
பெரு நிறுவன கோட்பாடு சபைக்கு பொருந்துமா? Corporate concept in the Church?

Corporate concept in the Church????
▪️ பெரு நிறுவன கோட்பாடு (corporate) உலகத்தைப் பொருத்த மட்டில் வணிகம், விவசாயம், அரசியல் என்று அனைத்து துறைகளிலும் வலுக்கட்டாயமாக நுழைந்துவிட்டது.
▪️இனி இதை காலத்தின் கட்டாயம் என சகித்துக்கொள்வதா? எதிர்த்துப்போராடி துரத்திவிடுவதா? என்ற கருத்துக்கள் பொதுத்தளங்களில் பலமாக விவாதிக்கப்படுகிறது.
▪️ பெரு நிறுவனம், ஏகபோகம் என்ற சொல்லாடல் குறித்த பேச்சு நமக்கு ஏன் என சபை ஒதுங்க முடியாது.
▪️ஏனென்றால் வெளி உலகமக்கள் நம்மில் சிலரை கார்ப்பரேட் சாமியார் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
▪️எனவே சபை…. இந்த நூற்றாண்டின் நிர்பந்த மான, பெரு நிறுவன கோட்பாடு என்றால் என்ன? எப்படி அதை எதிர் கொள்ள வேண்டும் என்று அறிந்து கொள்வது நல்லது.
▪️ஒரு ஊரில் நான்கு மூலைகளிலும் சிறிய பெட்டிக்கடைகள் இருந்த நிலை மாறி அல்லது அழிக்கப்பட்டு , நகரின் மையத்தில் மால் உண்டாவது என்பது , பெரு நிறுவனத்திற்கு எளிய எடுத்துக்காட்டு..
▪️பொது ஜனம் எதை விரும்புகிறது, யோசித்துப்பாருங்கள்..மாலைத் (Mall)தானே!
▪️எனவே வேறுவழியின்றி சிறு வியாபாரிகள்,. …. இன்றய நாளில் விவசாயிகள்..வழக்காடி சில காலங்களில் அமைதியாகி விடுவார்கள்…
▪️வரலாற்றின் தவிர்க்க முடியாத காலச்சக்கரச் சுழற்சி இது.
▪️கார்பரேட் தத்துவம் சில காலம் ஜெயிக்கும்…எதிர்த்துப்போராடும் மக்கள் வேறு வழியின்றி ஏற்றுக்கொள்வார்கள், அல்லது ஏற்றுக்கொள்ள வைக்கப்படுவார்கள்.
▪️பின்பு பிரெஞ்சுப் புரட்சி நடக்கும். கார்பரேட் தத்துவம் தற்காலிகமாக தோற்கடிக்கப்படும் .மீண்டும் வேறு வேஷத்தில், வேறு ஆட்சி முறையில் அது மீண்டும் வரும்.அப்படிச் சுழலும் காலச் சக்கரத்தில் நாம் வாழும் இந்நூற்றாண்டு, விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பெரு நிறுவனத்திற்கான காலம் ஆகும்.
▪️உலகமக்கள் எத்தனைமுறை தண்டிக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் தவறான இஸங்களை அமல்படுத்த முயற்சித்துக் கொண்டேதான் இருப்பார்கள்( சங் 73:3-20)
▪️ பெரு நிறுவனமே தவறு என்று நினைத்துவிடாதீர்கள். ( உங்களுக்கே இப்போது பெட்டிக் கடை பிடிப்பதில்லையே) எனவே பெரு நிறுவன வாழ்க்கை கூட வாழப்படிப்பதே புத்திசாலித்தனம்.
▪️ பெரு நிருவனங்கள் எப்போது ஆபத்தாக மாறும்.? அதன் தலைவர்கள் ஏகபோக உரிமையை எடுக்கும் போதே ஆபத்தாக முடியும் ( அதாவது இந்த ஊரில் நாங்கள் மட்டுமே வியாபாரம் செய்யவேண்டும் )
▪️இந்த படிப்பினையிலிருந்து சபை படிக்க வேண்டியது என்ன?
