கிறிஸ்துமஸ் ருசிகர தகவல்கள்!

கிறிஸ்துமஸ் ருசிகர தகவல்கள்!

* சாண்டா கிளாஸின் வண்டியை, ஒன்பது கலை மான்கள் இழுத்துச் செல்லும்

* ஜெர்மனி நாட்டில், முதன் முதலில் கிறிஸ்தவ மரத்தை அறிமுகப்படுத்தியவர், மார்ட்டின் லுாதர். இதன் பின்னரே மற்ற ஐரோப்பிய நாடுகளில் பரவியது

* கிறிஸ்துமசின் நாயகர், சாண்டா கிளாஸ் தாத்தா. அவரை எங்கும் எதிலும் காணலாம். கிரீஸ் நாட்டில், தண்ணீருக்குள் மூச்சு விட ஏதுவாய், ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் நுழைந்து, கடல் வாழ் உயிரினங்களுக்கு பரிசளிப்பார், சாண்டா கிளாஸ்

* ஹங்கேரியின் தலைநகரம் புடாபெஸ்ட் நகரில், சாண்டா கிளாஸ்களிடையே ஓட்டப்பந்தயம் போட்டி நடைபெறும்

* ஜெர்மனியின் பெர்லின் நகரில், சாண்டா கிளாஸ்கள் பைக்கில் பயணித்து, குழந்தைகளுக்கு அன்பளிப்புகளை வழங்குவர்

* இத்தாலியின் ப்ளாரன்ஸ் நகரில், சாண்டா கிளாஸ்கள், கால்பந்து விளையாட்டிலும் பங்கேற்று அசத்துவர்

* பிரிட்டனின், ‘வே மவுத்’ நகரில், பால், பழம், முட்டை, மாவு கலந்து உருவான பதார்த்தமான, ‘கிறிஸ்துமஸ் புட்டிங்’ போல் ஒருவர் வேடமணிந்து ஓட, அவரை, சாண்டா கிளாஸ் வேடம் புனைந்த மற்றவர்கள் துரத்தி பிடிப்பர்.

— ஜோல்னாபையன்