும் அந்த தீர்மானம் சந்தோசத்தையும், உற்சாகத்தையும் கொடுத்து நமது ஆழத்துவத்தில் மேலாண்மையை கொடுத்தால் அது தேவனிடம் இருந்து வந்தது. பயம் நடுக்கம் திகில் மற்றும் uneasiness வந்தால் அது தேவனிடம் இருந்து வந்தது அல்ல.

7. Does it give us focus and urgency with benifitial to His kingdom?

நாம் எடுக்கும் தீர்மானம் ஒரே நோக்கத்தையும் அதை நடபிக்க இரு உத்வேகத்தையும் கொடுத்தால் அது தேவனிடம் இருந்து வருகின்றது. அதினால் தேவராஜ்யத்தில் அனேகர் பயனடைவர். தேவ திட்டம் நம்மை அவசரபடுத்தாது, ஆத்திரபடுத்தாது ஆனால் துரிதப்படுத்தும்.

8. Does it give us peace of mind and calmness in moving with clarity and boldness?

நாம் எடுக்கும் தீர்மானத்தில் புத்திக்கு எட்டாத தேவ சமாதானம் இருந்தால் அது தேவ சித்தமே. தெளிந்த புத்தியும் தைரியமும் அவரின் சமாதானத்தில் உள்ளது.

9. Does it provide God’s provision or lack in its need?

நாம் எடுக்கும் தீர்மானத்தில் தேவன் எல்லா அனுகூலங்கள் மற்றும் தேவைகளை சந்தித்தால் அது தேவனிடம் இருந்து வருகிறது. குறைபாடு தேவ திட்டத்தில் இல்லை. தேவனுடைய வரவு அவர் வழியில் தான் இருக்கும்.

10. Does it glorify God or does it covet God’s glory in it.

நாம் எடுக்கும் தீர்மானம் எப்பொழுதும் தேவ கிருபையை சார்ந்து தேவனுக்கு மகிமையை கொடுக்கும். நமது சுய மகிமை வெளிப்பட்டால் அது தேவனுடையது அல்ல.

May the Lord help us in talking good decision for His glory and benifitial for His kingdom.

செலின்/Selin