தயக்கமும்
ஒருவித, உலக
மயக்கமும்
ஆவிக்குரிய
ஆசீர்வாதத்தின்
வாய்க்கால்களை
அடைத்துவைக்கும்
தடைக்கற்கள்!

ஆனால்,

உம்மாலே ஒரு சேனைக்குள்
பாய்ந்துபோவேன்;
என் தேவனாலே
ஒரு மதிலைத் தாண்டுவேன்.

(சங்கீதம் 18:29)

என்று,

விசுவாசத்தால்
வீர வசனம் பேசினால்
தடைகள் உடையும்
ஆசீர்வாத மடைகள்

திறக்கும்   

ஒவ்வொருவனும்
ஒரு எக்காளத்தையும்,
வெறும் பானையையும்,
அந்த பானைக்குள் வைக்கும்
தீவட்டியையும்
எடுத்துச் சென்று
தீவட்டியின் வெளிச்சம் வெளியே
தெரியும்படிக்கு, அவர்கள் பானையை
உடைத்து, எக்காளத்தை ஊதினார்களே!
(நியாயாதிபதிகள் 7:16-21)

சேனைக்குள் பாய்வேன்
என்று முழங்கினால்
(மண்) பானைக்குள்
விளக்கை வைத்து
ஜெயத்தைத் தர

தேவனால் கூடும்.

SIMPLE FORMULA
BUT
GREAT SUCCESS.

இது வித்யா’வின் விண் பார்வை!

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் B.Com., M.Div.,
போதகர் | எழுத்தாளர் | வானொலிச் செய்தியாளர் |

கிறிஸ்தவ தமிழ் ஆர்வலர்கள்
இந்த
எண்ணைத் தொட்டு
என்னுடன் பேசலாம்.

91-77080 73718 WhatsApp