லூக்கா 1:40 “சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள்.”
1) சகரியாவின் வீடு இருப்பதோ மலைப் பிரதேசம் ஆகையால் மரியாள் கழுதையில் சென்றிருக்க வேண்டும் அல்லது நடந்து சென்றிருக்க வேண்டும். சென்ற பாதையானது சாதாரணமானது அல்ல கரடுமுரடானது. கொடிய விலங்குகள் உள்ளதுமான ஒரு பாதை. ஆகையால் 13 அல்லது 15 வயது நிரம்பிய மரியாள் ஓட்டமும் நடையுமாக சகரியாவின் வீட்டை சென்றடைய கிட்டத்தட்ட மூன்று நாட்கள் ஆகியிருக்கலாம்.
2) தமிழர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது வணக்கம் சொல்வார்கள். அது போல யூதர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கட்டிப் பிடித்து கன்னத்தோடு கன்னம் சேர்த்து ஷாலோம் என்று சொல்வார்கள். ஷாலோம் என்பது சமாதானம். எல்லாவிதமான ஆசீர்வாதமும் கிடைப்பதனால் சமாதானம் ஏற்படும், ஆகையால் ஷாலோம் என்பது பல பொருள் உள்ளடக்கிய ஒரு வார்த்தை.
3) எலிசபெத்தை வாழ்த்த சென்ற மரியாளின் மனநிலை எப்படி இருந்திருக்கும்?. மரியாள் நடந்து வந்த பாதையிலெல்லாம் எலிசபெத் கர்ப்பவதி என்பதை பார்த்ததும் நம்மால் கண்டுபிடிக்க முடியுமா? அல்லது கேட்க வேண்டுமா? என்கிறதான மனநிலை மரியாளுக்கு காணப்பட்டிருக்கும்.
நம் அன்றாட வாழ்வில் இந்த வசனத்தை எவ்வாறு பயன்படுத்துவது :
1) கிறிஸ்தவர்களாகிய நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது நம்முடைய வார்த்தைகள் அவர்களை வாழ்த்துகிறதா? அல்லது அவர்களை விழத்தள்ளுகிறதா?. இன்றைய நாட்களில் ஒருவரை ஒருவர் குற்றப்படுத்தும் வார்த்தைகளை பேசுகிறதை காண முடிகிறது.
2) லூக்கா 10:5 ல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, ஒரு வீட்டில் பிரவேசிக்கிற போது இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள் என்கிறார். ஆகையால் நாம் எங்கு சென்றாலும் அந்த வீட்டிற்கு அல்லது அந்த நபருக்கு சமாதானத்தை கொடுக்க கூடியவர்களாக நாம் காணப்படவேண்டும்.
3) மரியாள் எலிசபெத்தை காணச் செல்லும் பாதைகளில் அநேக மாறுபாடான கருத்துக்கள் இருதயத்திலே காணப்பட்டாலும் எலிசபெத்தை கண்டதும் அவரை வாழ்த்துகிறார்.
4) நீங்கள் எந்த வீட்டிற்கு சென்றாலும் அங்கே சமாதானத்தை கொடுக்கிறீர்களா? அல்லது சண்டையை உண்டு பண்ணுகிறீர்களா? சந்தேகத்தை கொடுக்கிறீர்களா? அல்லது குழப்பத்தை கொண்டு வருகிறவர்களாக காணப்படுகிறீர்களா?.
5) இன்றைக்கு அநேக ஊழியர்கள் சந்திக்கும் போது, குழப்பத்தையும் பயத்தையும் உண்டு பண்ணுகிறவர்களாக காணப்படுகிறார்கள். ஆனால் தேவனோ சமாதானத்தை கொடுக்கும்படி சொல்லியிருக்கிறார். ஆகையால் நாம் ஒருவரை ஒருவர் சமாதானத்தோடு வாழ்த்துவோமாக.
ஜெபம்
நல்ல பிதாவே!, நாங்கள் ஒவ்வொருவரும் எங்கே யாரை சந்தித்தாலும் அவர்களுக்கு தேவ சமாதானத்தை கொடுக்கிறவர்களாய், எங்கள் ஒவ்வொருவருடைய இருதயத்திலும் தேவ சமாதானம் ஆளுகை செய்யட்டும் என்று இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் ஆசீர்வதித்து ஜெபிக்கிறோம், ஜீவனுள்ள வல்ல பிதாவே, ஆமென்.
Luke 1:40 “and entered the house of Zacharias and greeted Elizabeth.”
1) Zacharias’ house was in a mountain area. In those days there was no means of transport like today. They need to travel either on a donkey or by walk and it may take even three to four days to reach the destination.
2) All through the peak hills, Mary needs to walk crossing all wild animals on the way. There should have been definitely difficulties while passing through these hill areas and Mary would have faced it.
3) As soon as she reached, she greeted Elizabeth. In Jewish custom, when two people meet and greet they hug each other and say Shalom which means “Peace”.
4) Mary also hugged Elizabeth and may said Shalom to each other. Before this meet and greet, Mary would have had many thoughts in her mind concerning Elizabeth who is in her sixth month.
How to apply this verse in our daily life :
1) Let us analyse today, When we meet and greet each other whether our words are encouraging and lifting one another or discouraging them. Today Christians are doing sin mostly through their words.
2) We can observe that instead of encouraging others we tend to only point out their mistakes and discourage them. Not only that even if we come together to meet and greet, we unnecessarily gossip about others.
3) In Luke 10:5 we study that when we enter a house, first we need to say “Peace to this house”.
4) In today’s world there are many servants of God who bring confusions and fear among people. But God is teaching us to give Godly peace to others. Can we offer peace to others and encourage them when we meet them?
Prayer
Dear Heavenly Father, we thank You for this beautiful day Lord. Father, when we meet anyone anywhere, help us to give godly peace to them. Father, let the godly peace rule over our hearts. In Lord Jesus Christ’ Name we pray. Amen. May God bless you.
WCF DD (World Christian Fellowship Daily Devotions)