
தேவனின் எச்சரிப்பும், மனந்திரும்பும் படியாக தேவனின் அழைப்பும்

இன்றைக்கு அனேக பிரபலமான போதகர்கள் தேவனுடைய இருதயத்தில் உள்ளவைகளையும் சபைகளின் நிலவரங்களையும் அறியாமலேயே ஜனங்களை பிரியப்படுத்தி பணமும் புகழும் சேர்க்கும் நோக்கத்தில் போலியாக தாங்களே தங்கள் மனதில் உள்ள எண்ணங்களையே தீர்க்க தரிசனங்களாகவும் வாக்குத்தத்தங்களாகவும் ஜனங்களுக்கு அறிவித்து அவர்களை ஏமாற்றி வருகின்றனர். இப்படி ஜனங்களின் இச்சைகளை தீர்க்கதரிசனங்களாகவும் வாக்குத்தத்தங்களாகவும் ஜனங்களுக்கு அறிவித்து ஜனங்களை தங்களிடத்தில் இழுத்துக் கொள்ளவும் செய்கின்றனர் ஜனங்கள் மனந்திரும்பி இரட்சிக்கப்படும்படிக்கு அவர்களின் அக்கிரமத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தி அறிவிக்காமல் தங்கள் பொய்களையே கர்த்தருடைய நாமத்தினாலே அறிவித்து அவர்களை வஞ்சிக்கவும் செய்கின்றனர். ஆனால் இப்படிப்பட்டவர்களே இன்று கர்த்தருடைய நாமம் தரிக்கப்பட்ட ஜனங்கள் நடுவிலே நன்மதிப்பைப் பெற்ற பிரபலமான அபிமான போதகர்களாக காணப்படுகின்றனர். ஜனங்கள் சத்தியத்தை அறியக்கூடாதபடி அவர்கள் கண்களை குருடாக்கவும் செய்கின்றனர்.
தேவனுடைய ஜனங்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசியாதபடி தேவனுடைய ராஜ்யத்தின் கதவுகளை சத்தியத்தை மறைப்பதன் மூலம் பூட்டி விடவும் செய்கின்றனர்.ஜனங்களை பிரியப்படுத்தி அவர்களது கணத்தையும் பணத்தையும் சம்பாதிக்கும் நோக்கத்திலேயே இன்றுள்ள பெரும்பான்மையான ஊழிய ஸ்தாபனங்களும் சபைகளும் செயல்பட்டு வருகின்றன. இப்படி ஜனங்களை பிரியப்படுத்தும்படி செயல்படுகின்ற ஊழியர்களும், ஸ்தாபனங்களும் சபைகளுமே இன்று கிறிஸ்தவர்கள் நடுவில் மிகவும் பிரபலம். இப்படிப்பட்ட மனிதர்களிடத்திலும் ஸ்தாபனங்கலினிடத்திலும் சபைகலினிடத்திலும் இன்று ஜனங்கள் திரளாக குவிந்துள்ளனர்.இப்படிப்பட்ட மனிதர்களும் அவர்கள் நிறுவனங்களும் ஊழியங்கள் என்னும் பெயரில் தேவ ஜனங்கள் நடுவில் தேவனுக்கு விரோதமாக கலகம் உண்டாக்கவும் செய்கின்றனர்.தேவனுடைய பாதைகளை விட்டு தேவ ஜனங்கள் வழி தப்பி நடப்பதற்கு வழி செய்கின்றனர். அதினால் இந்தப் பொல்லாத வேலையாட்கள் மேலும் அவர்களுக்கு செவி கொடுக்கும் ஜனங்கள் மேலும் இன்று தேவனுடைய இருதயத்தில் அவருடைய கோபம் இவர்களுக்கு விரோதமாக எழும்பி எரிந்து கொண்டிருக்கின்றது. பழைய உடன்படிக்கை ஜனங்களே புறஜாதிகளுடைய வழிபாடுகளையும் பழக்கவழக்கங்களையும் கற்றுக்கொண்டு தேவனுடைய நியாயப்பிரமாணத்தை கைவிட்டது போல, இவர்களும் இன்று கிறிஸ்துவின் மூலமாய் தேவன் தந்த உபதேச சட்ட திட்டத்தை தள்ளிவிட்டு அனேக பாரம்பரியங்களையும் பழக்கவழக்கங்களையும் பண்டிகைகளையும் ஏற்றுக்கொண்டு அவளையே அனுசரிக்கும் செய்கின்றனர்.
