முதல் கிறிஸ்துமஸ் செய்தி அறிவீர்களா?

முதல் கிறிஸ்துமஸ் செய்தி அறிவீர்களா?

தேவ தூதன் மூலம் கொடுக்கப்பட்ட முதல் கிறிஸ்துமஸ் செய்தி அறிவீர்களா? ( லூக் 2:9-11)

1) பயப்படாதிருங்கள், என்பது மேய்ப்பர்களின் பயம் நீங்க மட்டும் (லூக் 2:9) கொடுக்கப்பட்ட செய்தியல்ல , கிறிஸ்துவுக்கு முன் இருந்த அனைத்து மத மக்களும் கடவுளைக்குறித்த கொண்டிருந்த மத அடிப்படையிலான பயங்களை அகற்றுவதும்,இன்று வரை மனுஷருக்குள் புதைந்து கிடக்கும் அத்தனை பயங்களை அகற்றுவதும் முதல் கிறிஸ்துமஸ் செய்தியை நம்புவோர் பெறும் பலனாயிருக்கிறது.

2) குறிப்பிட்ட ஜாதியே கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்ட ஜாதி என்றும் மற்றவர்கள் கீழ் ஜாதி , இரட்சிப்பு , வேதம் அவர்களுக்கு இல்லை என்ற மனுஷ தடையை உடைத்தது, எல்லா ஜனத்துக்கும் என்ற திறந்த வாசலைக்கொடுத்தது முதல் கிறிஸ்துமஸ் செய்தி.

3) எல்லாம் சாதகமாயிருக்கும் போது மட்டுமே சந்தோஷமாயிருக்க முடியும் என்பது உலக நிலை.
பாடுகளின் மத்தியிலும் , எந்த ஒரு எதிர் சூழ்நிலையிலும் மகழ்வோடிருக்கும் புதிய தொரு வாழ்வியலை இயேசு கிறிஸ்து கற்றுக்கொடுத்தார். கொரானா இழப்புகளினால் உலகம் துக்கத்தோடு இருக்கையிலும் தேவ சமாதானத்துடனும் மன மகிழ்வுடனும் இருக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதே, சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி என்ற , முதல் கிறிஸ்துமஸ் செய்தியின் நோக்கமாகும்.

அன்பின் கிறிஸ்துமஸ் & புத்தாண்டு வாழ்த்துக்கள்

– கலை தேவதாசன்