அனுதினமும் நாம் செய்ய வேண்டிய விசுவாச அறிக்கை!

1. தலை:
கர்த்தர் என் தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்கிறார் ஸ்தோத்திரம் (சங்23:5).

2. முகம்:
கர்த்தர் அவர் முகத்தை என் மேல் பிரகாசிக்கச் செய்கிறார் ஸ்தோத்திரம் (எண்6:25).

3. நெற்றி:
கர்த்தர் என் நெற்றியில் அவருடைய நாமத்தை தரிப்பித்திருக்கிறார் ஸ்தோத்திரம் (உபா28:10).

4. கண்:
கர்த்தர் என் கண்களைக் கண்ணீருக்குத் தப்புவிக்கிறீர் ஸ்தோத்திரம் (சங்116:8).

5. செவி:
கர்த்தர் நான் கேட்கும்படி என் செவிகளைக் கவனிக்கச் செய்கிறார். ஸ்தோத்திரம் (ஏசா50:4).

6. வாய்:
கர்த்தர் என் வாயை நன்மையால் திருப்தியாக்குகிறார் ஸ்தோத்திரம் (சங் 103:5).

7. உதடுகள்:
கர்த்தர் என் உதடுகளைப் பரிசுத்தப்படுத்துகிறார்.
ஸ்தோத்திரம் (ஏசா6:7).

8. நாவு:
கர்த்தர் எனக்கு கல்விமானின் நாவைத் தருகிறார்.ஸ்தோத்திரம். (ஏசா50:4).

9. கழுத்து:
கர்த்தர் கழுத்திலிருந்து என் நுகத்தை நீக்குகிறார். ஸ்தோத்திரம் (ஏசா10:27).

10. தோள்:
கர்த்தர் என் தோள்களை சுமைக்கு விலக்குகிறார் ஸ்தோத்திரம் (ஏசா10:27).

11. கை:
கர்த்தர் என் கைகளின் பிரயாசத்தை ஆசீர்வதிக்கிறார் ஸ்தோத்திரம். (சங்128:2).

12. விரல்கள்:
கர்த்தர் என் விரல்களை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார் ஸ்தோத்திரம் (சங்144:1).

13 மார்பு:
கர்த்தர் எனக்கு நீதியின் மார்க்கவசத்தைத் தருகிறார்.ஸ்தோத்திரம் (எபே6:14).

14. வயிறு:
கர்த்தர் என்னைத் திருப்தியாகப் போஷிக்கிறார் ஸ்தோத்திரம். (நீதி13:25)

15. முதுகு:
கர்த்தர் என் பாவங்களை எல்லாம் அவர் முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டார். ஸ்தோத்திரம். (ஏசா38:17).

16. இடுப்பு:
கர்த்தர்எனக்கு சத்தியம் என்னும் அரைக்கச்சையை உடுத்துவிக்கிறார். ஸ்தோத்திரம் (எபே6:14).

17. முழங்கால்:
கர்த்தர் என் முழங்கால்களை அவருக்கு முன்பாக முடங்கச் செய்கிறதற்காக ஸ்தோத்திரம். (ஏசா45:23).

18. கால்கள்:
கர்த்தர் என் கால்களை இடறலுக்குத் தப்புவிக்கிறார் ஸ்தோத்திரம். (சங்116:8).

19. பாதம்:
கர்த்தர் என் பாதம் கல்லில் இடறாதபடிக்குத் தூதர்களைத் தம் கைகளில் சுமந்து போகச் செய்கிறார் ஸ்தோத்திரம். (சங்91:12).

20. எலும்பு:
கர்த்தர் என் எலும்புகளையெல்லாம் நிணமுள்ளதாக்குகிறார் ஸ்தோத்திரம். (ஏசா58:11).

21. மாமிசம்:
கர்த்தர் என் மாமிசத்தை நம்பிக்கையோடே தங்கியிருக்கச் செய்கிறார் ஸ்தோத்திரம் (சங்16:9).

22. ஆத்துமா:
கர்த்தர் என் ஆத்துமாவை மரணத்துக்குத் தப்புவித்தார் ஸ்தோத்திரம். (சங்116:8)

தேவரீர் என் ஆவி,ஆத்துமா,சரீரம் முழுவதும் உமக்கே சொந்தம் .எனக்காய் ஜீவனைக் கொடுத்த
தேவனே,உமக்கே என்னை முற்றிலுமாய் அர்ப்பணிக்கிறேன், இயேசு கிறிஸ்து மூலமாய் ஆமென்,

அல்லேலூயா ! அல்லேலூயா ! அல்லேலூயா!