பாய்ந்தோடும் நீர் வெள்ளத்தைத் தேக்கி
அணைக்கட்டு கட்டி பாய்ச்சினால் தான்
பலன் காணமுடியும்


காட்டாறு பயிரை வளர்க்காது
நீர்வீழ்ச்சி தாகத்தைத் தீர்க்காது


அமர்ந்த நீரோடையில்
அள்ளிப் பருகினால்
தாகம் தீரும்

கட்டுப்பாடு இல்லாத வாழ்வும்
அணைக்கட்டு இல்லாத வெள்ளமும்
ஆபத்து தான்


ஆவிக்குரிய வாழ்வில்
அபிஷேகத்தைத் தேக்கி வைக்க
அணைக்கட்டு கட்டு


அபிஷேகத்தை வீணாக்காதே!
அனல் மூட்டி எழுப்பிவிடு

எசேக்கியா ராஜாவை
ஏறிட்டுப் பார்


எசேக்கியா கீயோன் என்னும்
ஆற்றிலே அணைகட்டி,

அதின் தண்ணீரை மேற்கேயிருந்து
தாழத் தாவீதின் நகரத்திற்கு
நேராகத் திருப்பினான்;

எசேக்கியா செய்ததெல்லாம்
வாய்த்தது.(2 நாளாகமம் 32:30)


நீ செய்வது வாய்க்க வேண்டுமா?

அணைக்கட்டை கட்டிவிட்டு
முட்டுக்கட்டை போடாதே

முழங்காலை முடக்கிவிடு
கண்ணீரை ஊற்றிவிடு

அதிகாலை எழும்பிவிடு
அபிஷேகத்தால் நிறைந்துவிடு

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
இயக்குனர் – இலக்கிய துறை -tcnmedia.in
Radio SpeakerAaruthal FM (Daily at 06:00 a.m.)