நான் பாவம் செய்தேன்!
(1 சாமுவேல் 15:24 -30)

ராஜாவான சவுல் மட்டும்
இந்த அறிக்கையை
செய்யவில்லை.

ராஜாவான பார்வோனும்
அப்படியே சொன்னான்
“அப்பொழுது பார்வோன்
மோசேயையும் ஆரோனையும்
அழைப்பித்து;
நான் இந்த முறை
பாவம் செய்தேன்;
கர்த்தர் நீதியுள்ளவர்;
நானும் என் ஜனமும்
துன்மார்க்கர்.
(யாத்திராகமம் 9:27)

பிலேயாமும் இதே
வார்த்தையைச் சொன்னான் :

அப்பொழுது பிலேயாம்
கர்த்தருடைய தூதனை
நோக்கி: நான் பாவஞ்செய்தேன்;
வழியிலே நீர் எனக்கு
எதிராக நிற்கிறதை
அறியாதிருந்தேன்;
இப்பொழுதும்
உமது பார்வைக்கு இது
தகாததாயிருக்குமானால்,
நான் திரும்பிப் போய்விடுகிறேன்
என்றான். (எண்ணாகமம் 22:34)

ஆகாமல் போன
ஆகானும்
அப்படியே
சொன்னான்
அப்பொழுது ஆகான்
யோசுவாவுக்குப்
பிரதியுத்தரமாக;
மெய்யாகவே நான்
இஸ்ரவேலின் தேவனாகிய
கர்த்தருக்கு விரோதமாகப்
பாவஞ்செய்தேன்
.
(யோசுவா 7:20)

போர் செய்யப் போகாமல்
போர் செய்யும் இச்சைக்கு

இடமளித்த தாவீது ராஜாவும்
அப்படியே அறிக்கையிட்டான்
(1 பேதுரு 2: 11)

அப்பொழுது தாவீது
நாத்தானிடத்தில்:
நான் கர்த்தருக்கு
விரோதமாய்ப்
பாவஞ்செய்தேன்

என்றான்.

காசுக்காகக்
காட்டிக்கொடுத்த
யூதாசும்
அப்படியே
அறிக்கையிட்டான்

குற்றமில்லாத
இரத்தத்தை
நான் காட்டிக்
கொடுத்ததினால்
பாவஞ்செய்தேன்

என்றான் (மத்தேயு 27:4)

இந்த வரிசையில்
இளைய குமாரனும்
இணைகிறான்

தகப்பனே, பரத்துக்கு
விரோதமாகவும்
உமக்கு முன்பாகவும்
பாவஞ்செய்தேன்
(லூக்கா 15:18)

இத்தனை மனிதர்களில்
யார் உண்மையாகவே
Sincere என்று நீங்கள்
எண்ணுகிறீர்கள்?

பதிலைப் பதிவு
செய்யுங்கள்.

Rev. J. Israel Vidya Prakash B.Com., M.Div.,
Living Water Ministries Madurai
Director – tcnmedia Literature Dept.
NALLAASAAN – International Award – Malaysia -2021