உங்களுடைய கவணில் கவனம் வையுங்கள்! வித்யா’வின் விண் பார்வை

உங்களுடைய கவணில் கவனம் வையுங்கள்! வித்யா’வின் விண் பார்வை

தாவீது தன் சகோதரர்களைச்
சந்தித்து நலம் விசாரித்து
தகப்பன் கொடுத்து அனுப்பிய
ஆகாரங்களை
கொடுத்துவருவதற்காகவே
சென்றான் (1 Samuel 17:17,18)

ஆனால் அவன் அங்கே
சொன்ன சாட்சி, அவனுக்குள்
இருந்த வைராக்கியம்
எல்லாவற்றையும் பார்த்த சவுல்
9 அடி உயரமும் யுத்த
பயிற்சியும் பெற்ற
கோலியாத்துடன் போர் செய்ய
அனுமதி அளித்து
தனது ராணுவ உடைகளையும்
ஆயுதங்களையும்
போட்டுக் கொண்டு
போகச்சொன்னான்.

அவைகளை போட்டுகொண்டு
நடந்து பார்த்த தாவீது
இது எனக்கு
ஒத்துவராது
நான் இவைகளை
போட்டுகொண்டு
போகக்கூடாது
என்று
சொல்லிவிட்டான்.

ராஜா சொல்லிவிட்டார்
தட்டக்கூடாது என்று சொல்லி
மனுஷரை, ராஜாவை
பிரியப்படுத்தி
ஒத்துவராத உடைகளைப்
போட்டுகொண்டு போகவில்லை

இந்த தைரியம் அந்த
எபிரெய ஹீரோக்கள்
மூன்று பேருக்கு இருந்தது
அதனால் அக்கினியிலும்
அவியாமல் இருந்தார்கள்

சவுலுடையது வேண்டாம்
என்னுடையது போதும்

என்று சொல்லி
தன் தடியைக் கையிலே
பிடித்துக்கொண்டு,
ஆற்றிலிருக்கிற ஐந்து
கூழாங்கல்லுகளைத்
தெரிந்தெடுத்து, அவைகளை
மேய்ப்பருக்குரிய
தன்னுடைய அடைப்பப்பையிலே
போட்டு, தன் கவணைத்
தன் கையிலே பிடித்துக்கொண்டு,
அந்தப் பெலிஸ்தனண்டையிலே
போனான்.

ன் கவணை தன் கையிலே
பிடித்துக்கொண்டு
தன்னந்தனியாய் போனான்.

தன். தன் என்று வருவதைக்
கண் வைத்துக் கவனியுங்கள்.

“தன் விசுவாசத்தினாலே
நீதிமான் பிழைப்பான்”
( ஆபகூக் 2:4)

தாவீது தன்னுடைய கவணை
எடுத்துக்கொண்டு
களத்தில் இறங்கினான்.

இன்னொருவருடையதை
எடுத்துக்கொண்டு
களத்தில் இறங்கிவிடாதீர்கள்.
தோல்வியை சந்திக்க நேரிடும்
.

உங்களுடைய முழங்காலை
முடக்கி, உங்களுடைய
விசுவாசத்தில் நில்லுங்கள்.

கோலியாத்தை ஜெயித்துவிடலாம்.
உலகத்தையே ஜெயித்துவிடலாம்

மற்றவர்களிடமிருந்து பாடங்களை
கற்றுக்கொள்வது நல்லது.

ஆனால்
மிகவும் முக்கியமானது
என்னவென்றால்
உங்களுக்கு
நியமிக்கப் பட்டிருக்கிற
ஓட்டத்தில் நீங்கள்தான்
ஓடவேண்டும்,


உங்களுக்காக வேறு யாரும்
ஓட முடியாது.
வேறு யாரையும்
பார்த்துக்கொண்டு
ஓடவும் கூடாது

காலமெல்லாம் மற்றவர்களை
பார்த்து பரவசமடைந்து
அவர்களைப் பற்றியே
பேசிவிட்டு அவர்களது
ஜெப வாழ்க்கையை
புகழ்ந்துவிட்டு நாம் ஜெபிக்காமல்
இருந்துவிடக்கூடாது.

அவர்கள்
தேவன் தங்களுக்கு நியமித்த
ஓட்டத்தில் ஓடுகிறார்கள்.

உங்களுடைய ஓட்டத்தைக்
கவனியுங்கள்.

உங்களுடைய கவணில்
கவனம் வையுங்கள்.


உங்கள் அடைப்பைப்பை
அதாவது உங்கள்
இருதயத்திலிருந்து
வசனங்களை எடுத்து
கவணில் வைத்து சுழற்றுங்கள்.

கழற்றிபோடுங்கள்
சவுலின் வஸ்திரங்களை
அவன் ராஜாவாகஇருக்கட்டும்
அவன் ஆயுதங்களையும்
தூக்கிப் போடுங்கள்
அது உங்களுக்கு
பாரமாய் இருக்குமே.

சுழற்றுங்கள் கவணை
வெல்லுங்கள் கோலியாத்தை

ஒரே ஒரு கல்லை வைத்து
ஒரே ஒரு தடவை
சுழற்றி எறிந்தான்.

நீங்கள் எதைச் செய்ய
தேவன் உங்களுக்கு
கிருபை அளித்திருக்கிறார்?

தினமும் அந்த கிருபையாய்
பயன்படுத்துங்கள்


என்றாவது ஒருநாள் கோலியாத்
உங்கள் முன் நின்றால்
அந்தகிருபையைப்
பயன்படுத்தி அவனை வெல்லுங்கள்

அப்போஸ்தலர் 13:36 ல்
தாவீது தன் காலத்திலே
தேவனுடைய சித்தத்தின்படி
அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு
நித்திரையடைந்து,
தன்பிதாக்களிடத்திலே
சேர்க்கப்பட்டு,
அழிவைக் கண்டான்.

உங்க காலத்தில் தேவனுடைய
சித்தத்தின்படி
கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.

நோவா தன் காலத்தில்
இருந்தவர்களுக்குள்ளே
நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்
நோவா தேவனோடே
சஞ்சரித்துக்கொண்டிருந்தான்
(ஆதியாகமம் 6 : 9)

நானும் அப்படியே செய்கிறேன்.
என்னுடைய காலத்தில்
தேவனுடைய சித்தத்தின்படி
கர்த்தருக்கு கடந்த 35 ஆண்டுகளாக
ஊழியஞ்செய்துவருகிறேன்.

1986 ம் ஆண்டு முதல்
இன்றுவரை கர்த்தருக்கு
ஊழியஞ்செய்துவருகிறேன்.
Glory be to God.

Rev. J. Israel Vidya Prakash B.Com., M.Div.,
Director – Literature Dept. tcnmedia.in
Radio Speaker – Aaruthal FM
NALLAASAAN – Malaysia 2021
(91-77080 73718 Whatsapp call only)