நம்மை சீக்கிரம் விழத் தள்ளும் பாவங்களும் அவற்றை வெற்றி பெறுவதும் எப்படி?

நம்மை சீக்கிரம் விழத் தள்ளும் பாவங்களும் அவற்றை வெற்றி பெறுவதும் எப்படி?

கிறிஸ்துவின் அன்பை ருசிபார்த்த பின்னர், அசுத்தமான அருவருப்பான பாவங்களில் சிக்கி கொண்டால் பின்னிலமை அதிக கேடு என்றும், அவர்கள் புதுப்பிக்கப் பட முடியாது என்றும் வசனம் நமக்கு கற்று தருகிறது. எனவே நம்மை விழ தள்ளும் பாவங்கள், ஜென்ம பாவங்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். நம்மை சீக்கிரம் விழத் தள்ளும் பாவங்கள்.

1. சிந்தையின் மூலம், எண்ணங்கள் மூலம் வரும் மேட்டிமை, ஆணவம், கர்வம், அகங்காரம், பெருமை, கர்த்தருக்கு மகிமை செலுத்தாமல் இருப்பது, நம்மை மேன்மையாக கருதுதல்.

2. கண்களின் மூலம் வரும் இச்சை, opposite பாலினத்தில், கொண்டுள்ள அதீத ஈர்ப்பு, கவர்ச்சி, வசீகரம், பிறரது அந்தரங்களை ரகசியங்களை அறிய முற்படும் அந்நிய காரியங்களில் தலையிடும் பார்வை etc ? அந்தரங்க கோளாறு மற்றும் கண்களின் கோளாறு.

3. மாம்சீக கவலை, ஐஸ்வரியத்தின் மயக்கம், மாம்சத்தின் வழிகளில் நடந்து, பொறாமை, எரிச்சல், கோபத்தின் அடிப்படையில் தீர்மானம் எடுத்தல், என்ன குடிப்போம், புசிப்போம், வாங்குவோம், மாம்சத்தை எப்படி திருப்தி படுத்தலாம் என்கிற மாம்ச கவலை சுய திருப்தி அற்ற வாழ்வு

4. உலகத்தில் இருந்து வரும் எதிர்ப்பு, அவைகளால் உண்டாகும் ஒருவித பயம், சமரசம், நடுக்கம், என்ன நடக்குமோ என்கிற சந்தேகம், உலகத்தை பெரிதாக பார்த்து நம்மை மட்டிடும் complexity போன்ற காரியங்கள்

இவைகளில் சிக்குண்டால் நமக்கு கொடுக்கப்படும் பெயர்கள்!

அஞ்ஞானிகள்
பின்மாற்றகாரர்கள்
குழந்தைகள்/ பெலவீனர்கள்
நாய்கள்
பன்றிகள்
பரிதவிக்கப்பட்டவர்கள்
ஆக்கிணைக்குஉட்பட்டவர்கள்.

இவைகளில் ஜெயம் கொடுக்கும் சுபாவங்கள்

A.கிறிஸ்துவின் சிந்தையாகிய தாழ்மை

B. கண்களின் கட்டுப்பாடு. கண்களோடு உடன்படிக்கை செய்தல்.

C. போதும் என்கிற திருப்தி உள்ள வாழ்வு.

D. விசுவாசத்தோடு கூடிய தைரியம். உள்ளான பெலன்.

இந்த சுபாவங்களை பெறுவது எப்படி?

கிறிஸ்துவின் அன்பினால் நிறைய வேண்டும்.

கிறிஸ்துவின் அன்பில் நிறைதல் என்றால்?

  1. அவரை விசுவாசித்தல்
  2. அவரது இரத்தத்தை நம்புதல்
  3. அவரது சிலுவையை நமது தனிப்பட்ட வாழ்வில் சுமத்தல்
  4. அவரது சாயலை பெறுதல்/ அவரை போல மாறுதல்
  5. அவரது ராஜ்யத்தில்/ ஆளுகையில் வாழ்தல்.
  6. அவரது சுவிசேஷ பாடுகளில் பங்கு கொள்ளுதல்.
  7. அவரது சித்தம் செய்தல்.

களங்கம் இல்லாத திருவசனத்தின் மேல் வாஞ்சையாக இருத்தல்.

