ஆபத்துக்கால ஜெபக்குறிப்பு – தலிபான்கள் உறுதி

ஆபத்துக்கால ஜெபக்குறிப்பு – தலிபான்கள் உறுதி

ஆபத்துக்கால ஜெபக்குறிப்பு

💥கடந்த 20 ஆண்டுகளாக, தலிபான்கள் மற்றும் அமெரிக்காவுக்கிடையே நடைபெற்றுவந்த போர் முடிவுக்கு வந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளனர். “கடந்த ஆட்சியைப் போல் இல்லாமல், பெண்களின் உரிமை நிலைநாட்டப்பட்டு அவர்களுக்கு மதிப்பளிக்கப்படும்” என தலிபான்கள் உறுதி தெரிவித்துள்ளனர். அதேபோல், “எதிரிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும்” எனவும் கூறினர். ஆனால், உறுதி அளித்ததற்கு நேர்மாறாக தலிபான்கள் நடந்து கொள்வதாக தொடர் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகிறது.

🙏 அமைதியான ஆட்சியை கொடுப்போம் என்று பொய் வாக்குறுதிகளை அறிவித்து மக்களை கொன்று குவித்து வரும் தலிபான்களின் தீவிரவாத செயல்கள் விரைவில் முறியடிக்கப்படவும், தங்களின் பேச்சைக் கேட்டு நடக்காதவர்கள் மீது தலிபான்கள் ஷரியத் சட்டத்தின்படி தண்டனை வழங்கி அநேகரை கொன்று வருவதால், ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் சமாதானத்தை நிலைநாட்டும் வகையில் ஜனநாயக ஆட்சி விரைவாக அமைக்கப்பட கர்த்தர் சமூகத்தில் மன்றாடி ஜெபியுங்கள்

🙏 எதிரிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்துவிட்டு, அதற்கு நேர்மாறாக மக்களை அழிக்கும் செயலில் ஈடுபடும் நிலைமாறிடவும், குறிப்பாக, போரின்போது அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளுக்கு உதவியவர்களை தலிபான்கள் வீடு வீடாகத் தேடி அவர்களை கொலை செய்வது மட்டும் அல்லாமல் பெண்களைக் கொன்று, அவர்களின் உடல்களை நாய்களுக்கு உணவாக வீசி வருகிற அவல நிலையை கண்ணீர்விட்டு கதறி, தற்போது தலிபனின் பிடியில் சிக்கி தவிக்கும் சாமானிய மக்கள் அவர்களின் கோர செயல்களுக்கு இறையாகாதவாறு அனைவரையும் கர்த்தர் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து மீட்டுக்கொள்ள ஜெபியுங்கள்

🙏 ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான் தீவிரவாதிகள் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகிற நிலையில், இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான சரக்கு போக்குவரத்தை திடீரென நிறுத்தி வைத்துள்ளதால், ஏற்கனவே நடைபெற்றுவரும் போரினால் மோசமான விளைவுகளையும் பாதிப்புகளையும் சந்தித்த மக்கள் இறக்குமதிக்கு போடப்பட்டுள்ள தடை காரணமாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் கிடைக்கப் பெறாமல் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகமலிருக்கவும், போரில் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்த மக்களின் அனைத்து அத்தியாவசிய தேவைகள் சந்திக்கப்பட கர்த்தர் கிருபை பாராட்ட ஜெபியுங்கள்

🙏 ஆப்கானிஸ்தானை தாலிபான் தீவிரவாதப் படையினர் கைப்பற்றிய நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கானிலிருந்து வெளியேறுவதற்காக காபூல் ஏர்போர்ட்டிற்கு வந்து குவிந்துக் கொண்டிருக்கின்ற நிலையில், ஆப்கானில் இருந்து தப்பிச் செல்ல முடியாதவர்கள், தங்களின் குழந்தைகளாவது உயிர் பிழைக்கட்டும் என அமெரிக்க ராணுவத்தினரிடமும், தப்பிச்செல்லும் நபர்களிடமும் தங்களின் குழந்தைகளை பெற்றோர்கள் கொடுத்து அனுப்புகின்ற துர்பாக்கிய நிலையில் தன் தாயை விட்டு பிரிவதால் குழந்தைகள் கதறுகிற வேதனையான சூழல்களை கர்த்தரின் பாதத்தில் வைத்து, மிகவும் துயரமான நிலையில் இருக்கும் ஆப்கானிஸ்தான் தேசம் தீவிரவாதிகளின் கொடுங் கரங்களிலிருந்து விரைவாக மீட்கப்பட கர்த்தரின் பாதத்தில் மன்றாடி ஜெபியுங்கள்

🙏 காபூல் ஏர்போர்ட்டை சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டுள்ள நிலையில், பதற்றமடைந்த அங்கிருந்த தாய்மார்கள் தங்கள் குழந்தைகளையாவது காப்பாற்ற வேண்டும் என வேலிக்கு அந்தப்புறம் இருக்கும் ராணுவ வீரர்களிடம் தங்கள் குழந்தைகளை காப்பாற்றுமாறு கெஞ்சி
தங்கள் குழந்தைகளை முள்வேலியை தாண்டி ராணுவ வீரர்களிடம் வீசுகின்ற நிலையில் ஒரு சில குழந்தைகள் பெற்றோர்களின் கண்களுக்கு முன்பாகவே முள்வேலிக்குள்ளேயே விழுந்தது இறக்கும் நிலையை உணர்ந்து தாலிபான்களிடம் சிக்கி மரண பயத்தால் தவிக்கும் மக்களைக் காப்பாற்ற உலகநாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட ஜெபியுங்கள்

ஜெப மையம் ஊத்துமலை

9790063500
9488114500

Post Tags: