நான்தான்
கொண்டிருக்கிறேனே
என்று நீங்கள் சொல்லலாம்

சாதாரணமாய் நடப்பது வேறு
இயேசுவோடு நடப்பது வேறு


நடப்பதெல்லாம் நன்மைக்கே
என்று காலையில் இரண்டு
கிலோமீட்டர் வாக்கிங்
போவது வேறு

நடந்ததெல்லாம் நன்மைக்கே
என்று பாடிக்கொண்டு
இயேசுவோடு நடப்பது வேறு
(ரோமர் 8:28)

தொல்லையிலிருந்து
துதியை நோக்கி
நடக்கும்போது
ஜெபிக்கவேண்டும்

இயேசுவோடு நடந்துகொண்டு
நம்மை அர்ப்பணிக்க வேண்டும்

சும்மா இயேசுவோடு
ஐம்பது வருஷமா
நடக்கிறேன்
என்பது வேறு

அர்ப்பணித்து அவரோடு
இசைந்து நடப்பது

என்பது வேறு.

அர்ப்பணிப்’பு என்ற பூ
குறிஞ்சிப் பூவைப் போல
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு
ஒருமுறை பூப்பதல்ல


இந்தப் பூ நித்தமும் பூக்கும்
பூ அதுதான்
அர்ப்பணிப்பு

நாம் நம்முடைய வாழ்வை
இயேசுவுக்கு
அர்ப்பணிக்க வேண்டும்.

சங்கீதம் இருபதில்
தாவீதும் அவனது படைகளும்
யுத்தத்திற்கு போகும் முன்பு
அவர்கள் ஜெபிக்கிறார்கள்
தேவனை ஆராதிக்கிறார்கள்

ஆபத்துநாளிலே கர்த்தர் உமது
ஜெபத்தைக் கேட்பாராக;
யாக்கோபின்
தேவனுடைய நாமம்

உமக்கு உயர்ந்த
அடைக்கலமாவதாக
என்றெல்லாம்
சொல்லுகிறார்கள்

இருபதாவது சங்கீதம்
ஒரு ஜெப சங்கீதமாகும், 

தாவீது இராஜாவுக்காக 
கர்த்தரிடத்தில்
ஸ்தோத்திரங்களை
ஏறெடுக்கிறார்கள்

அவர்கள்
இராஜாவுக்காக
தேவனிடத்தில்
விண்ணப்பம்
பண்ணுகிறார்கள் 
(சங் 20:1-4).

கர்த்தருடைய
இரட்சிப்பினால்
ஜனங்கள்
மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.

கர்த்தருடைய
ஜனங்களுக்கு ஜெயம்
கிடைக்குமென்றும்
 (சங் 20:5),
கர்த்தர் தாமே தாம்
அபிஷேகம்பண்ணினவரை
இரட்சிக்கிறார்

என்றும் (சங் 20:6)
விசுவாசித்து
ஜனங்கள் கர்த்தரைத்
துதிக்கிறார்கள்.

ஜனங்களுக்காகவும்
இராஜாவுக்காகவும்
பொதுவான ஜெபம்
ஏறெடுக்கப்படுகிறது
(சங் 20:7,8).

ஜனங்களுக்காக
விசேஷித்த ஜெபம்
ஏறெடுக்கப்படுகிறது

(சங் 20:9).

இந்த ஜெபமும் துதியும்
ஆராதனையும்
அர்ப்பணிப்பும்
தாவீது சந்திக்கப்போகும்
யுத்தக் களத்தின் சூழ்நிலையை
முற்றிலும் மாற்றிவிட்டது

தாவீதின் சர்வாங்க தகனபலி
பூரணமான அர்ப்பணிப்பை
குறிக்கிறது.

தேவனுக்கு தன்னை
அப்படியே
அர்பணித்துவிடுகிறார்
தாவீது ராஜா

நீர் செலுத்தும்
காணிக்கைகளை
எல்லாம் அவர் நினைத்து உமது
சர்வாங்க தகன பலியை
பிரியமாய் ஏற்றுகொள்வாராக  
(சங்கீதம் 20:3)

இன்றைக்கு நாம்
இயேசுவோடு இணைந்து
ஆவியானவரோடு இசைந்து
நடக்காதிருப்போமானால்

யுத்தம் வரும்போது
பிரச்சனை வரும்போது
நாம் அதை மேற்கொள்ள
ஆயத்தம் இல்லாதிருப்போம்.

யுத்தத்திற்கு ஆயத்தம்
இல்லையென்றால்
எப்படி ஜெயம் வரும்? 

குதிரை யுத்த நாளுக்காக
ஆயத்தமாக்கப்படும்
ஜெயமோ கர்த்தரால் வரும்

(நீதி. 21:31)

ஜெபத்தோடு
அர்ப்பணிப்பு
மிகவும் அவசியம்

அதுவே நம்மை
தொல்லை என்ற
உபாத்திரவ
எல்லை
யிலிருந்து
துதி என்ற
சோலைவனத்திற்குள்
அழைத்துச்செல்லும்.

நாளைக்கு அல்ல
இன்றைக்கே
உங்களை
அர்பணியுங்கள்.

அற்பமாய் உங்களைப்
ஏற இறங்கப் பார்க்கும்
இந்த மாய உலகில்


இயேசுவுக்கு உங்களை
அர்ப்பணித்துப்பாருங்கள்

வெற்றி நிச்சயம்.

Pastor J.Israel Vidya Prakash B.Com., M.Div.
Director – Literature Dept. tcnmedia.in
Radio Speaker – Aaruthal FM
Recipient of International Award Nallaasaan
Malaysia – 2021