பின்பு அவர்கள் ஏலிமுக்கு வந்தார்கள்;
அங்கே பன்னிரண்டு நீரூற்றுகளும்
எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது;
அங்கே தண்ணீர் அருகே
பாளயமிறங்கினார்கள்
(யாத்.15:27)

வசந்த காலங்கள் வந்து
போவதுபோல
எந்தச் சூழலிலும் வருடங்கள்
திரும்பி வருவதில்லை.

வரலாறு வேண்டுமானால்
தனது ஏடுகளில் 2021 – ஐ
பத்திரப்படுத்தி முத்திரையிட்டு
மூடிவைத்திருக்கலாம்


நீங்கள் எத்தனை கோடி
கொடுத்தாலும் 2021 -ம் வருடம்
திரும்பி வரவே வராது.
இனி அவ்வளவுதான்
தரையில் ஊற்றிய தண்ணீரைப் போல
திரும்ப அள்ளியெடுக்க முடியாது .

மனித மனங்களிலும் நினைவுகளிலும்
அது ஒருவேளை வந்து போகலாம்
அல்லது தேங்கி நிற்கலாம்.
திரும்ப திரும்ப வரலாம்


ஆனால் வருடங்களுக்குள் மறைந்து
வாழ்ந்த மாதங்களின் பெயர்கள் மட்டும்
திரும்பத் திரும்ப வந்து போகும்.

மாராவைக் கடந்து வந்தால்தான்
ஏலிமின் ஆசீர்வாதங்களை
அனுபவிக்க முடியும்.
பன்னிரண்டு நீரூற்றுகள் அங்கே உண்டு.


இஸ்ரவேலர் மாராவைக் கசப்பாகக் கடக்கவில்லை.
மாறாக மதுரமாகத்தான் கடந்து சென்றார்கள்.

ஆண்டவர் மோசேக்குக் காட்டிய மரம்
கசப்பான தண்ணீரை மதுரமாக மாற்றிற்று.
உன் கசப்பான வாழ்க்கையை மதுரமாக
மாற்றிய ஆண்டவர் உன்னை அப்படியே
விட்டுவிடவில்லை.


2022 – ம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கச்
செய்துள்ளார்.அதுமட்டுமல்ல.
உன்னை ஏலிமின் பன்னிரண்டு மாதங்களுக்குள்ளும்
கொண்டுசெல்லப்போகிறார்.


ஒவ்வொரு மாதமும் உனக்குச் செழிப்புத்தான்
கர்த்தருடைய ஆசீர்வாதத்தின் ஊற்றுக்கண்கள்
ஆண்டு முழுவதும் உனக்குத் திறக்கப்படும்.

ஊற்றெடுத்தால் சாதாரணமாய் அடைக்க
முடியாது. தடைசெய்யவும் முடியாது.
மேரிபாவின் தண்ணீர்போல நன்மையான
ஈவுகள் பூரணமான வரங்கள் புறத்திலிருந்து
உண்டாகி சோதிகளின் பிதாவிடமிருந்து
பொங்கிப் பொங்கிவரும் (யாக்கோபு 1:17)

வனாந்திரமான வாழ்க்கை செழிக்கும்.
ஏலிம் என்றால் பேரீச்சமரத் தோப்பு என்று பொருள்.

எழுபது பேரீச்ச மரங்கள் அங்கு உண்டு.
இது இயேசு உருவாக்கிய சீஷத்துவத்தின்
அடையாளம். வெயிலுக்கு ஒதுங்கும் நிழல்
கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் விருந்து
பெரியதொரு பாலைவனச் சோலை.

அங்கே உணவிற்குப் பஞ்சமில்லை
தண்ணீரும் குறைவுபடாது
அமைதி, அமைதி
எங்கும் நிம்மதி
ஓய்வு எடுத்துக்கொள்ள வாய்ப்பு அதிகம்


அனைத்தும் அங்கே உண்டு
சீஷத்துவத்தின் சந்தோஷம் சமாதானம்
நிறைவாகவே உண்டு.

ஏலிமின் வாழ்க்கை மின்சாரத்தையோ
ஜெனெரேட்டரையோ நம்பிய
வாழ்க்கை அல்ல.

ஏலிம் என்றால் பேரீச்சமரத் தோப்பு என்று பொருள்.
எழுபது பேரீச்ச மரங்கள் அங்கு உண்டு.
இது இயேசு உருவாக்கிய சீஷத்துவத்தின் அடையாளம்.

வெயிலுக்கு ஒதுங்கும் நிழல்
கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் விருந்து
பெரியதொரு பாலைவனச் சோலை.
அங்கே உணவிற்குப் பஞ்சமில்லை
தண்ணீரும் குறைவுபடாது
அமைதி, அமைதி
எங்கும் நிம்மதி
ஓய்வு எடுத்துக்கொள்ள வாய்ப்பு அதிகம்
அனைத்தும் அங்கே உண்டு


சீஷத்துவத்தின் சந்தோஷம் சமாதானம்
நிறைவாகவே உண்டு.
ஏலிமின் வாழ்க்கை மின்சாரத்தையோ
ஜெனெரேட்டரையோ நம்பியவாழ்க்கை அல்ல.

அது ஒரு இனிமையான
இனிப்பான வாழ்க்கை. இறை வாக்குகள்
நிறைந்த வாழ்க்கை.
ஏலிம் என்பது விசுவாசப் பறவைகளின்

சரணாலயம் என்றும் சொல்லலாம்.

நீங்கள் எந்த தேசத்திலிருந்து
இதை வாசித்துக்கொண்டிருந்தாலும்
இந்தப் புதிய ஆண்டில்
ஏலிமில் பாளையம் இறங்குங்கள்.


