
GRACE Good News அல்ஃபா, ஒமேகா-ன்னா என்ன சார் அர்த்தம்?

GRACE GoodNews அல்ஃபா, ஒமேகா-ன்னா என்ன சார் அர்த்தம்?
“சமீபத்துல ஏதாவது பொருள் வாங்குனீங்களா?”
“என்ன சார், நான் ஒன்னு கேட்டா, நீங்க ஒன்னக் கேக்குறீங்களே! பரவாயில்ல, குளியல் சோப் வாங்கினேன் சார்!”
“அதுல மேனுபேக்சரிங் டேட், அதாவது அந்த சோப் உற்பத்தி செய்யப்பட்ட தேதி பார்த்து வாங்கினீங்களா?”
“எப்பவுமே அதை பார்த்து தான் வாங்குவோம் சார்”
“அதுக்குப் பக்கத்துலேயே எக்ஸ்பைரி டேட் அதாவது காலாவதியாகும் தேதி பாத்தீங்களா சார்?”
“அதைத்தான் நாம ரொம்ப முக்கியமா பார்ப்போம் இல்லேன்னா உடம்பு கெட்டு விடுமே”
“அதான் சார்! இந்த உலகத்தில் உண்டாக்கப்பட்ட எல்லா பொருளுக்குமே உற்பத்தி தேதியும் காலாவதியாகும் தேதியும் நிச்சயமா இருக்கும். அப்புறம் எக்ஸ்பயரி டேட் அதாவது அந்த காலாவதியான தேதிக்கு பின்னால அந்த பொருள நாம உபயோகப்படுத்த முடியாது ஏன்னா அதோட தன்மை எல்லாம் முடிஞ்சு போய்டும்.. இந்த உலகத்தையும் இங்க பார்க்கிற எல்லாத்தையும் உண்டாக்கின தேவனுக்கு அவர் உருவான தேதியும் இல்ல! அவருக்கு எக்ஸ்பைரி டேட் அதாவது அவர் காலாவதியாகிறதும் இல்லை! அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் அப்படின்னு பைபிள் சொல்லுது.. அவர் நமக்கு கொடுக்கிற கிருபைகள் இரக்கங்கள், ஆசீர்வாதங்கள் இவைகளும் மாறுவதே இல்லை… இதுக்குப் பேர்தாங்க அல்ஃபா, ஒமேகா-ங்கறது… அது கிரேக்க மொழியோட முதல் எழுத்தும், கடைசி எழுத்தும்தாங்க!! *நம்ம வாழ்வும் அழியாம நிலைச்சிருக்கனும்னா, நம்ம கடவுள உறுதியா புடிச்சுக்கனும்ங்க!!! வரட்டுங்களா சார்!!!”
நான் அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். (வெளி 22:13) ஆமென்!
_________
Sir, What does Alpha-Omega mean?
“Have you bought anything recently?”
“What sir, I’m asking about something, you are asking something else! It’s alright, I bought a bathing soap sir!”
“Did you look at the manufacturing date, that is, the date the soap was manufactured?”
“Always we look at it and buy”
“Disld you see the expiry date that is next to it sir?”
“That’s what we look at cautiously or else we suffer some problems.”
That’s it sir! Every thing that is made in this world will certainly have manufacturing date and expiry date. Then the expiry date means that, after that date, the particular thing cannot be used as it loses its nature. *There is no specific date on which God (who created this world and everything we see) was created! He neither has an expiry date! Scripture says, He is the same yesterday and today and forever.
The Grace, the kindness, the blessings He give us also do not change… This is called Alpha, Omega… They are the first and last letters in Greek!! If our lives are to be immortal, we are to firmly hold on to our God!!! Bye sir!”
I am the Alpha and the Omega, the Beginning and the End, the First and the Last.” (Rev 22:13) Amen!