நாம் கிறிஸ்துவின் பிள்ளைகளான நிலையில் இருந்தாலும், உன்னதங்களின் அபிசேசகத்தை பெற்று இருந்தாலும், அழைப்பை பெற்று தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் என்கிற மேன்மை இருந்தாலும், நித்திய ஜீவனுக்கு உரிய நம்பிக்கை பெற்று இருந்தாலும், நாம் இந்த மண் சரீரத்தில், இந்த இப்பிறவஞ்ச உலகில் தான் வாழ வேண்டியுள்ளது. உடனடியாக நாம் celestial being ஆக மாறி விடுவதில்லை. நாம் இன்னும் இங்கு தான் வாழ்கிறோம்.

எத்தனை முறை முதலாவது தேவனுடைய ராஜ்யத்தை தேடுங்கள் அப்போது எல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும் என்று பிரசங்கம் செய்தாலும் நம்மக்கு ஒரு தேவை, ஒரு நெருக்கடி மற்றும் பொருளாதாரத்தில் ஏமாற்றம் என்று வரும் போது மனதளவில் பாதிகப்படுக்கிரோம். விரக்தி அடைகிறோம். நமது நம்பிக்கையை கேள்வி கேட்கிறோம், அழைப்பை சந்தேகப் படுகிறோம், மேலும் கிறிஸ்துவின் வல்லமையை குறைத்து மதிப்பீடு செய்கின்றோம்.

போதாக்குறைக்கு யாராவது, நான் கர்த்தரை சார்ந்து இருந்தேன் எனக்கு கர்த்தர் என்னா பெரிய அற்புதம் செய்தார் தெரியுமா! நீங்கள் தேவனை சார்ந்து இருக்கவில்லை என்று விசுவாச பிரசங்கம் செய்யும் போது நம்மை அறியாமல் தாழ்வு மனப்பான்மை அடைந்து, நாம் தேவனை சார்ந்து இருக்கிறதில் தான் ஏதோ குழப்பம் என்று நம்மை நாமே நொந்து கொள்கிறோம்.

வேதாகமத்தில் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு கடன் பிரச்சனை வந்து இருக்கிறது. அதை கர்த்தரின் வழிகளில் சேவிகொடுத்த போது அதற்கு கர்த்தரே பரிகாரம் செய்யவும் செய்து இருக்கிறார். எனவே நமது சூழ்நிலைகளை மாற்றுவதற்கு அவர் இன்றும் வல்லவர் என்பதை நினைவில் வைத்து கொண்டு தொடர்ந்து இப்பதிவை வாசிப்போம்.

A. முதலாவது கர்த்தரை சார்ந்து அவரின் வழிகளில் நமது தேவையை நிறைவேற்ற திட்டம் வகுக்க வேண்டும்.

நாமாக அவசரப்பட்டு, உணர்ச்சிவசப்பட்டு ஒரு தீர்மானம் எடுத்து, நமது வழிகளில் நடந்து, நாமாக ஒன்றை நிர்ணயம் செய்து நமது சுயத்தை நிறைவேற்ற திட்டம் வகுக்க கூடாது. நாம் உலகத்தில் இருந்தாலும் உலகதார்கள் அல்லவே!

நாம் தேவராஜிய திட்டத்தில், தேவ சித்தத்தில் இருந்தால், அதை நோக்கமாக கொண்டால் நிச்சயம் நமது தேவைகளை சந்திப்பார். தேவன் கட்டளை கொடுக்காத காரியத்தில், இடத்தில், வேலையில், ஊழியத்தில் நாம் எதையாவது செய்ய நினைத்தால் அது ஏமாற்றமே!

