தேவனுக்கென்று நேரம் ஒதுக்கி அவரோடு தனித்திருப்பதே ஜெபம் எனப்படுகிறது ; இதில் எள்ளளவேனும் உங்களுக்கு ஏமாற்றம் என்பதில்லை.

  1. குறிப்பிட்ட நேரத்தில் ஜெபி – மாற்கு 1:35
    “அவர் அதிகாலையில் இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்திரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம் பண்ணினார்”.
  2. விசுவாசத்தோடு ஜெபி – மாற்கு 11:24
    “ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்”.
  3. மன்னிக்கும் மனதுடன் ஜெபி – மாற்கு 11:25.
    “நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்”.
  4. கவனமாய் ஜெபி – மாற்கு 14:38.
    “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்”.

அதிக ஜெபம் குறைந்த பிரச்சினை, குறைந்த ஜெபம் அதிக பிரச்சினை.

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!