கிறிஸ்துமஸ் மரம் (CHRISTMAS TREE)

ஜோஸ்லின் ஜெனிக்ஸ், முஞ்சிறை

கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் முதல் முதலாக மரத்தைப் பயன்படுத்தியது போலிப்பஸ் என்ற மாணவன். கி.பி 700 ல் தனது வறண்டு போன வாழ்வைப் பசுமையாக மாற்ற ஒரு இரட்சகர் பிறந்திருக்கிறார் என்பதின் அடையாளமாக பசுமையான மரங்களை தன் வீட்டில் வைத்து கிறிஸ்துமஸை கொண்டாடினார். இதுதான் ‘CHRISTMAS TREE’ – யோட பின்னணி.

அடுத்து நாம் பார்க்க இருப்பது கிறிஸ்துமஸ் மரத்தை யார் முதலில் அலங்கரித்தது என்று பார்ப்போம். கி.பி. 1500 ல் நடந்த கிறிஸ்துமஸ் நாட்களில் ஜெர்மனியை சார்ந்த மார்டின்லுத்தர் தனது வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது கிறிஸ்துமஸ் மரத்தின் இடையில் தெரிந்த நட்சதிரங்களை (Stars) ரசித்துக் கொண்டேசென்றார். வீட்டில் சென்றுதன் அனுபவத்தை அனைவரிடமும் கூறினார். தனது வீட்டில் கிறிஸ்துமஸ் மரம் இல்லாததால் பக்கத்து தெருவில் சென்று ஒருகிறிஸ்துமஸ் மரத்தை வெட்டி கொண்டுவந்தார். அதன் கிளைகளில் பல ஸ்டார்களை தொங்கவிட்டார். வெளிச்சமாக இருக்க அந்த ஸ்டார்களை சுற்றி மெழுகுவர்த்திகளைத் தொங்கவிட்டார். இதுதான் முதல் கிறிஸ்துமஸ் மர அலங்கரிப்பு. இது காலப்போக்கில் ஜெர்மனி முழுவதும் பரவியது. பின்னர் உலகம் முழுவதும் பரவியது.

நன்றி: விதைகள் (டிசம்பர் 2020)