நாம் எதற்காக திட்டம் போடுகிறோம் என்பதில் முழு கவனம் செலுத்த வேண்டும். நமது விருப்பம், ஆசை, இச்சைகளை மற்றும் சுயதிட்டதை நிறைவேற்ற ஒருபோதும் அவரை சார்ந்து கொள்ளமுடியாது ஏனேனில் இப்படிபட்ட எண்ணத்தோடு நாம் ஜெபித்தால் அவைகள் கெட்கப்படுவதில்லை.ஆனால் நமது நியாமான தேவைகள், அத்தியாவசிய தேவைகள், சரீரத்திற்கு உரிய தேவைகள் போன்ற வாழ்வியல் தேவைகளை அவர் அறிந்து இருக்கிறார். அவர் நமது சரீரத்திர்க்கும் தேவனாக இருப்பதால் நமக்கு என்ன தேவை என்பதை நன்கு அறிந்து இருக்கிறார். அதை அறிந்து அவரை சார்ந்தால் நிச்சயம் அவர் காரியத்தை செய்து முடிப்பார்.

B. திரானிக்கு மிஞ்சி எண்ணாமல் போதும் என்கிற கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டும். கர்த்தர் நம் கைகளில் தந்து இருக்கிற நன்மைகளில் வாழ கற்று கொள்ள வேண்டும். ஏனெனில் புசிப்பும் குடிப்பும் தேவ ராஜியம் அல்லவே!

பல வேளைகளில் நமது அந்த்ஸ்தை சுட்டி காட்ட, நமது மேன்மை பிரஸ்தாபம் என்று திராணிக்கு மிஞ்சி செயல்பட்டு தடுமாறி நிற்கிறோம். எனவே நமது அழைப்பு, தெரிந்து கொள்ளுதல், தேவதிட்டதின் கொள்ளளவின், தேவ தரிசனத்தின் அளவின் அல்லது மாதிரியின் அடிப்படையில் செயல்படுதல் வேண்டும். அளவுக்கு மிஞ்சி எண்ணக்கூடாது என்றும் வசனம் கற்று தருகிறது.

அதிக பேராசை கொண்டு, தேவன் பெரியவர், அவரை போல பெரிய எண்ணம் என்று கொண்டு ஏதாவது ஏடாகூடமாக செயல்படுதல் கூடாது. அவர் பெரியவர் தான் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அந்த பெரிய திட்டத்தை நம்மை கொண்டு செய்ய அவர் விரும்புகிறாரா? அல்லது அதற்கு நமக்கு திராணி இருக்கிறதா? அந்த அழைப்பை நாம் பெற்று இருக்கிறோமா? என்று சுயபரிசோதனை செய்ய வேண்டும். நமது அழைப்பிற்கு உட்பட்டு செயல்பட்டால் தான் நாம் தேவன் பேரில் வைக்கும் விசுவாசம் செயல்படும்.

எனவே தேவன் அழைத்த அழைப்பை பார்த்து, அவைகளில் நடக்க ஆரம்பித்து, அதிக விரயம் செய்யாதபடி, அவர் நமக்கு தந்த திறமை, வரங்கள், அபிசேகத்தின் அடிப்படையில், ஊழியம் அல்லது வேலை செய்து பிரயாசபட வேண்டும். பாடுபடாதவன் சாப்பிட கூடாது என்று வசனம் சொல்கிறது. வேலையாள் கூலிக்கு பாத்திராவான். கர்த்தரை நம்பி செய்யும் சுறுசுறுப்பான கடின உழைப்பு எப்போதும் நம்மை எளிதில் ஏமாற்றி விடாது.

C. இருக்கிறவைகளுக்காக கர்த்தரை மகிமைப்படுத்தி நன்றி செலுத்த கற்று கொள்ள வேண்டும்.

கர்த்தர் கைகளில் தந்த நன்மைக்காக நன்றி அறிதல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். நன்றி உள்ளவர்கள் அதிக நன்மையை பெறுவார்கள் அது தான் தேவ ரகசியம்.

