A. கர்த்தரை கிறிஸ்துவை அறிகிற அறிவில் பெருக வேண்டும்.

அவர் இன்னும் சர்வ வல்லவர்.
அவர் இன்னும் சர்வஞானி
அவர் இன்னும் எல்லா நாமத்துற்கும் மேலான நாமம் உடையவர்.
அவர் இன்னும் சபைக்கு தலைவர் மற்றும் மகா பிராதன ஆசாரியர்.

எனவே இந்த உபத்திரவங்களில் பின்வாங்கி போகாதபடி, இந்த பாடுகளின் மத்தியிலும் அவரே உயர்ந்தவர் என்கிற விசுவாசத்தில் பெருகி, பாடுகளின் மத்தியில் அவரை அறிகிற அறிவில் பெருகி, அவரது உயிர்த்தெளுதலின் வல்லமையில் சத்துவத்தில் பெருக வேண்டும். இதை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். அப்போது தான் அக்கினியின் நடுவில் உலாவின, சிங்கத்தின் வாயை அடைத்த, சிறைச்சாலையில் இறங்கி பரிசுத்தவான்களை விடுதலையாக்கின கிறிஸ்துவே சர்வவல்லவர் என்று எல்லா நாவும் அறிக்கை செய்ய பண்ணுவார். அப்படிப்பட்ட கிறிஸ்துவின் மேல் வைக்கும் விசுவாசம் தான் பாடுகளை, உலகத்தை ஜெயிக்கும்.

B. கிறிஸ்து கற்று தந்த ஜெபத்தின் மேன்மையை தரித்து கொள்ள வேண்டும்.

பயமுறுத்தல், நெருக்கடிகள் மத்தியில் ஜெபித்தபோது தான் அவர்கள் ஜெபித்து இடம் அசைந்தது.

பேதுரு சிறையில் இருந்த போது சபை செய்த ஊக்கமான் ஜெபம் தான் சிறைச்சாலை முதலாம் காவல், இரண்டாம் காவல் போன்ற காவல்களை தாண்டி பேதுருவை கர்த்தர் வெளியே கொண்டு வந்தார்.

அந்தரங்க சபை ஜெபம், தனிப்பட்ட அந்தரங்க ஜெபம் அரண்மனைகள் மற்றும் ஆளுகைகளை ஒரு பதம் பார்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கிறிஸ்துவின் நாமத்தில், பிதாவின் சித்தத்தில் ஜெபிக்கும் போது அதுவே விடுதலை என்பதை அறிந்து ஜெபிக்க கற்று கொள்ள வேண்டும். கற்று கொடுக்க வேண்டும்.

ஜெபித்த தானியேல், எஸ்தர், நேகேமியா, அபோஸ்தலர்கள் மற்றும் சபை தான் விடுதலை பெற்றது.

C. கிறிஸ்துவின் சத்தியத்தில், உபதேசத்தில் பெருக வளர வேண்டும்.

ஆவிக்குரிய அப்போஸ்தல் சத்தியத்தின் அடிப்படையில் உறுதியாக தரித்து இருக்க வேண்டும். உலக ஆசீர்வாதம், உலக மேன்மை குப்பை என்று எண்ணப்பபட வைக்கும் ஆவிக்குரிய மேலான சத்தியங்கள் போதிக்கப்பட வேண்டும். சிலுவையின் உப்தேசமாகிய பாடுகள், மரணம், உயிர்த்தெளுதல் போன்றவற்றை அறிவிக்க வேண்டும்.

எப்படியும் மரணம் நம்மை சந்திதிக்கும், நாம் பரலோக ராஜ்ஜியத்தின் பிள்ளைகள், இந்த உலகம் நமக்கு சாத்தியமில்லை என்கிற அடிப்படை உபதேசதில் உபதேசித்து கொடுக்க வேண்டும்.

எப்போதும் கிறிஸ்துவை சந்திக்க ஆயத்தம் வேண்டும். மரிக்க தயாராக வேண்டும் என்கிற நித்திய ஜீவனுக்கு ஏற்ற சத்தியம் பேசப்பட வேண்டும்.

