தேவாலையத்தில் செய்வதும் செய்யக்கூடாததும்

தேவாலையத்தில் செய்வதும் செய்யக்கூடாததும்

Do’s and Don’t in the church

தேவாலையத்தில் செய்வதும் செய்யக்கூடாததும்

1) ஏலம் விடக்கூடாது அதுவும் படைக்கின்ற உணவுப்பொருள்களை ஏழைகளுக்கு இலவசமாக பகிர்ந்துக்கொடுக்காமல் ஏலம் விட்டு பணக்காரர்கள் மட்டும் வாங்கி திண்பது பாவமாகும். எனவே உணவுப்பொருட்களை ஏலத்தில் யாரும் எடுக்கவே கூடாது,ஏலத்திற்காகவும் அது படைக்கப்படக்கூடாது. இதில் கவனமாக இருக்க வேண்டும்

2) ஆலையத்திற்கு தாமதமாக வரக்கூடாது ஆனால் எதிர்பாராத விதமாகவும்,தவிர்க்க முடியாத காரணத்தாலும் என்றாவது ஒரு நாள் தாமதமாக வந்தால் பரவாயில்லை. இயேசு ஏற்றுக்கொள்ளவார் ஆனால் வேண்டுமென்றே அலட்சியமாக தாமதமாக வருவது தவறு.

3) ஆலையத்தில் கால்மீது கால் போட்டு உட்காரக்கூடாது.இது மிகவும் தவறு. தாழ்மையோடு அமர்ந்து தேவனை தொழுதுக்கொள்ள வேண்டும்.

4) ஆலையத்தில் வளவள என்று பக்கத்தில் உட்கார்ந்திருப்பவரிடம் பேசக்கூடாது.

5) ஆலையத்தினுள் செருப்பு, shoes அணிந்து கண்டிப்பாக உட்காரக்கூடாது,உள்ளேயும் வரக்கூடாது. இது மிக பயங்கரமான தவறு.ஏனெனில் செறுப்பில் உள்ள அழுக்கால் இடத்தை அழுக்குப்படுத்தக்கூடாது. நிறைய விசுவாசிகளும் தரையில் அமர்கிறவர்களாக இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

6) ஆலையத்தினுள் வந்தவுடன் மொபைல் போனை silent mode ல் போட்டுவிட வேண்டும். உள்ளே வந்து உட்கார்ந்துக்கொண்டு போனில் பேசுவதெல்லாம் முற்றிலும் தவறு. இது மற்றவர்களை மிகவும் எரிச்சலடையச் செய்யும்.

7) காணிக்கை கொடுத்தவர்களை பட்டிலியிட்டு அவர்களை கனப்படுத்தியெல்லாம் பேசவேகூடாது. இயேசுவே வலக்கைக்கு கொடுப்பது இடக்கைக்கு தெரியக்கூடாது என்று உறுதியாக சொல்லியுள்ளார்.

8) காணிக்கையை கட்டாயப்படுத்தி கேட்டு வாங்கவே கூடாது. அது ஒவ்வொருவராலும் இயன்ற அளவு மனப்பூர்வமாக கொடுக்கப்பட வேண்டும்.

9) பல கோடி ரூபாய்களை செலவழித்தி ஆலையம் கட்டக்கூடாது. அதுவும் உலகம் பேரழிவை நோக்கிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் மிகப்பெரிய ஆலையம் தேவையே இல்லை. திடீரென்று இயேசுவின் வருகையும் உலக அழிவும் இருந்தால் காசுப்போட்டு கட்டினது எல்லாம் இடிக்கப்படும். ஜெப வீடு போன்று சிறிதாக கட்டினாலேபோதும். வெட்டாந்தரையில் கூடினாலும் நல்லதே. இயேசு அப்படியாகத்தான் அனேக வேலைகளில் மக்களை ஒன்றுக்கூடச்செய்து பிரசங்கம் பண்ணினார், அதுவும் இந்த காலத்தில் உள்ளது போல் 200 watts,400 watts speaker எல்லாம் அப்போது இல்லை.
முக்கியமாக ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் தங்கள் வீடுகளிலுள்ள அறையை ஜெப அறையாக மாற்றி விசுவாசிகளை அழைத்து ஜெபம் பண்ணலாம். நீங்கள் எப்படி ஜெபம் பண்ணினாலும் நீங்களே அந்த ஆலையம் என்பதை எள்ளளவும் மறந்துவிடாதீர்கள்.

10) ஆலையத்திற்குள் கண்டிப்பாக அரசியல் நடத்தக்கூடாது. தேர்தல் எல்லாம் ஆலையத்தில் நடத்தவே கூடாது. யாரையும் ஆலையத்தில் ஒதுக்கிவைத்து பேசவேக்கூடாது. குரூப் குரூப்பாக இருக்கவே கூடாது. இதெல்லாம் மகா பாவமாகும்.