பரிசுத்தவான்களை உருவாக்கவேண்டிய சபைகள் இன்று பணத்தை சம்பாதிப்பது எப்படி?என்றும், இந்த உலகத்தின் சரீர நன்மைகளை சுதந்தரித்து எப்படி?என்றும் ஜனங்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறது. இதனால் மாம்சத்தையும் அதின் ஆசைகளையும் சிலுவையில் அறைந்து வாழவேண்டிய கிறிஸ்தவர்கள், பண ஆசை உள்ளவர்களாயும் இந்த உலகத்திற்கு சினேகிதர்களாகவும் மாறி, தேவனுக்கு பகைவர்களாக மாறிவிட்டனர்.இந்த உலகத்தின் சகல மாயைகளினாலும் மயக்கப்பட்டு பிதாவின் மேல் உள்ள அன்பை இன்று இழந்து தங்களை அறியாமல் பொருளாசை என்னும் விக்ரக ஆராதனை செய்து தங்களை அறியாமல் சாஷ்டாங்கமாக விழுந்து சாத்தானை பணிந்து கொண்டு வருகின்றனர். கர்த்தராகிய இயேசுவே; ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்று பொருளாசையை குறித்து அதிகமாக எச்சரித்தார். அதை அன்று வாழ்ந்த பொருளாசைக்காரர்களாகிய பரிசேயர் கேட்டு அவரை பரியாசம் செய்தார்கள், என்று எழுதியிருக்கிறபடி இன்றைக்கும் பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள், இதுவே ஆசீர்வாதம் என்று சொல்லி கிறிஸ்துவை பரியாசம் பண்ணவும் செய்கின்றனர். கர்த்தராகிய இயேசுவோ; ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக் கொண்டு தன்னை பின்பற்றி வரும்படி கட்டளையும் கொடுத்துள்ளார். இவைகளைக் குறித்தே கர்த்தராகிய இயேசு ஜனங்களைப் பார்த்து மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபமாயிருக்கிறது, என்று சுவிசேஷமாக அறிவித்தார்.
ஆனால் பரிதாபம் என்னவென்றால் இன்றைக்கோ இதற்கு மாறாக அனேக கள்ள சுவிசேஷகர்களும் போதகர்களும்,இயேசுவை ஏற்றுக்கொண்டு அவரிடத்தில் வந்து விட்டால் நீங்கள் ஐசுவரியவான்களாக மாறிவிடுவீர்கள் என்று ஜனங்களை நம்பச் செய்து சத்தியத்திற்கு விரோதமான பொய்களையே சுவிசேஷம் என்னும் பெயரில் அறிவிக்கவும் செய்கின்றனர். இதனால் திரளான ஜனங்கள் மயக்கப்பட்டு கிறிஸ்துவையும் அவரது உபதேசத்தையும் அறியாமல் வஞ்சிக்கப்பட்டு இரட்டிப்பான நரகத்தின் மகளாய் மாறிவிட்டார்கள். இவர்கள் கொண்டிருக்கிற விசுவாசமும், ஜெபமும் பொருளாசையை மையமாய் கொண்டதாகவே தெளிவாய் காணப்படுகின்றது. அதன் வெளிப்பாடுதான் இன்று நடத்தப்படுகிற அனேக மாயமான கூடுகைகள். தேர்வில் வெற்றி பெற ஜெப கூடுகை, வியாபாரத்தில் ஆசீர்வதிக்கப்பட வியாபாரிகள் ஜெபக் கூடுகை,என்று ஆரம்பித்து இதன் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது அது மாத்திரமல்ல Jesus is my business partner மற்றும் இளம் பங்காளர் திட்டம் போன்ற அனேக திட்டங்களும் இவர்களாலே தொடங்கப்பட்டு கிறிஸ்துவை பரிகாசம் செய்கின்றனர்.