சீஷத்துவம்

குரு, ஆசிரியர், தத்துவஞானி, விஞ்ஞானி, எஜமான், ராஜா, அதிகாரி etc போன்ற மதிப்புக்கு உரிய நபர்களின் இருதய விருப்பம் அறிந்து அவர்களை போல செயல்படுபவர்கள் தான் இந்த சீஷத்துவ தன்மை உடையவராக இருப்பார்கள். குருவை போல சீஷன், ஆசிரியரை போன்று மாணவன், தாயை போன்று சேய், நூலை போல சேலை போன்ற பழம் சொற்கள் பெரும்பாலும் சீசத்துவ எதார்த்தைதை நமக்கு காட்டுகிறது.

கிறிஸ்தவ சீஷத்துவம் கிறிஸ்துவில் ஆரம்பிக்கிறது. கிறிஸ்துவை போல மாறும் தன்மையில் தான் சீஷத்துவம் ஆரம்பம் ஆகின்றது. ஆனால் உலக மாதிரி என்பது நம்மை போல பிறரை மாற்றுதல் ஆனால் கிறிஸ்தவ மாதிரி என்பது கிறிஸ்து அவர்கள் என்கிற கோட்பாட்டில் வருவதே. யாரெல்லாம் கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறார்களோ அவர்கள் எல்லாம் சீஷர்களே! இயேசுவின் mantle, passion, commands, legacy, vision போன்றவற்றை தத்ருபமாக செய்ல்படுத்த இயேசு கிறிஸ்துவால் ஏற்படுத்தப் பட்டவர்கள் தான் சீஷர்கள் அவர்கள் அவ்வாறு உருவாக்கப்பட ஏற்படுத்தப் பட்ட மாதிரி தான் சீசத்துவம்!

கிறிஸ்து எப்படி சீடர்களை உருவாக்கினார்?

இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையப்பட ஒருவன் காட்டிக்கொடுக்க வேண்டியதாயிற்று ஏனெனில் இயேசு கிறிஸ்துவும் அவரது சீடர்களும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாமல் ஒரே தோற்றத்தில் சாயலில் இருந்தனர் என்பதே! தொடர்ந்து தம் சாயலில் எப்படி அவர்களை உருவாக்கினார் என்பதை கவனிப்போம்.

A. அழைத்து தெரிந்தெடுத்து சீஷர்களாக மாற்றினார்.

ஆரோனை போன்று அழைக்கப்படாமல் யாரும் சீடனாக முடியாது. அழைப்பில் நான்கு விதங்கள் உண்டு. இயேசு கிறிஸ்து சீடர்களை என் பின்னே வாருங்கள் நான் உங்களை மனுசரை பிடிக்கிறவர்கள் ஆக்குவேன். அதுதான் அழைப்பின் சாராம்சம். சீசனாகி மனிதரை பிடித்து மறுபடியும் அவர்களை சீசனாக மாற்ற வேண்டும் என்பதே அழைப்பின் பிரதான நோக்கம்.

நான்குவிதமான அழைப்பு

1. பொதுவான அழைப்பு. – எல்லாரும் எனாண்டை வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். என் பின்னே வாருங்கள் என்று பொதுவாக அழைத்தல்.

2. குறிப்பிட்ட அழைப்பு அவருக்கு செவி கொடுத்து அவர் பின்னே வரும் போது குறிப்பிட்ட வேலையை செய்ய அனுப்பி விடுதல். நீங்கள் போய் உங்கள் சகோதரர்களுக்கு சொல்லுங்கள் தான் சொன்ன படி உயிர்த்தெழுந்தார். 70 பேரை அழைத்து ஜெருசலேம் முழுவதும் தேவனுடைய ராஜ்ஜியத்தை குறித்து அனுப்பியது போன்ற குறிப்பிட்ட வேலைகளை செய்ய அழைத்தல்.