11) ஆசீர்வாததட்டு என்றெல்லாம் வைத்து விசுவாசிகளிடம் பணம் கேட்கக்கூடாது. இயேசு ஒருபோதும் யாரிடமும் பணத்தை வாங்கிக்கொண்டெல்லாம் யாரையும் ஆசீர்வதிப்பதே கிடையாது. பணத்தை கொடுத்தும் பாவமன்னிப்பெல்லாம் வாங்கவே முடியாது.

12) ஆலையத்தினுள் கலை நிகழ்ச்சி எல்லாம் நடத்தி இடத்தை பரிசுத்த குலைச்சலாக மாற்றக்கூடாது. அது ஒன்றும் கூத்தடிக்கிற இடமில்லை. அதையெல்லாம் வெளியில் வைத்துக்கொள்ள வேண்டும்.

13) ஆலைய குருவானவரை எல்லாரும் மதித்து நடக்கவேண்டும். அவரிடம் யாரும் சண்டைப்போடக்கூடாது.

14) ஆலையத்திற்குள் பெண்கள் யாராக இருந்தாலும் சிறுபிள்ளைகளாக இருந்தாலும் காலில் கொலுசு போட்டுவந்து எல்லாருக்கும் தேவையில்லாத சத்தத்தை எழுப்பி இடையூறு செய்யக்கூடாது. பெண்கள் அறைகுறை ஆடை அலங்காரத்துடன் வந்து ஆண்கள் மனதை கெடுக்கும்படியாக இருக்கக்கூடாது.இது அவர்களுக்கு பாவமாகும்.பெண்கள் ஆலையத்திற்குள் முக்காடு போட்டுத்தான் அமரவேண்டும். என்னைப்பார் என் அழகைப்பார் என்றெல்லாம் வரக்கூடாது. ஒரு பெண்ணுக்கு அழகு எது என்று வேதத்தில் தெளிவாக சொல்லப்பட்டதை உணர்ந்து அதன்படி நடக்க வேண்டும்.

15) ஆலையத்திற்கு வெளியே நிற்கும் பிச்சைக்காரர்களுக்கு சுவிஷேம் அறிவிக்கப்பட வேண்டும். அவர்களில் முடியாதவர்களுக்கு கட்டாயம் உதவிச்செய்ய வேண்டும்.

16) ஏழை சபை உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டு ஆலைய நிர்வாகம் அவர்களுக்கு கட்டாயம் உதவிச்செய்ய வேண்டும்.

17) ஆலையத்தினுள் யாரும் தூங்க கூடாது. அவர்கள் தூங்கும்படியாகவும் தாலாட்டுப்பாடுவதுப்போல பிரசங்கம் இருக்க கூடாது. பிரசங்கம் எப்போதும் பாவங்களை கண்டித்து உணர்த்தும்படியாக பலமாக சத்தமாக இருக்க வேண்டும்.

18) காணிக்கை கொடுத்தால் ஆசீர்வாதம் கிடைக்கும். காணிக்கை கொடுத்தால் பாவம் மன்னிக்கப்படும் என்றெல்லாம் எண்ணங்களை வளர்த்துக்கொள்ளாதபடி இருக்க வேண்டும்.

19) ஜாதி வேறுபாடெல்லாம் சபையில் இருக்கக்கூடாது.

20) பாவ அறிக்கை ஜெபம் பண்ணும்போது முடிந்தவர்கள் எல்லாரும் முழங்கால் போடவேண்டடும்.

தொடரும்……….

இப்போதைக்கு இவைகள்தான் ஞாபகத்தில் வந்து, மேலும் தொடர்ந்து update செய்துக்கொண்டே போவேன். நிறைய சீர்திருத்தங்கள் திருச்சபையில் செய்ய வேண்டும். சில பிஷப்புக்களே ஒழுங்கில்லாதவர்களாக இருப்பதினால் சீர்திருத்தங்கள் சபைகளில் தொடர்ந்து செய்யப்படாமல் தடைப்படுகிறது.அனேக போதகர்களும் இவர்களுக்கு கட்டுப்பட்டு இருப்பதினால் அவர்களாலும் சீர்திருத்தத்தை ஆலையத்தில் நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதற்கெல்லாம் இன்னொரு மார்ட்டின் லூதர்போல் ஒருவர் தோன்றியே ஆகவேண்டும் என்று நாம் பிரயாசப்பட்டு ஜெபம் பண்ணவேண்டும். பண்ணினால் தேவன் அனுப்புவார். அனேக வேலைகளில் சகோதரர் மோகன் சி லாசரஸ் மூலமாக தேவன் நம் தவறுகளையெல்லாம் கண்டித்து உணர்த்துகிறார் ஆனால் அனேகர் நல்ல ஊழியக்காரர்களையும் தவறாக பேசிக்கொண்டே இருக்கிறீர்கள்.