பரிசுத்தவான்களாக மாற்றவேண்டிய சபைகள் இன்றைக்கு வீழ்ச்சியடைந்து, விஞ்ஞானிகளையும் டாக்டர்களையும் இன்ஜினியர்களையும் உருவாக்கும் பரிதாபமான திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது.அதன் வெளிப்பாடுதான் இன்று அனேக ஊளிய நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கும் பொல்லாத நோக்கில் தாங்களே பல திட்டங்களை உருவாக்கி அதற்கு “தரிசனம்” என்னும் பெயரை வைத்து தேவ ஜனங்களை வசிப்பதற்கு கர்த்தருடைய பரிசுத்த நாமத்தையே துணிகரமாக பயன்படுத்தவும் செய்கின்றனர்
.ஜனங்கள் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காக கர்த்தரின் பெயரை சொல்லி ஜனங்களை பயமுறுத்தி கர்த்தர் தான் இவைகளை ஆரம்பிக்க தரிசனம் தந்ததாக சனங்களை ஏமாற்றவும் செய்கின்றனர்.கர்த்தர் தந்த தரிசனம் என்று சொல்லுவதால் துணிகரமாக அவரது நாமத்தை புறஜாதிகள் நடுவில் பரிசுத்த குளச்சல் ஆக்கிவிட்டனர். ஆதலால் தேவனுடைய கோபம் இவர்கள் மேல் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தேவன் தன் கோபத்தை சீக்கிரத்தில் வெளிப்படுத்த போகிற காலங்கள் விரைவில் வருகின்றன. கிறிஸ்துவின் நாட்களில் இருந்ததுபோல இன்றும் பெரும்பாலான சபைகளும் ஊழிய நிறுவனங்களும் வியாபார நோக்கம் கொண்ட சந்தைகளாகவே காணப்படுகின்றன. சபைகள் கார்ப்பரேட் நிறுவனங்களாக உரு மாறிவிட்டது.ஆதலால் ஒவ்வொரு கிறிஸ்தவ தாபனங்கள் கீழும் இன்று அனேக மருத்துவமனைகள்,கல்லூரிகள் பள்ளிகள் என்று திறளாக காணப்படுகின்றன. இவைகள் வியாபார நோக்கில் இன்று செயல்படுகிறதை நம்மால் காணமுடிகிறது. மெய்யாகவே இவைகள் வியாபார தந்தைகளேயாகும். சபையை கிறிஸ்து தன் சொந்த இரத்தத்தினால் எதற்காக சம்பாதித்தாரோ அதன் நோக்கத்தை இழந்துவிட்டத, மிகவும் பரிதாபமே. இதுவரை தேவன் மனம் திரும்புவதற்கு நீண்ட காலம் பொறுமையோடு கூட தவணை கொடுத்தார்.ஆனால் இவர்களோ தேவன் இவைகளை காண்பதில்லை என்று தங்கள் இருதயத்தில் பொல்லாத நினைவை கொண்டிருக்கின்றனர். ஆதலால் தேவன் இவர்கள் கட்டிய மகா பாபிலோன்களை,வேசி என்று அழைக்கவும் செய்கிறார்.ஆதலால் தேவன் இந்த வேசியை சீக்கிரமாய் நியாயந்தீர்க்க போகிறார்.