3. விசேஷ அழைப்பு எப்போதும் அவரோடு கூட இருக்கவும், அவரை குறித்து பேச அதிகாரம் பெரும் அழைப்பு. அதிலும் மூன்று பேரை விசேஷமாக தம்மோடு நெருங்கிய வட்டத்தில் வைத்து உருவாக்கினார்.

4. உன்னத அழைப்பு என்றும், எப்பொழுதும் அவரோடு கூட இருந்து கடைசிவரை அவரை நேசித்து, அவரை விட்டு பின்வாங்காமல் இருக்கும் போது, அவரை போல மாற்றுவதற்கு அங்கீகாரம் பெற்ற, கட்டளை பெற்ற, அவரது நேரடி ஆசீர்வாதம் பெற்று அவர் சொன்னபடி காத்து இருந்து உன்னதத்தின் வல்லமையை பெற்று அவருக்காக தைரியமாக வாழ்ந்து மரிக்கவும் விட்டுக் கொடுக்கும் மிகவும் உயர்ந்த அழைப்பு.

B. தம்மோடு கூட நடத்தி பரலோக ரகசியங்களை கற்றுக் கொடுத்து சீடராக மாற்றினார்

அவரோடு கூட இருக்கவும், அவரை போல மாறவும், அவரது சாயலை பார்க்கவும், அவரது வாழ்வின் படி நடக்கவும், அவரின் மனப்பக்குவத்தை அடையவும், அவரது பிரசங்கத்தை கேட்கவும், அவரது ராஜ்ஜியத்தின் ரகசியத்தை அறியவும் சீடர்களுக்கு அருளப்பட்ட ஒன்று. அதினால் தான் அவர்களில் ஒருவாராக தாமே வாழ்ந்து காட்டி முன்மாதிரியை வைத்துப் போனார். இயேசுவைப் போல மாற இயேசுவோடு இருக்கும், நடக்கும், செயல்படும் அனுபவம் வேண்டும் அப்போது தான் மெய்யான சீசத்துவம் வெளிப்படும்.

C. தமது ஜீவனை கொடுத்து மாதிரியாக சீடர்களை உருவாக்கினார்

அவரது சீடர்கள் அவரோடு கூட நடந்தும், பரலோக மகிமையை கண்டும், கிருபை சத்தியத்தை கண்டு உணர்ந்தும் உலக அதிகாரம், பதவி என்று உலக ராஜீயம் என்கிற எதிர்பார்ப்பில் வாழ்ந்த அவர்களை தமது சுய இரத்தத்தால் மீட்க தம்மையே ஜீவ பலியாக ஒப்புக் கொடுத்து, கிருபாதார பலியாக மாறி விலையேரப்பெற்ற தமது இரத்தம் சிந்தி ஜீவனுள்ள கல்லாக மாறி பரிசுத்த மாதிரியை வைத்துப் போனார்.

அந்த சிலுவை சுமந்து தன்னை பின்பற்றி வர வாழ்ந்தும் காட்டினார். சிலுவை அல்லது discipline இல்லாத இடத்தில் சீசத்துவம் இல்லை. (நீதி 10:17) பாடுபடுதல் இல்லாமல் சீசத்துவம் இல்லை. பாடுகளின் மத்தியில் எப்படி வாழுதல் என்கிற சுபாவத்தை அவர் சிலுவையில் கற்றுக் கொடுத்தார். அவரது மலை பிரசங்கத்தின் சுபாவங்கள் வெளிப்பட்ட இடம் தான் சிலுவை. சீசனுமும் அப்படியே பாடு படும் போது தான் திவ்விய சுபாவம் பெற்றுக் கொள்ள முடியும். அந்த திவ்விய சுபாவம் இல்லாமல் சீசனாக இருக்க முடியாது ஆனால் நூதன சீசனாக இருக்க முடியும்.