▪️மோசே லட்சக்கணக்கான மக்களை நடத்தியது தவறல்ல ( corporate church )
மோசேக்கு மட்டுமே தீர்க்கதரிசனம் சொல்லும் ஏகபோக உரிமை இருக்கிறது என்று சொன்ன அவரது அடிபொடிகளிடம் ( யோசுவா) சமஸ்த இஸ்ரவேலும் சொல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று கூறும் ஜனநாயகவாதி யான மோசேக்கள் இன்று எழும்ப வேண்டும்.
▪️தங்கள் தலைவர் (hero) இயேசுவிடம் பிராது செய்த தொண்டர்களிடம், அவர்களும் நமக்கு எதிரி இல்லை, நமது குழுவைச் சாராத அவர்களும் பிசாசுகளை த் துரத்தட்டும் ஊழியம் செய்யட்டுமே என்ற இயேசு கிறிஸ்துவின் பெருந்தன்மையை படித்துக்கொண்ட தலைவர்கள் எழும்ப வேண்டும்.
▪️உலகம், பெரு நிறுவனத்தை ஏகபோக சிந்தையோடு நடத்தி ,அதாவது தான் வாழ பிறரை அழித்து சில காலம் ஜெயிக்கும், பின்பு வெகு ஜன எதிர்ப்பினால் தோற்றுப்போகும் .வரலாற்றின் பக்கங்கள் சொல்லிக்கொடுக்கும் பாடம் இதுதான்.
▪️சபையும் தண்டனைகளை வாங்கித்தான் இப்பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டுமா??
▪️வேதத்திலிருந்தே கற்றுக்கொள்ளாதா??
▪️ பெரு நிறுவன கோட்பாடு நம் தேவனுக்குப் பிரியமானது இல்லை என்று பாபேல் சம்பவமம் , எருசலேம் சபை சிதறடிக்கப்பட்ட சம்பவம் சொல்லவில்லையா?
▪️நான் மட்டும் என்பது லூசிபரின் கோட்பாடு,
நாம் என்பதே திரித்துவ தேவனின் கோட்பாடு.
▪️வியாபாரம்,விவசாயம், அரசியலில் பெரு நிறுவனங்கள் எப்படி உருவாகிறது??
▪️ஒரு செயற்கைத்தலைவர் ஒருவர் பணத்தினாலும் , ஊடகத்தினாலும், ஜால்ரா தொண்டர்களாலும் உருவாக்கப்படுவதினால் அல்லவா?
▪️அதே கார்பரேட் யுக்தியை சபை பின்பற்றலாகுமா?
▪️செயற்கைத் தலைவர் சீக்கிரத்தில் பெரும் ஏகபோக உரிமையை பெற்று , அதைத் தவறாக பயன் படுத்தி தனது நிறுவனத்தை அழிவின் விழிம்பிற்கு கொண்டுவருவார்
இதுதான் உலக வரலாறு….
▪️சபை இன்றய பெரு நிறுவனக் கோட்பாடினால் கிடைத்திருக்கும் தற்காலிக நன்மைகளை அனுபவிப்பது கூட தவறில்லை. ஆனால் உலகத்தனமான வழிமுறையான , நான் மட்டும் தான் இருக்கவேண்டும்..போட்டியாளர்களே இருக்கக்கூடாது, எதிர்கருத்தே இருக்க கூடாது … போன்றவற்றை பின்பற்றுவது தகுமா?.…..
▪️இச்செய்தி ஏதோ ஒரு பெரு நிறுவனத்தையோ, தலைவர்களையோ மனதில் வைத்து எழுதப்பட்டதல்ல.
▪️என் குடும்பத்தை நடத்துவதில், என் சிறிய சபை நடத்துவதில் பெரு நிறுவனத்தை நடத்திச் செல்லும் தவறான தலைவன் போல் , ஏகாபத்தியவாதியாக மாறிவிடக்கூடாது என்று கருதி எனக்கு பல வருடங்கள், பல சம்பவங்கள் மூலமாய் கலை தேவ தாசனாகிய எனக்கு கர்த்தர் போதித்த பாடங்களின் தொகுப்புதான் இது….