மனத்தாழ்மை

மனத்தாழ்மை என்பது கிறிஸ்தவ விசுவாசத்தின் ஒர் சிகரம். இன்று அநேகரிடம் சரீரத்தாழ்மை இருக்கிறது ஆனால், மனத்தாழ்மை இல்லை என்பது வேதனைக்குரிய ஒன்று. கர்த்தரை சேவிக்கும்படி அழைக்கப்பட்ட நமக்கு மனத்தாழ்மை மிகவும் அவசியம் (அப் 20:19). நமக்கு நல்லதொரு முன்மாதிரி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்” என்றார் (மத் 11:29). மனத்தாழ்மையை தேடும்படியே வேதமும் கூறுகிறது (செப் 2:3), கர்த்தரும் அதையே நம்மிடம் எதிர்பார்கிறார் (மீகா 6:8).

எசேக்கியாவின் நாட்களில் பஸ்கா ஆசரிக்கும்படி சிலர் மனத்தாழ்மையாகி எருசலேமுக்கு வந்தார்கள் (2 நாளா 30:11) என்று வாசிக்கிறோம். அதன் விளைவுகளை தொடர்ந்துள்ள வசனங்களில் நாம் காண முடியும்.

மனத்தாழ்மையின் விளைவுகள்: (2 நாளா 30ம் அதிகாரம்)

1. ஒருமனம். 30:1

2. பரிசுத்தம். 30:15,24

3. தங்களின் ஸ்தானத்திற்கு திரும்புதல் (சரி செய்தல்) 30:16

4. மகா ஆனந்தம். 30:21,23,25

5. கர்த்தரைத் துதித்தல். 30:21

6. கர்த்தருக்கடுத்த காரியத்தில் நல்ல உணர்வு. 30:22

7. விண்ணப்பம் பரலோகத்தில் எட்டியது. 30:27