ஏலிமில் காணப்படும்
கனிதரும் மரத்தை
கானலின் கடுமை பாதிக்காது.
நீயும் கனிதரும் மரமாக மாறும் வாய்ப்பு
இந்த ஆண்டு உனக்கு உண்டு.
வெயில் அடித்தாலும் பெயரிடப்பட்ட
புயல் தீவிரித்து வந்து மோதினாலும்

பேரீச்ச மரங்கள் எளிதில் சாயாது.

நீயும் அப்படிதான். உன்னை யாரும்
எளிதில் சாய்த்துவிட முடியாது.

பக்குவப்பட்ட இனிய சுவையுள்ள உடலுக்கு
வலுவூட்டும் கனிகள் உண்டு.
ஏறி வந்த ஏலிமில் உடல் நலத்திற்கு
பாதிப்பில்லை. மனநல மருத்துவருக்கு
அங்கே வேலை இல்லை.
ஆண்டுக் கணக்கில் சேமிக்கலாம்.
INCOME TAX ஏதும் கிடையாது


இந்த வருடம் நீ நன்மையானவைகளைச்
சேமிக்கும் வருடம். மகிழ்ச்சியின் ஊற்று
ஓடிக்கொண்டே இருக்கும் ஆண்டு இதுதான்.
மரத்தின் கனிகளும் வந்துகொண்டே இருக்கும்.
வருடம் இதுதான். சுனாமிக்கும் சூறாவளிக்கும்
பயமில்லை.

அஸ்திபாரங்கள் நிர்மூலமாக வாய்ப்பே இல்லை.
இரட்சிப்பு போஷிப்பு பாதுகாப்பு
என்றென்றைக்கும் உயர்வு
இவைகளை உள்ளடக்கிய வருடத்திற்குள்ளே
நுழைந்திருக்கிறாய் என்பதை நினைவில் கொள்

ஊற்றுநீர் என்றும் புதிதாகவே இருக்கும்.
உன் வளர்ச்சியும் வாழ்வும் இந்த ஆண்டில்
புத்தம் புதிதாகவே தொடரும்
விசுவாச வார்த்தைகளை விதைத்து

நம்பிக்கை நாற்றை நட்டு
விளைச்சலை பெருக்கிக்கொள்ள வேண்டியது

உன்னுடைய வேலை
விளையச்செய்கிறவர் தேவனே.


ஏலிம் என்பது சபைக்கு
அடையாளம்.


சபை உன் வாழ்வோடு
இணைந்த ஒன்றாகும்.
ஊற்று தண்ணீர் என்றைக்குமே
பரிசுத்தமானது
சபை உன் வாழ்க்கையைத்
தூய்மைப்படுத்தும்.
உன் வாழ்க்கைப் பயணத்திற்கு
இங்கு அஸ்திவாரம்
அல்லது அடித்தளம்
அமைக்கப்படும்.

எனவேதான் எபிரெய
நிருபத்தை ஆக்கியோன்
அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம்
ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து
சபை கூடிவருதலைச்
சிலர் விட்டுவிடுகிறது போல
நாமும் விட்டுவிடாமல்
ஒருவருக்கொருவர்
புத்திசொல்லக்கடவோம்
(எபிரெயர் 10:24,25)
என்று எழுதிவைத்துள்ளார்போலும்.

கர்த்தர் தம்முடைய நியமத்தையும்
நியாயத்தையும்
கட்டளையிட்ட பின்னரே
ஏலிம் தென்படுகிறது
என்பதை மனதில் கொள்ளுங்கள்.
கர்த்தருடைய

சத்தம் கேட்டபின்பு
நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்
என்ற வாக்குத்தத்தம்
கிடைத்தபின்புதான் ஏலிம் காணப்படுகிறது
என்பதை மறக்க வேண்டாம்.

கர்த்தர் தரும் வாக்குத்தத்ததோடு
இணைந்த சுகத்தோடு
இந்த ஆண்டில் பிரவேசித்துள்ளீர்கள்
இந்த ஆண்டில் பன்னிரண்டு நீரூற்றுகளிலும்

தெளிதேன் போன்ற தேவனுடைய வார்த்தை
என்கிற ஜீவதண்ணீரை அள்ளிப் பருகுங்கள்

பூக்களை காயப்படுத்தாமல்
வீசும் தென்றல் காற்றைப் போல
புறப்பட்டுச் செல்லுங்கள்


வருஷத்தை நன்மையால்
முடிசூட்டுகிறவரும்
பாதைகளை நெய்யாய்ப்
பொழியச் செய்கிறவரும்
உங்களுக்கு முன்னே போகிறார்.
அல்லேலூயா.

பின்பு, பளிங்கைப் போல்
தெளிவான ஜீவதண்ணீருள்ள
சுத்தமான நதி தேவனும்
ஆட்டுக்குட்டியானவரும்
இருக்கிற சிங்காசனத்திலிருந்து
புறப்பட்டுவருகிறதை
எனக்கு காண்பித்தான்.


நகரத்து வீதியின்
மத்தியிலும் நதியின்
இக்கரையிலும்
பன்னிரண்டு விதமான
கனிகளைத் தரும்
ஜீவவிருட்சம் இருந்தது
அது மாதந்தோறும் தன்
கனியைக் கொடுக்கும்
அந்த விருட்சத்தின் இலைகள்
ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு
ஏதுவானவைகள்
(வெளி 22:1,2).

எழுதியவர்:
பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால்

===========================

தொகுப்பு:
பாஸ்டர் ஜே.இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
இயக்குனர் – இலக்கிய துறை tcnmedia.in