பிரசங்க குறிப்பு.

அவர் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் அந்த பரிசுத்த ஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார். தீத்து : 3 : 7

தேவன் நமக்கு பரிசுத்த ஆவியை வாக்கு செய்திருக்கிறார் அதோடு அதை பெற்றுக்கொள்ள நிபந்தனையும் செய்திருக்கிறார். அந்த நிபந்தனைகளை சிந்திக்கலாம் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்வதற்கான நிபந்தனைகளை இதில் கவனிக்கலாம்.

  1. பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ள ஜெபிக்க வேண்டும் – லூக்கா : 11 : 13
  2. பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ள ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டும் – அப் : 2 : 38
  3. பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ள விரும்பவேண்டும் தாகமாக இருக்க வேண்டும் – யோவா : 7 : 38
  4. பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ள விசுவாசமாக இருக்க வேண்டும் – யோவா : 7 : 39
  5. பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள கீழ்படிந்தவர்களாக இருக்க வேண்டும் – அப் : 5 : 32
  6. பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள காத்திருக்கவேண்டும்-லூக்கா : 24 : 49
  7. பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள அபிஷேகிக்கப்பட்ட பரிசுத்தவான்கள் தலையின்மேல் கைவைக்கும்போது – அப் : 8 : 19
  8. பரிசுத்த ஆவியைப்பெற்றுக்கொள்ள ஆவிக்குரிய செய்திகளை கவனிக்கும் போது அப் : 11 : 15 , 16 , 17, மாற்கு : 1 : 8, 1 தெச : 4 : 8

பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வதற்குரிய நிபந்தனைகளை
கவனித்தோம். நீங்களும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டு வாழ்வீர்களாக.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur.