
உங்கள் சபை விசுவாசிகள் எல்லோரும் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டார்களா?
மேல்வீட்டறையில் 120 பேர் காத்திருந்து பெற்றுக்கொண்டார்களே? பன்னிரெண்டு சீடர்களும் மரியாளும் மற்றவர்களும் பரிசுத்த ஆவியை பெற்று பற்பல மொழிகளில் பேசி ஆச்சரியப்படுத்தினரே?
பேதுருவைப் போல ஓர் அப்போஸ்தலர் எழும்பி பிரகாசித்து ஆவியில் பிரசங்கம் செய்தாரே? மூவாயிரம் பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டு ஞானஸ்நானம் பெற்றார்களே! தேவாலயம் மாற்றம் பெற்றது. ஒரு சாதாரண பிரசங்கம்தான் ஆனால் அதில் அபிஷேகம் இருந்ததால் அப்படி நடந்தது. அபிஷேகம் பெற்றவர்கள் உங்களது திருச்சபையில் தேவாலயத்தில் இருக்கிறார்களா?
சபையில் ஐந்து வகை ஊழியங்கள் உள்ளதா? (எபேசியர் 4)
தீர்க்கதரிசிகள் உள்ளார்களா?
சுவிசேஷகர்கள் உள்ளார்களா?
அப்போஸ்தலர்கள் உள்ளார்களா?
போதகர்கள் உள்ளார்களா?
விசுவாசிகள் சீடர்களாக மாற்றமடைகிறார்களா?
அபிஷேகம் பெறுவதில் ஆர்வமாகமுள்ளார்களா?
அபிஷேகம் பெற்றவர்கள் நிலைத்திருக்கிறார்களா?
தீர்க்கதரிசன ஜெபங்கள் நடக்கிறதா?
மாதத்தில் ஒருநாள் பணிகளை நிறுத்திவைத்து ஜெபத்தில் கர்த்தரின் சத்தத்திற்க்கு காத்திருங்கள். திருச்சபையின் எழுச்சிக்கு இதுவே வழி!
பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,
அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்.
நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்,
அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.
எபேசியர் 4:12-15
Beviston B