பக்தியுள்ளவனைக் கர்த்தர்
தமக்காகத் தெரிந்து
கொண்டாரென்று
அறியுங்கள்

(சங்கீதம் 4:3)

சர்வ வல்லவரின்
உத்தரவு கிடைத்ததும்,
சாமுவேல் தீர்க்கதரிசி
ஈசாய் வீட்டுக்குக்
கொம்பு தைலத்தை
கொண்டுபோனதுபோல் 

(1 சாமுவேல் 16:1-13)


கர்த்தரின் சத்தம் கேட்டதும்                                        
சால்வையை போட்டுக்கொண்டு
சாப்பாத்தின் குமாரனை
சந்திக்கப் புறப்பட்டுவிட்டார்
தீர்க்கதரிசி எலியா.


சாப்பாத்தின் குமாரனான
எலிசா

பன்னிரெண்டாம்
ஏரை ஓட்டிக்கொண்டிருந்தார்.


மிகப்பெரிய பண்ணையார்
என்று சொல்லக்கூடியவராக
இருந்தாலும்,
வயல்காட்டில், வரப்பு மேலே
நாற்காலி போட்டுக்கொண்டு

முதலாளி என்பதை
காண்பித்துக்கொண்டு  
நிர்வாகம் பண்ணாமல்,
போவாஸ் போல
களமிறங்கியிருந்தார்.


சேற்றுக்குள் இறங்கி

பன்னிரெண்டாம் ஏரை
இழுத்துப் பிடித்து
ஓட்டி, உழுதுகொண்டிருந்தார்

(1இராஜாக்கள் 19:19-21)


லேவி அதாவது மத்தேயுவை,

ஆயத்துறையில்
உட்கார்ந்திருந்தபோது

இயேசு அவனை கண்டு
ஊழியத்திற்கு அழைத்தார்
(மத்தேயு 9:9)


பேதுருவும் அவனது கூட்டாளிகளும்
வலைகளை அலசி பழுதுபார்த்துக்
கொண்டிருந்தபோது
அவர்களை ஊழியத்திற்கு
அழைத்தார்
 (லூக்கா 5:2)


அதுபோல் எலிசாவை
வயலில் வேலை
செய்துகொண்டிருக்கும்போது
ஊழியத்திற்கு

அழைத்தார்

அழைக்கப்பட்ட எலிசா
ஓர் ஏர் மாடுகளைப்

பிடித்து

அடித்து
ஏரை உடைத்து
இறைச்சியைச் சமைத்து
ஜனங்களுக்குக் கொடுத்து
உள்ளூர் ஜனங்களை
போஷித்துவிட்டு
ஊழியத்திற்குப்
புறப்பட்டுவிட்டார்


இதற்குப் பின் எலிசா
ஊரையும் ஏரையும்
ஏறிட்டுப் பார்க்கவில்லை


எலிசாவை அபிஷேகம் செய்த
தலைமை தீர்க்கதரிசி எலியா
கடுமையான பிரதிஷ்டைக்காரர்


எலிசாவை பிரதிஷ்டை செய்துவிட்டு
எட்டு ஆண்டுகளில்  ஏழு அற்புதங்களை
செய்து, ஊழியத்தை முடித்துவிட்டு
அக்கினி இரதத்தில் ஏறி
ஆகாய மண்டலத்திற்குள் நுழைந்ததை 
கண்ணாற கண்டவர்தான் எலிசா!


எலிசா
யோர்தானைக் கடந்தபோது

எலியாவின் தேவனாகிய
கர்த்தர் எங்கே?

என்று சொல்லி
தண்ணீரை அடித்தான்.

   
யோர்தான் இரண்டாகப்பிளந்தது


அதற்குப் பின் இன்றுவரை

எலிசாவின் தேவனாகிய
கர்த்தர் எங்கே?
என்று
அபிஷேகத்தினால் நிறைந்து
தண்ணீரை அடித்துப் பிளக்க
ஆட்களை தேவன்
தேடிக்கொண்டிருக்கிறார்


அபிஷேக சால்வையினால்
நுகங்களை முறிக்க
வீறுகொண்டு எழும்பு,


எலிசாவின் தேவனாகிய
கர்த்தர் எங்கே?  

என்று சங்கே முழங்கு!


நல்லாசான்
ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்

Recipient of an International Award – Malaysia