
மாவீரன் நெப்போலியனை தெரியும் அவரை உடைத்துப்போட்ட கொடிய நோய்க்கிருமி எதுவென்று தெரியுமா?
நம் அனைவருக்கும் மாவீரன் நெப்போலியனை தெரியும். அவர பார்த்தீங்கன்னா இந்த உலகத்தையே நம் கைக்குள்ளே கொண்டு வரணும் அப்படின்னு நினைச்ச ஒரு மாவீரன்!
பல சாம்ராஜ்ஜியங்களை அழித்து வெற்றிவாகை சூடிய ஒரு மாபெரும் வீரன்!!
கடைசியில் அவர் பிரிட்டிஷ் படையினரிடம் தோற்றுவிட்டார்…
தோற்றுப்போன நெப்போலியனை பிரிட்டன் அரசு ஆப்பிரிக்காவிலுள்ளாஒரு தனி சிறையில் அடைத்து வைத்தது.
அனேக சாம்ராஜ்ஜியங்களை அழித்து மிகப்பெரிய வீரனாக செயல்பட்டு வந்த நெப்போலியன் நான்கு சுவற்றுக்குள் அடைக்கப்பட்டவுடன் மிகவும் மன உளச்சலுக்கு ஆளானார்..
சிறைச்சாலையில் கலக்கத்துடன் ஒருவித குழப்பத்துடன் வாழ்ந்து வருகிறார் நெப்போலியன்..
அப்பொழுது அவரைப் பார்க்க சிறைச்சாலைக்கு ஒரு நண்பர் வருகிறார். அந்த நண்பர் கையில் ஒரு சதுரங்க பெட்டியுடன் வருகிறார்
அந்த சதுரங்க பெட்டியை நெப்போலியனிடம் கொடுத்து உங்களுடைய மன உளைச்சலை இந்தப் பெட்டி நீக்கும் என்று அவரிடம் கொடுக்கிறார்.
ஆனால் நெப்போலியனோ தனக்கு இருந்த மன உளைச்சல் மற்றும் கலக்கத்தினால் அந்த பெட்டியை திறந்து கூட பார்க்கவில்லை!!
கடைசியில் மன உளைச்சலில் துவண்டு துவண்டு இறந்தே போனார் நெப்போலியன்..
பல ஆண்டுகளுக்குப் பின்பு அந்த சதுரங்க பெட்டி நெப்போலியன் பயன்படுத்தியதாக கூறி ஏலத்திற்கு வருகிறது..
அப்போது அந்த சதுரங்க பெட்டியை சோதித்துப் பார்ப்பதற்காக திறக்கும் போது உள்ளே ஒரு துண்டு சீட்டு இருக்கிறது.
அந்த துண்டு சீட்டில் நெப்போலியன் இருந்த சிறையில் இருந்து எப்படி தப்பித்து செல்ல வேண்டும் என்ற வரைப்படம் இருந்ததாம்..
நண்பர்களே, ஒரு வேளை அந்த சதுரங்க பெட்டியை மாவீரன் நெப்போலியன் திறந்து பார்த்திருந்தால் இன்று வரலாறு வேறு மாதிரி இருந்திருக்கும்..
ஆனால் அவருக்குள் இருந்த மன உளைச்சல் அவரை மரணத்திற்கு அழைத்து சென்று விட்டது
அவர் அவ்வளவு பெரிய மாவீரனாக இருந்தாலும் அவருக்குள் இருந்த மன உளைச்சலும் பதற்றமும் அவரை மரணத்திற்கு அழைத்து சென்றது
மன உளைச்சலும் பதற்றமும் நம்மை அழிவுக்கு நேராகத்தான் அழைத்து செல்லும்..
எப்பொழுதுமே எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நாம் பதட்டம் அடையாமல் கர்த்தரை நோக்கி பார்க்கிறவர்களாக இருக்க வேண்டும்
2 சாமுவேல் 22ம் அதிகாரத்தில் தாவீது சொல்லுகிறார் எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று.
ஆம் நம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் நம் தேவனை நோக்கி கூப்பிடும் போது அவர் நமக்கு செவிகொடுப்பார். நம்மை விடுவிப்பார் ஆமென்..
சங்கீதம் 118:5
நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.
நன்றி
ஐசக்.P