  1. கிறிஸ்துவின் சத்தியத்தை அறிதல் அதற்கு கீழ்படிதல்
  2. கிறிஸ்துவை அறிகிற அறிவில் வளருதல்
  3. கிறிஸ்துவின் உபதேசங்களைக் கைகொண்டு அவைகளில் நிலைத்து இருத்தல்
  4. கிறிஸ்துவை வேத வாக்கியங்களின் படி திருஸ்ந்தாந்தப்படுத்துதல்.

கிறிஸ்துவை போல பாடுபடும் சிந்தை வேண்டும்.

  1. அவமானங்கள் பரியாசங்கள் சகிக்க முன் வர வேண்டும்.
  2. அப்படிப்பட்ட சூழலில் கிறிஸ்துவை நோக்கி பார்க்க வேண்டும்.
  3. பொறுமை மற்றும் நீடிய பொறுமையை இந்த சூழலில் கற்று கொள்ள வேண்டும்.
  4. பாடுகள் நம்மை கிறிஸ்துவின் சுபாவத்தில் நடத்தும் என்பதை கற்று கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவில் உள்ள மேலானவைகளை தேட வேண்டும்.

  1. இடைவிடாமல் பரிசுத்த ஆவியில் ஜெபிக்கும் சுவாபம் வேண்டும்.
  2. வசனத்தின் படி சிந்திக்க கற்று கொள்ள வேண்டும்.
  3. பரலோகத்தில் உள்ளவைகளை சிந்தித்து, அவைகளை தேட வேண்டும்.
  4. பரலோக ஆசீர்வாதங்கள் குறித்த எண்ணம் அதிகரிக்க வேண்டும்.

இவைகளில் பெருக நாம் என்ன செய்ய வேண்டும்? கிறிஸ்துவின் வாக்குத்தத்தமாகிய பரிசுத்த ஆவியின் நிறைவில் அனுதினம் வாழ கற்று கொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியானவருக்கு கொடுக்கப்பட்ட பெயர்களின் அடிப்படையில் தியானித்து வாழ்வை நடத்தும் அறிவு வேண்டும்.

உணர்வின் ஆவியானவர். பாவத்தை நீதியை குறித்து கடிந்து கொண்டு கண்டித்து உணர்த்துவார்.

அன்பின் ஆவியானவர். கிறிஸ்துவின் அன்பில் நம்மை நிறைத்து நெருக்கி ஏவுவார்.

தெளிந்த புத்தியின் ஆவியானவர். ஞானம் மற்றும் விவேகம் இவரிடதில் இருக்கிறது.

போதிக்கும் ஆவியானவர். கிறிஸ்துவின் சகல சத்தியங்களின் படி நம்மை நடத்தி, போதித்தி நடத்துவார்.

பெலத்தின் ஆவியானவர். மனித, உலக பயத்தை போக்கி, தைரியம் மற்றும் பெலன் கொடுத்து நம்மை சாட்சியாக மாற்றுபவர் இவரே.

விண்ணப்பத்தின் ஆவியானவர். ஜெபிக்க தெரியாமல் இருக்கையில் வாக்குக்கடங்காத பெருமூச்சோடு ஜெபிக்க துணை செய்கின்றார். அந்நிய பாசையின் ஜெபம், ஆவியின் ஜெபம் வல்லமை உள்ளது.

கடைசியாக கிருபையின் ஆவியானவர். கிருபையினால் தான் மீட்பு பெறுகிறோம். இந்த கிருபையால் நம்மை நடத்தி, கிறிஸ்துவின் சிந்தை தந்து நம்மை பிதாவின் பரலோகம் கொண்டு செல்பவர் இந்த பரிசுத்த ஆவியானவர் தான்.

எனவே இவரில் நிறைந்த வாழ்வு இவ்வுலகில் நம்மை பராமரித்து, பரிசுத்தப்படித்தி பரலோகம் கொண்டு செல்லும். ஏனெனில் அவருடைய ஆவி இல்லாதவன் அவருடையவன் அல்ல, இந்த பரிசுத்த ஆவியானவர் தான் நம்மை கிறிஸ்துவின் எக்காள சத்தம் கேட்க பண்ணுகிறவர். கிறிஸ்துவின் ராஜ்யத்தில் கூட்டி சேற்பவரும் இந்த பரிசுத்த ஆவியானவர் தான். எனவே,

கர்த்தர் தாமே நம்மை, சகல அசுத்தம், மற்றும் மாசு நீங்க பாதுகாத்து அவரை போல மாற்றி, அவரது வருகையில் சேர நம்மை கறை திறையற்ற மணவாட்டி ஆக மாற்றுவாராக! ஆமென்.

செலின்