
நம்முடைய ஊடகத்தின் வாயிலாக பல்வேறு தகவல்களை உங்களுக்கு கொடுத்துக் கொண்டே இருக்கிறோம் அந்த வகையில் இன்றைக்கு வேதாகம கால பெலிஸ்தியர் கல்லறையை குறித்து நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள போகிறேன். நவீன ஆய்வு குறிப்புகளோடு.
இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிரி அல்லது வில்லன் பெலிஸ்தியர்கள் தான். பெலிஸ்தியர்களுக்கும் இந்த இஸ்ரவேல் ஜனங்களுக்கு அடிக்கடி யுத்தம் நடந்துகொண்டே இருந்தது. இந்த பெலிஸ்தியர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் வரலாற்றுச் சுவடுகளும் ஏராளம் கிடைத்தாலும் அவர்களுடைய கல்லறைகள் மற்றும் அக்கால மனித எலும்புக்கூடுகள் இன்று வரைக்கும் கண்டுபிடிக்கப்படாத ஒரு சூழ்நிலை தான் இருந்து வந்தது. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் இது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர்.

அந்த வகையில் ஒரு மகிழ்ச்சியான தகவல் கிடைத்திருக்கிறது. வேதாகம கால பெலிஸ்தருடைய மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பழங்கால அஸ்குலோன் பகுதிகளில் வெளிப்புற ஆய்வு மேற்கொண்ட போது தான் அங்கு இந்த எலும்புக்கூடுகள் கிடைத்திருக்கிறது. கிட்டத்தட்ட 150 மனித எலும்புகள் கிடைக்கிறது. இந்த செய்தியை நேஷனல் ஜியோகிராபிக் சேனலும் வெளியிட்டது. ஆனால் அவர்கள் வெளியிடும் போது கூடுதல் தகவலாக 150 எலும்புகள் மாத்திரமல்ல சிறியது பெரியது எல்லாம் சேர்ந்து மொத்தம் 211 மனித எலும்புகள் கிடைக்கப் பெற்றிருக்கிறது என்று அவர்கள் வெளியிட்டிருந்தார்கள்.
இதிலே சுவாரசியமான தகவல் என்னவென்றால் ஒருவரை அடக்கம் செய்யும்போது அவர்களின் தாடையின் பகுதியிலும் கால்களின் பக்கத்திலும் ஒரு சின்ன கல் குப்பியில் வாசனை திரவியத்தை வைத்து அவர்கள் அடக்கம் செய்து இருக்கிறார்கள்.
இந்த மனித எலும்புகளை ஆராய்ந்த ஆய்வாளர்கள் இந்த மனிதர்கள் கி-மு பதினோராம் நூற்றாண்டு முதல் எட்டாவது நூற்றாண்டு வரைக்கும் வாழ்ந்தவர்கள் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அப்படியானால் வேதாகம காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும் ஒத்துப்போகிறது. ஆகவே வேதாகம காலங்களில் சொல்லப்பட்ட அந்த பெலிஸ்தர் உடைய மனிதக் கூடுகள் எலும்புகள் இன்றைக்கு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
அதுமாத்திரமல்ல ஒருமுறை இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாகக் இஸ்ரவேலின் தேவனை சிந்தித்தவன் கோலியாத். அந்த கோலியாத் வாழ்ந்த காத் அந்த பகுதியும் இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எருசலேம் பட்டணத்திற்கு அஸ்குலோன் பகுதிக்கும் இடையில் தான் இந்த காத் என்கிற பட்டணம் இருந்திருக்கிறது. அந்த காலத்திலேயே காத் என்பது அது மிகவும் புகழ்பெற்றவர் பட்டணமாக இருந்திருக்கிறது. அது சின்ன கிராமம் இல்ல அந்தப் பட்டணத்திற்கு என்று தனி ராஜாவே இருந்தார் என்று வேதத்தில் வாசிக்கிறோம். அந்த அளவிற்கு புகழ் பெற்ற பட்டணமாகும். வேதாகம சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இடங்கள் அனைத்தும் தொல்பொருள் ஆராய்ச்சிகளால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டு வருகிறது.