(மொழிபெயர்ப்பு என்னுடையது. ஆனால் கருத்து என்னுடையதல்ல. ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் உங்கள் விருப்பம்)
HOW TO IDENTIFY PHARISEE’S IN YOUR CHURCH
உங்கள் சபையிலுள்ள பரிசேயர்களை அடையாளம் காண்பது எப்படி?
(1). They go to work early but come to church late.
அவர்கள் வேலைக்கு சீக்கிரமே போவார்கள், ஆனால் சபைக்கு தாமதமாக வருவார்கள்.
(2). They beg their boss when they err but threaten to leave church whenever there is a misunderstanding.
தவறு செய்யும்போது தங்கள் மேலதிகாரியிடம் கெஞ்சுவார்கள். ஆனால் சபையில் கருத்து வேறுபாடுகள் வரும்போது சபையை விட்டு போகப்போவதாக மிரட்டுவார்கள்.
(3). They work hard to be promoted at work but treat the work of God with levity.
பதவி உயர்வுக்காக கடினமாக உழைப்பார்கள். ஆனால் தேவனுடைய வேலையை அலட்சியமாக நினைப்பார்கள்.
(4). They pay all their dues in the workplace but refuse to pay tithe or willingly give offering in the church.
வேலைஸ்தலத்தில் செலுத்தவேண்டிய எல்லா கட்டணங்களையும் செலுத்துவார்கள், ஆனால் சபைக்கு தசமபாகம் அல்லது மனப்பூர்வமான காணிக்கை கொடுக்கமாட்டார்கள்.
(5). They buy costly things for their boss to get favor but can’t even buy airtime for their pastor.
தங்கள் மேலதிகாரிகளுக்கு விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை வாங்குவார்கள். ஆனால் சபைப்போதகருக்கு சிறு உதவியும் செய்யமாட்டார்கள்.
(6). When they are not going to be in the office, they take permission ahead from their superior; but expect pastor and elders to pay them visits when they miss church without notice.
வேலைக்கு போகமுடியாவிட்டால் முன்னதாகவே தெரிவித்து மேலதிகாரிகளின் முன்னனுமதி பெறுவார்கள். ஆனால் முன்னறிவிப்பின்றி சபைக்கு வராமல் போதகரும் மூப்பர்களும் வீட்டில்வந்து அவர்களை சந்திக்கவேண்டும் என்று விரும்புவார்கள்.
(7). They fear and respect their boss than their pastor and even sometimes more than God.
தங்கள் போதகருக்கும் மேல், சில நேரங்களில் தேவனுக்கும் மேல் மேலதிகாரிக்கு பயப்படுவார்கள், மதிப்பு கொடுப்பார்கள்.
(8). When they are sick they manage to go to work but they cannot manage to come to the church.
சரீர பெலவீனத்திலும் வேலைக்கு செல்வார்கள். ஆனால் சபைக்கு வர தயங்குவார்கள்.
(9). They take official query serious but handle divine rebuke with disdain.
அலுவலக விசாரணைகளை கவனமாக எடுத்துக்கொள்வார்கள். ஆனால் தெய்வீக எச்சரிப்புகளை வெறுப்பார்கள்.
(10). They tolerate their colleagues in the workplace but cannot tolerate the brethren.
வேலைஸ்தலத்தில் உடன் வேலை செய்பவர்களை சகித்துக்கொள்வார்கள். ஆனால் சகோதரர்களை சகிக்க அவர்களால் முடியாது.
(11). They turn off their phones at workplace, but use calls to distract other worshippers in Church and even Facebook and chat in church.
வேலைஸ்தலத்தில் அலைபேசியை அணைத்து வைப்பார்கள். ஆனால் சபையில் ஆராதனைக்கு இடையூறாக பேரசிக்கொண்டும் செய்திகள் அணுப்பிக்கொண்டும் இருப்பார்கள்.
(12). They can work overtime in the office but get offended at the pastor if he’s not closing at the stipulated time.
அலுவலகத்தில் ஓவர் டைம் வேலை செய்வார்கள். ஆனால் ஆராதனையை குறித்த நேரத்தில் முடிக்காவிட்டால் பாஸ்டரை குறை சொல்வார்கள்.
Rev. Prabhu Ramalinkam