மன உணர்வு (Intuition)தீடீர் உணர்ச்சிகள், தீடீர் சபலைகள் போன்ற உணர்ச்சிகரமான சூழல்களில் எது ஆரோக்கியமான உணர்வு என்று பகுத்தறிய அடிமனதில் சாந்தமாக அதே நேரத்தில் அழுத்தமாக ஏற்படும் உள்ளுணர்வுதான் இந்த மன உணர்வு. நன்மை தீமை வகையறுக்கவும், சரியான தீர்மானம் எடுக்கவும், பிரச்சனைகளை கையாளவும், ஆபத்துகளுக்கு தப்பவும் இந்த உள்ளுணர்வு உதவி செய்கின்றது. இந்த உள்ளுணர்வில் நான்கு நிலைகள் இருக்கின்றதுA. அறியாமை (Ignorance) இது உள்ளுணர்வு தானா என்று பகுத்தறியும் தன்மையற்ற மதியீன நிலை. தனக்கும் புரியாது. பிறர் புரிய வைத்தாலும் புரியா நிலை. வழியருகே வசனம் விழுந்த இருதயம் போல. எத்தனை வசனம் கேட்டாலும் உள்ளே போவதில்லை. B. அறிந்தும் உணரா நிலை (Known but not understanding) ஏதோ உணர்வு என்று தெரிகின்றது ஆனால் புரிய முடியாத நிலை. பாடுகள் மற்றும் மற்ற பிரச்சனைகள் ஓவர்டேக் செய்து விடுகின்றது. இது எல்லாம் கடினம் என்று உதாசீனம் செய்யும் நிலை. ஏதோ ஒன்று என்று தான்டி செல்தல். கடினமான சூழ்நிலைகளை புரியும் தன்மையை கெடுத்து விடும். உணர்வில் சந்தோசம் ஆனால் உணர்வின் எதார்த்தத்தின் புரிதல் இல்லை. ஒருவித குழப்ப நிலை. ஆச்சரியம் உண்டு ஆனால் உள்வாங்குதல் இல்லை.C. புரியும் ஆனால் கண்டுக்காது (Understanding but no digestion) உணர்ந்து செயல்படும் ஆனால் கிரகிக்காது. எல்லா உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுத்து இதையும் அதே போல் சம நிலைக்கு பாவித்து இதன் வலிமையை சந்தேகம் கொண்டு இதன் எதார்த்தத்தை விட்டு விடுதல். கவலைகள், மயக்கங்கள் இதன் அர்தத்ததை கெடுத்து விடும். சொல்வது கேட்பதும் சரிதான் ஆனால் ஒத்துவராது என்று நெகிழும் தன்மை. D. உணர்ந்த வளரும் நிலை (Known and grown stage) உணர்ந்து செயல் படும் நிலை. சேவிகொடுக்கும் நிலை. ஆம் என்று ஒத்துக் கொள்ளும் நிலை. அதில் நடக்கும் நிலை. என்ன வந்தாலும் உணர்ந்ததை அனுபவிக்கும் நிலை. பலன் கொடுக்கும் நிலை. உணரும் அனுபவத்தில் வளர்ந்து வளர்ந்து கனிக்கொடுக்கும் மன தெளிவின் நிலை. இந்த உள்ளுணர்வு பெருக அதில் திறம்பட செயல்பட என்ன செய்ய வேண்டும்?1. அமர்ந்திருக்க வேண்டும் (Be still) எல்லாவற்றுக்கும் ரியாக்ட் செய்துக் கொண்டு இருக்க கூடாது. சிலதை அடக்கி அமைதல் கொள்ள வேண்டும். தேவன் யார் என்பதை அறிய வேண்டும். அவசரப் புத்தியை ஓரம் கட்ட வேண்டும். யூகத்திற்கு இடம் கொடுத்தல் கூடாது. எத்தனை அலைகள் வந்தாலும் மனம் அலை பாயாமல் எதையும் அலட்டிக் கொள்ளாமல் கப்பலின் பின்னணியத்தில் சாந்தமாக படுத்து இருந்த இயேசு தான் எழுப்ப பட்ட உடன் அலட்டிக்காமல், பயப்படாமல், உணர்ச்சி வசப்படாமல், நிதானமாக சாதரணமாக அலையை கடிந்து கொண்ட இயேசுவை பார்க்க வேண்டும். கர்த்தரை நோக்கி அமர்ந்திருக்க வேண்டும். உள்ளம் ஒருமுகப்படும் இடத்தில் அவர் தென்படுவார். எல்லாரும் ஒருமனப்பட்டு ஒரிடத்தில் கூடி வந்தனர். கர்த்தரை துதித்து அமர்ந்து இருந்தனர். ஒரு பெரிய பரிசுத்த ஆவியின் உணர்வு உண்டானது. B. புறச் செவிகள் அடைந்து அகக்கண்கள் திறக்க விண்ணப்பம் செய்ய வேண்டும் எப்போதும் உலக காரியங்கள், இப்பிரபஞ்சத்தில் உள்ள காரியங்களையே பேசி, கேட்டு, பார்த்து, அவைகளில் நேரத்தை செலவு செய்து கொண்டு மன கண்களை குருடாக்கி கொள்ள கூடாது. நமது அக கண்கள் திறக்க அனுதினம் ஜெபிக்க வேண்டும். கிறிஸ்து யார் என்று அறிகிற அறிவில் பெருக வேண்டும். கிறிஸ்து எப்போதும் பிதாவுக்கடுத்தவைகளில் தான் அதிக கவனம் செலுத்தினார். காதுள்ளவன் கேட்க கடவன் என்று இயேசு இதைத்தான் சொன்னார் C. உள்ளான மனிதன் நாளுக்கு நாள் பெலப்பட வேண்டும் (Strengthening innerman) கிறிஸ்துவிலும் அவரின் சத்துவத்தின் வல்லமையில் பெலப்பட வேண்டும். உணர்வுள்ள தெளிவுள்ள ஆவியானவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். அவரே உணர்த்துகின்றவர். அவரே சரியான பாதையில் நடத்துகின்றவர். அவரே ஏவி நம்மை நடத்துகின்றவர். D. வசனங்களை தியானிக்க வேண்டும்(Meditation of God’s word) வசனத்தை வாசிப்பதும் கேட்பதும் நல்லது ஆனால் அவைகள் கைக்கொள்ள பட வேண்டும். அதை செய்ய இரவும் பகலும் அதில் தியானம் செய்ய வேண்டும். நம்மை உணர்த்துகின்ற சக்தி இந்த வசனத்திற்கு உண்டு. கர்த்தரே நல் உணர்வுக்கு அவரின் வார்த்தைகளை எழுதி தந்து இருக்கின்றார். அதின் மேல் வாஞ்சை மற்றும் தியானம் செய்ய வேண்டும். மனிதன் அப்பத்தினால் அவரின் வார்த்தையினால் தான் பிழைப்பான் என்பதை உணர வைக்க தான் வனாந்திரத்தில் கர்த்தர் பாடுகளின் வழியே இஸ்ரவேல் ஜனத்தை நடத்தினார் என்று எழுதப்பட்டு இருக்கின்றது. கர்த்தர் தாமே நல் உணர்வுள்ள தம் ஆவியை நமக்கு தந்து நம்மை நடத்துவராக!செலின்