How do you get relaxation?
How do you get relaxation?

” எப்படி எனக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் ? ” என்ற ஏக்கம் ஒவ்வொரு மனதிலும் பெருமூச்சாக உழன்று கொண்டுதான் இருக்கிறது. நீங்களும் அதுபோன்ற பாரத்திலும் , வேதனைகளிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தால் இந்த அழைப்பு உங்களுக்குத்தான். பெரிய பெரிய கோடீஸ்வரர்களை அல்ல , அதிகமாக படித்த மேதாவிகளையும் அல்ல . அவர் தகுதியுடையவர்களாகக் கருதுவது வருத்தப்படுகிறவர்களையும் , பாரம் சுமக்கிறவர்களையுந்தான் .

இதை வாசிக்கும் போதே “இந்தத் தகுதி எனக்கு இருக்கிறது . இந்தத் தகுதி எனக்கு இருக்கிறது” என்று உங்கள் மனது , தாயை நோக்கிக் கரங்கள் நீட்டியபடி ஓடி வரும் ஒரு குழந்தையைப் போல அவரை நோக்கி ஓடி வரும் . அவரே சகல ஆறுதலின் தேவனாயிருக்கிறார் (2 கொரிந்தியர் 1 : 3) .

எந்தப் பிரச்சனையில் நீங்கள் இருந்தால் என்ன ? வேதம் சொல்லுகிறது. “அவரிடத்தில் திரளான மீட்பு உண்டு “
(சங்கீதம் 130 : 38). மனிதக் கண்கள் தேடுகிற தகுதிகள் பெரும்பாலும் பணத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கும் . பணம் , படிப்பு என்ற தகுதிகள் இல்லாததால் எத்தனை முறை அவமானப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள் ? நினைத்துப் பாருங்கள் . ஆனால் ஏசுவோ உங்கள் வருத்தத்தையும், பாரத்தையுமே தகுதியாகக் கருதுகிறார்.

தகுதி இல்லாதவர்கள் என்று நீங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிற நிலையையே அவர் உங்களை அரவணைத்துக்கொள்ளுவதற்கான தகுதியாக நினைக்கிறார் .ஏசு கொடுக்கும் இளைப்பாறுதலைப் பெற்றுக் கொள்ள இப்போதே அரிடம் வாருங்கள் . அவர் எதிர்பார்க்கும் தகுதி உங்களிடந்தான் இருக்கிறது .

” தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான், தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர் “

சங்கீதம் 51 :17