இப்படி வேசிகளாய் காணப்படும் கள்ள சபைகளை தேவன் நியாயந்தீர்த்து அவளால் பரிசுத்த குளச்சல் ஆக்கப்பட்ட அவருடைய பரிசுத்த நாமத்தை இந்த தேசத்தில் தேவன் பரிசுத்தப்படுத்தப் போகிறார். அது கர்த்தரிடத்திலிருந்து சீக்கிரமாய் வெளிப்பட்டு சென்னையிலிருந்து துவக்கப்பட்டு இந்தியா முழுவதும் இந்த நியாயத்தீர்ப்பை தேவன் செலுத்த போகிறார். தேவனுக்கு இந்த மனிதர்களோடும் அவர்கள் ஸ்தாபனங்களோடும் வழக்கு இருக்கிறது. ஆதலால் அவர் இவைகளை செய்யும்படி நான் அவர்களுக்கு கற்பிக்கவும் இல்லை கட்டளை விடவும் இல்லை என்று கூறுகிறார். அந்தக் கட்டிடங்களையும் அவர்கள் கர்த்தருடைய நாமத்தை சொல்லி சேர்த்துக்கொண்ட சகலவற்றையும் நான் அந்நியர் கைகளில் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.அவர்களோ இவைகளை நிர்மூலம் பண்ணுவார்கள். இந்த பொல்லாத மனிதர்களும் அனேகர் அவர்கள் கைகளில் ஒப்புக் கொடுக்கப் படுவார்கள்.அவர்களில் சிலரை கொலை செய்து சிலரை சிறையில் அடைப்பார்கள். கிறிஸ்துவின் நாமத்தை தரித்துக்கொண்ட ஒவ்வொரு மனிதனுக்கும் இனிவரும் காலங்களில் இந்திய தேசம் முழுவதிலும் தத்தளிப்பும் உபத்திரவமும் உண்டாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.இப்படிப்பட்ட உபத்திரவங்களினாலே அநேகர் தங்கள் ஜீவன் தப்ப கிறிஸ்துவை மறுதலித்து அன்னிய மார்க்கத்தை கழுவுவார்கள். இந்த உபத்திரவத்தில் கொள்ளப்படுகிறவர்கள் ஒவ்வொருவனும் நீதிமான்கள் அல்ல என்று கர்த்தர் சொல்லுகிறார்.
நீதிமான் களிலும் அனேகர் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆனாலும் நான் அவர்களை பாதுகாப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.இவைகளைக் கேட்டு ஒருவன் மனம் திருந்தினால் நான் அவனுக்கு மன்னிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.சில காலம் இந்தியாவில் சபை கூடுதல் முடக்கப்படும். இந்தியாவில் இனிமேல் சபை கூடுதல் சாத்தியமில்லை என்று நினைக்கும் அளவுக்கு அது வீரியமாக காணப்படும். சுத்திகரிப்பு நாட்கள் முடிந்த பிற்பாடு மறுபடியும் பரிசுத்தவான்கள் இந்த தேசத்தில் பெலப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.விசுவாசத்தை காத்துக் கொண்ட உத்தமமான என் ஊழியர்களை கொண்டு மறுபடியும் இந்த தேசத்தில் நான் ஒவ்வொரு கிராமங்களிலும் சபையை கட்டுவேன் என்று கர்த்தர் அறிவிக்கின்றார். இந்தியாவில் சபைகள் இல்லாமல் போவதில்லை.பிற்பாடு என் ஜனங்கள் மூலமாக இந்த தேசத்தில் பெரிய எழுப்புதல் உண்டாகும் என்று கர்த்தர் உரைக்கிறார்.என் மகிமையை இந்த தேசம் காணும்படி செய்வேன் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்கின்றார். ஆதலால் அக்கினயைப் போல எரிகின்ற உபத்திரவம் வரும் முன்பாக இந்த நாட்களுக்காக மனம் திரும்பி ஜெபித்து ஆயத்தமாக வேண்டும் என்று கர்த்தர் உரைக்கிறார்.