
சப்பாணியை
கர்த்தர்
பேதுரு மூலமாகத்
தொட்டார்
(அப்போஸ்தலர் 3)
இயேசுவின்
நாமத்தைப்பற்றும்
விசுவாசத்தினால்
அவருடைய
நாமமே
சப்பாணியை
குணமாக்கி
சத்தியத்திற்கு
சாட்சியாய்
நிற்கவைத்து,
சபைக்குள்
நடக்கவைத்தது.
துள்ள வைத்தது.
துதிக்க வைத்தது
குதிக்க வைத்தது
(அப்போஸ்தலர் 3:8,9)
அன்றைய தினம்
அந்த அலங்கார வாசல்
அற்புதத்தின் வாசலாய் முன்னாள் சப்பாணியால்
ரிப்பன் வெட்டி
திறந்துவைக்கப்பட்டது.
அன்றுமுதல் அந்த
நாற்பதாண்டுச் சப்பாணி
நடக்க ஆரம்பித்தான்!
எதிலே?
சத்தியத்திலே!
அதுமுதல்
நிற்கத் தொடங்கினான்!
யாரோடு?
அப்போஸ்தலரோடு!
அற்புதத்தைப்
பெற்றுக்கொண்டவுடன்
தலைமறைவாகிவிடுவதற்கு
அவன்
அந்த ஒன்பது
குஷ்டரோகிகளின்
உடன்பிறவா
சகோதரன் அல்ல!
தன்னை சுகமாக்கின
இயேசுவுக்கு சாட்சியாக,
தனக்கு சுவிஷேசம் அறிவித்து
தனது விடுதலைக்காக
ஊழியம் செய்த
அப்போஸ்தலரோடு
நின்றான்.
“சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன்
அவர்கள் அருகே நிற்கிறதைக்
கண்டபடியால்,
எதிர்பேச அவர்களுக்கு
இடமில்லாதிருந்தது”
(அப்போஸ்தலர் 4:14)
நீங்கள் எதிலே
நடக்கிறீர்கள்?
யாரோடு
நிற்கிறீர்கள்?
“உம்முடைய
பிள்ளைகளில் சிலர்
சத்தியத்திலே
நடக்கிறதை
நான் கண்டு;
மிகவும்
சந்தோஷப்பட்டேன்“
(2 யோவான் 4)
உங்களைக் கர்த்தருக்குள்
நடத்தினவர்களோடு
நிற்கிறீர்களா?
தன்னை
நடத்தினவர்களுக்கு
தன்னால் பிரச்சனை
எழும்பியிருக்கிறது
என்பதை அறிந்தவுடன்
அந்த அப்போஸ்தலரோடு
நின்றான்.
அவன் மாத்திரம்
அங்கிருந்து ஓடியிருந்தால்?
அப்போஸ்தலர்கள் பாடு
பெரும்பாடுதான்!
அவனைக் கண்டவர்களால்
வாய்க்கு வந்ததை
கண்டபடி பேச
அவர்களால்
கூடாமல் போயிற்று!
கர்த்தரின் எழுத்தாணி
நல்லாசான்
பாஸ்டர்
இஸ்ரேல் வித்ய பிரகாஷ் B.Com., M.Div.,
போதகர் / எழுத்தாளர் /
வானொலிச் செய்தியாளர்
91-77080 73718