பாடுகள் வழியாக தான் தேவரஜ்யம் செல்ல வேண்டும், எனவே பாடுபட வேண்டும், சிலுவை சுமக்க வேண்டும் என்கிற சீசத்துவ பாதையில் நடத்த வேண்டும்.

இந்த உலகத்தில் ஜீவிக்க கிறிஸ்துவாகிய சத்தியம் மறுதலிக்க படலாம் ஆனால் கிறிஸ்துவை மறுதலிக்கும், கிறிஸ்துவை விட்டு பின்வாங்கி போனால் பரலோகராஜுயம் அப்படிபட்டவர்களை மறுதலிக்கும் என்கிற மெய்யான சத்தியத்திற்கு வர வேண்டும். நாம் இம்மைக்கு உரியவர்கள் அல்ல பரத்திற்க்கு உரியவர்கள் என்கிற அறிவில் பெருக வேண்டும்.

D. கிறிஸ்துவின் வல்லமையை தரித்து கொள்ள வேண்டும்

கிறிஸ்துவின் போராயுதங்களை தரித்து கொண்டு அரன்ங்களை நிர்மூலம் ஆக்கும் கிருபையை பெற்று கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவின் கிருபை மற்றும் வல்லமையை தரித்து கொண்டு, காத்திருந்து அவரது பரிசுத்த ஆவியின் பெலனை தரித்து கொண்டு அவரது வழிநடத்துதல்களுக்கு விட்டு கொடுத்து அவர் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும். பரிசுத்தம், துதி, சோத்திரம், கிறிஸ்துவின் உன்னத அனுபவங்களில் வளர வேண்டும்.

ஆவிக்குரிய கனிகளை கொடுத்து நற்கிரியைகளுக்கு ஏற்ற பலன் பெற கிறிஸ்துவில் பூரனராக வளர வேண்டும். ஆவிக்குரிய சாட்சி மற்றும் வெற்றியுள்ள வாழ்வின் ரகசியங்களை அறிந்து கொள்ள வேண்டும்.

ஆவிக்குரிய வரங்கள் நம்மில் அதிகமாக செயல்பட விட்டு கொடுக்க வேண்டும்.

கிறிஸ்துவில் உள்ள மேலான அனுபவங்களில் பெருகி அவரின் வல்லமை மற்றும் பொக்கிஷங்களில் வளர்ந்து அவரது வல்லமை நம் மூலம் சபை மூலம் நமது ஊழியங்கள் மூலம் வெளிப்பட அந்த கிறிஸ்துவின் வல்லமைக்க்கு விட்டு கொடுக்க வேண்டும். கர்த்தரோ ஆவியானவர் ஆவியானவர் எங்கயோ அங்கே விடுதலை உண்டு.

E. கிறிஸ்துவின் சிந்தையை தரித்து கொள்ள வேண்டும்.

நமது மேன்மைகள் சிலுவையில் அறையப்பட விட்டு கொடுக்க வேண்டும்.

பரியாசங்கள், நிந்தைகள், அநியாயங்களை சகிக்க பொறுக்க விட்டு கொடுக்க வேண்டும்.

நம்மை வெறுமையாக எண்ணி, நம்மை ஒரு பொருட்டாக சிந்திக்கும் எண்ணத்தை தூக்கி எறிய வேண்டும்.

எதையும் எதற்கும் என்றும் கொள்ளையை போன்று அபகரிக்கும் எண்ணம் வேண்டாம். ஏனெனில் எல்லாம் இங்கு விட்டு விட்டு தான் போக வேண்டும்.

எளிமையாக, எளிதில் நெருங்கி பழகும், கிறிஸ்துவின் சாந்தம் மற்றும் கிறிஸ்துவின் நுகத்தை சுமக்க கற்று கொள்ள வேண்டும்.

ஏனெனில் கிறிஸ்து பாடுகளை ஏற்றுக்கொண்டு, அவமானங்களை சகித்து தான் சிங்காசனத்தில் வீற்று இருக்கிறார்.

F. கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்க ஆயத்தமாக இருக்க வேண்டும்.

பாடுகளின் மத்தியிலும் நற்காரியங்களை அறிவிக்க ஆயத்தம் வேண்டும். கிறிஸ்துவின் சிலுவை, அவரது இரத்தத்தின் வல்லமை, அவரால் உண்டாகும் நித்திய ஜீவன், நரகம் மற்றும் மோட்சம் பிரசங்கிக்கப்பட வேண்டும்.

கிறிஸ்துவின் சிலுவையின் உபதேசத்தை பேசி அதினால் வரும் தேவபேலனை அனுபவிக்க வேண்டும்.

மனந்திரும்பி, மாறுபாடான சந்ததியை விட்டு விலகி, ஞனாஸ்தானம் பெற்று பரிசுத்தாவியின் வரத்தை பெற்று கொள்ளுங்கள், ஏனெனில் ஒரு பெரிய கோபாக்கினையின் நாளும் கிறிஸ்துவின் வருகையும் வருகிறது என்று அறிவிக்க வேண்டும்.

கிறிஸ்து தைரியமாக பிரசங்கிக்கப் பட பிரசங்கியார்கள் எழும்பப்பட ஜெபிக்க வேண்டும். ஊழியர்களுக்காக ஜெபிக்கும் ஜெபம் பெருக வேண்டும்.

கிறிஸ்து அறுவிக்கப்பாடவிட்டால், எப்படி அறியப்படுவார்? அவரது வல்லமை எப்படி விளங்கும்? அப்படி அறிவிக்காவிட்டால் நமக்கு ஐயோ என்பதை நாம் அறியாவிட்டால் எப்படி?

G. கடைசியாக கிறிஸ்துவின் அன்பில் பெருகவேண்டும்

கிறிஸ்துவின் அன்பின் அடிப்படையில் வரும் ஐக்கியம் தான் இந்த கிறிஸ்தவத்தின் அடிப்படை. அன்பே பிரதானம். கிறிஸ்து அம்பாகவே இருக்கிறார்.

இந்த அன்பு நம்மை நெருக்கி ஏவ வேண்டும்.

பஞ்சம், பட்டயம் என்ன வந்தாலும் கிறிஸ்துவின் அன்பை விட்டு என்னை பிரிப்பவன் யார் என்கிற ஐக்கியத்தில் வளர வேண்டும்.

அன்பு சகலத்தையும் சகிக்கும். அன்பு நம்மை கடைசி வரை நிலைநிற்க செய்யும், ஜீவ கீரீடத்தை பெற்று தரும் என்கிற மையப்பகுதியில் வர வேண்டும்.

அவர் என்னை அடித்தாலும், நோருக்கினாலும், உடைத்தாலும், காயப்படுத்தினாலும் அவர் கையிலே தான் நான் விழுவேன், என் மீட்பர் உயிரோடு இருக்கிறார், என் சொந்த கண்களால் அவரை காண்பேன், சிலுவையா, என்னை தலைகீழாக அடியுங்கள் அவர் பாதத்தையே முத்தம் செய்து அவரையே அண்டி கொள்வேன் அதுவே என்பாக்கியம்! என்று கிறிஸ்துவின் அன்பில் நிலைத்து நின்ற மேகம் போன்ற திரளான சாட்ச்சிகள் நம் முன்பே இருக்க, இன்றும் நீ என்னை நேசிக்கிறாயா? என்கிற சத்தத்தை கேட்டு தைரியமாக முன் செல்வோம்! கர்த்தர் கிருபை நம்மோடு இருப்பதாக!

செலின்

NB: இந்த பதிவு எழுத வித்திட்ட பாஸ்டர். ஜெர்ரி மற்றும் அதற்கு கூடுதல் வலு சேர்த்த பாஸ்டர் ராஜசேகர் மற்றும் பாஸ்டர் கலை அவர்களுக்கும் மிகவும் நன்றி.