அவர் செய்த சிறிய பெரிய எந்த உபகாரங்ககளை மறக்க கூடாது. அவர் நன்மைகளை தரும் போது மனமேட்டிமை கொள்ளாமல் தாழ்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். இயலாமையை நினைத்து வருந்தி, சலிப்படைந்து, விரக்தி அடையாமல், முறு முறுப்பு இல்லாமல் ஷோத்திரம் செய்தலே தகும் என்பதை அறிந்து. கர்த்தர் தந்தவைகளுக்காக ஷோத்திரம் செலுத்தும் பழக்கம் இருந்தால் கூடை கூடையாக மீதி எடுக்க வைப்பார். கர்த்தர் நம் கைகளில் சில நன்மைகளை தர நம்மை அவர் தகுதி படுத்த விரும்புகிறார். அதுதான் இதுவரை நம்மை கர்த்தர் நடத்தின விதங்கள் மற்றும் அவர் செய்த நன்மைகளை நினைத்து நன்றி சொல்லுதல். அதை செய்து வந்தாலே நிச்சயம் தேவ ஆசீர்வாதம் நம்மிடம் பெருகும்.

D. கடைசியாக இருப்பதில் கர்த்தருக்கென்று கொடுக்க பழக வேண்டும். பரலோகத்தில் பொக்கிஷம் வைக்க கற்று கொள்ள வேண்டும்.

பகர்ந்து கொடுக்கும் சுபாவம் தெய்வீகம் ஆகும். கர்த்தர் நமக்கு தருவது அனைத்தும் சிறந்த நல்ல நன்மைகளை தருவார் அப்படி தரும் பொது அவருக்கு கொடுகிறவர்களாக இருக்க வேண்டும். அவருக்கு கொடுக்கும் போது அவருக்கு முன்னுரிமை கொடுக்கிறோம் என்று எடுத்து கொள்ளப்படும். கொடுக்கும் போது பிறர் அறிய, நான் கொடுக்கிறேன் என்கிற கர்வத்தில், எனக்கு இருக்கிறது கொடுக்கிறேன் என்கிற பெருமையின் எண்ணத்தில், நான் கொடுக்க வேண்டுமா என்கிற சலிப்பின் அடிப்படையில் கொடுக்காமல் இருக்கிறவைக கள் அனைத்தும் கர்த்தருடைய து, நாம் போகும் போது ஒன்றும் கொண்டு போவதில்லை என்கிற எண்ணத்தோடு உற்சாகமாக மனப்பூர்வமாக கொடுக்க வேண்டும். அப்போது தான் கர்த்தர் பிரியப் படுவார்.

கஞ்சத்தனம் மற்றும் பிசினித்தனம் ஒன்றுக்கும் உதவாது. சிலர் கொடுக்கும் போதும் மேட்டிமை எண்ணத்தோடு கொடுப்பார்கள் அதுவும் ஒன்றுக்கும் உதவாது. எந்த சபையில் யார் உங்களுக்கு ஆவிக்குரிய காரியங்களுக்கு உத்தரவாதம் செய்கிறார்களோ அங்கு உண்மையாக இருந்து கையின் நன்மைகளில் பகார்ந்து கொடுக்க வேண்டும். இன்னும் சிலர் அசுத்தம், அநியாய வழிகளில் நடந்து மோட்ச பரிகாரம் கிடைக்க காணிக்கை என்று கொடுப்பவரும் உண்டு. அவர்கள் தங்கள் தலையில் தாங்களே ஆக்கினை உண்டு பண்ணி கொள்கிறார்கள். இப்படிபட்ட வர்கள் முதலாவது சகேயு தன்னை சரி செய்தது போல சரி செய்து கொடுத்தால் அதை கர்த்தர் அங்கீகரிப்பார் ஏனெனில் பரலோக ராஜியம் பரிசுத்த ராஜியம் அங்கு அசுத்தம் மற்றும் அநியாயம் இல்லை.

இந்த 2021 இல் மேற்கொண்ட வழிகளை பின்பற்றி எல்லா நிறைவான ஆசீர்வாதங்களை பெற்று கொள்ள உங்களை வாழ்த்துகிறேன். அவர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

செலின்