D. அதிகாரம், வல்லமை மற்றும் கட்டளை கொடுத்து சீடர்களாக மாற்றினார்

அவர் தமது மகிமையின் சாயலின் உன்னத நிலையை அடைந்த போது அதாவது உயிர்த்தெழுந்த பின்னர், கடிந்து கொள்ள வேண்டியவர்களை கடிந்து கொண்டு, சமாதானம் சொல்ல வேண்டியவர்களுக்கு சமாதானம் சொல்லி, தன்னை தொட்டுப் பார்த்து சந்தேகம் தீர்க்க வேண்டியவர்களுக்கு சந்தேகத்தை தீர்த்து, அவரது அன்பில் உறுதிப் படுத்த வேண்டியவர்களை அன்பில் உறுதிபடுத்தி, உலகமெங்கும் போங்கள் நான் உங்களுடன் இருக்கிறேன் என்றும், சுவிசேஷத்தை பிரசங்கித்து, அவைகளை கைக்கொள்ள வைத்து, சீடராக்கி ஞானஸ்தானம் கொடுங்கள் என்கிற கட்டளையை கொடுத்து, அவரது கைகளினால் ஆசீர்வதித்து, உன்னத வல்லமையை கொடுத்து அவரை போல மாற்றி ஒரு கூட்டத்தை ஆயத்தம் ஆக்க சீடர்களாக மாற்றும் அதிகாரம் கொடுத்து இன்றும் பரிந்து பேசிக் கொண்டு இருக்கிறார்.

மேற்கூறிய வழிகள் தான் கிறிஸ்துவின் சீடர்களாக மாறும் நிலை. கிறிஸ்துவின் சீடர்களாக மாற அழைப்பும், அவரோடு கூட நடத்தலும், பாடுபடுதலும், அதிகாரம் பெறுதலும் முக்கியம். இதையே நாமும் மாதிரியாக கொண்டு அவரது அழைப்பை சபையின் மந்தையில் கண்டுபிடித்து, அவரோடு கூட இருக்க கற்றுக் கொடுத்து, பாடுபடும் சிந்தையை உண்டுப் பண்ணி கிறிஸ்துவை போல empowerment/ ஆசீர்வதித்து அதிகாரம் கொடுத்து அனுப்புவோம். அப்படி ஒவ்வொரு சபையும் சீடர்களை முழு உலகிலும் அனுப்பினால் இந்த விசுவாசிகளின் கூட்டம் தானாக சீடர்களாக மாறி விடும். ஆனால் நாம் என்ன செய்கின்றோம். விசுவாசிகளை விசுவாசிகளாக மாற்ற பயிற்சி கொடுத்து கொண்டு இருக்கிறோம். சபையின் எண்ணிக்கையை உயர்த்த growth என்று சொல்லி கொண்டு இருக்கிறோம். ஒரு சபையின் வளர்ச்சியே, நாம் எத்தனை சீடர்களை முழு நேர ஊழியத்தை செய்ய, உன்னத அழைப்பு மற்றும் விசேஷ அழைப்புக்கு நேரே நடத்தி, சிலுவையை சுமக்க ஆயத்தமாக்கி மிஷனரிகள் அல்லது ஊழியர்களாக அனுப்பி இருக்கிறோம் என்பதின் அடிப்படையில் தான் இருக்கிறது. வேதாகத்தில் திரள் கூட்டம் இரட்ச்சிப்பின் பாதையில் வந்த பின்னர் இந்த உலகமெங்கும் போங்கள் என்கிற சீசத்துவ பணியை செய்யாதினால் உபத்திரவத்தில் சபையை நடத்தி சபையை சிதரடித்து அவர்களை கொண்டு முழு உலகுமும் சுவிசேஷம் கேட்க வைத்தார். எனவே நாம் அந்த நிலையை அடையாதப்படி சீடர்களை உருவாக்குவோம் அதிகாரம் கொடுத்து தேசமெங்கும் அனுப்புவோம்.

எனவே கர்த்தர் தாமே சீஷத்துவ பணியில் நம்மை பண்படுத்துவாராக!

செலின்