கேள்வி: ஜாதகம் உண்மையா அவர்கள் கூறுவது நடந்து கொண்டிருக்கிறதே அவர்கள் எவ்வாறு கணக்கிடுகிறார்கள்? விளக்கவும்

பதில்: அகராதியில் ஜோதிடத்தின் வரையறையைப் பார்த்தால், உங்கள் கேள்விக்கு நீங்களே பதிலளிப்பீர்கள்.

வெப்ஸ்டர் அகராதியில் ஜோதிடத்தை இப்படி வரையறுக்கிறார்கள்:
“சந்திரன், சூரியன் மற்றும் நட்சத்திரங்களின் உறவு நிலைகளின் தாக்கத்தை மனித விவகாரங்களில் ஒப்பிடுவதன் மூலம் எதிர்காலத்தை முன்னறிவிப்பதாகக் கூறும் ஒரு போலி அறிவியல்.”

ஆங்கிலத்தில் -> “A pseudoscience claiming to foretell the future by studying the influence of the relative positions of the moon, sun, and stars on human affairs.”

இராசி என்பது ஜோதிட விளக்கப்படங்களை விளக்குவதற்கும் ஒழுங்கமைப்பதற்கும் பயன்படுத்தப்படும் சின்னங்கள். ஆழமாக கவனித்தால் இது விக்கிரகத்தை பின்பற்றுதலுக்கான ஒரு ஆலோசனையாக இருக்கும். அது விக்கிரக ஆராதனைக்கு வழிவகுப்பதாக ஆகிவிடும். நம்மை பாவத்திற்கு ஆளாக்க பிசாசு இந்த வகையான பொறிகளைப் பயன்படுத்துகிறான். மனிதநேய உணர்வுகள் மற்றும் தெளிவற்ற புதுமைகளுடன் மூடப்படும்போது அதன் பால் இழுக்கப்படுவது இயல்பு. எதிர்காலம் என்ன என்பதை அறிய நாம் அனைவரும் விரும்புகிறோம், ஆனால் நம்மில் எவராலும் அதை தீர்க்கமாக அறியவே முடியாது.

எதிர்காலத்தில் நிகழ்வுகளை முன்னறிவிப்பதற்காக தேவன் ஒரு சில தீர்க்கதரிசிகளை மட்டுமே தேர்ந்தெடுத்தார். இது அவருடைய மகிமைக்காகவும், அவர் யார் என்பதற்கான சான்றிற்காகவும் செயல்பட்டவையாகும். ஜோதிடர்களின் மந்திரங்களும் ஜாதகத்தின் விபரங்களும் கணித்தது உண்மையோ பொய்யோ – சரியானதோ தவறானதோ – நம்முடைய நம்பிக்கை யார் மீது? அதனை நம்பினதன் மூலம் ஒருவேளை லாபமாக செயல் பட்டிருக்கலாம், ஒருவேளை வெற்றி பெற்றிருக்கலாம் அல்லது நம்பி சோர்ந்து போயிருக்கலாம்.

இதை சார்ந்ததான சில வசனங்களை கீழே பதிவிடுகிறேன் :

ஏசா 47:12-15 நீ உன் சிறுவயதுமுதல் பிரயாசப்பட்டுப் பழகிவருகிற உன் ஸ்தம்பன வித்தைகளையும், உன் திரளான சூனியங்களையும் நீ அநுசரித்து நில்; அவைகளால் உனக்குப் பிரயோஜனம் உண்டோ, பலன் உண்டோ, பார்ப்போம். உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய்; இப்பொழுதும் ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும்.

இதோ, அவர்கள் தாளடியைப்போல் இருப்பார்கள், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்; அவர்கள் தங்கள் பிராணனை அக்கினிஜூவாலையினின்று விடுவிப்பதில்லை; அது குளிர்காயத்தக்க தழலுமல்ல; எதிரே உட்காரத்தக்க அடுப்புமல்ல. உன் சிறுவயதுமுதல் நீ பிரயாசப்பட்டு எவர்களுடன் வியாபாரம்பண்ணினாயோ, அவர்களும் அப்படியே இருப்பார்கள்; அவரவர் தங்கள் போக்கிலே போய் அலைவார்கள்; உன்னை இரட்சிப்பார் இல்லை. ஏசா 47:12-15

ஏசா 8:19 அவர்கள் உங்களை நோக்கி: அஞ்சனம்பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணென்று ஓதுகிற குறிகாரரிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும்போது, ஜனங்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்கவேண்டியதல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ?

ஏசா 8:20 வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.

அவர்கள் உங்களை நோக்கி: அஞ்சனம்பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணென்று ஓதுகிற குறிகாரரிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும்போது, ஜனங்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்கவேண்டியதல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ?
வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை. ஏசா 8:19-20

எரே 2:28 நீ உனக்கு உண்டுபண்ணின தேவர்கள் எங்கே? உன் ஆபத்துக்காலத்தில் உன்னை இரட்சிக்கக்கூடுமானால் அவைகள் எழும்பட்டும்; யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும், உன் தேவர்களின் இலக்கமும் சரி.

லேவி 20:6 அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் பின்தொடர்ந்து சோரம்போக எந்த ஆத்துமா அவர்களை நாடுகிறானோ, அந்த ஆத்துமாவுக்கு விரோதமாக எதிர்த்துநின்று, அவனைத் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகப்பண்ணுவேன்.

லேவி 19:26 யாதொன்றையும் இரத்தத்துடன் புசிக்கவேண்டாம். குறிகேளாமலும், நாள்பாராமலும் இருப்பீர்களாக.

ஏரே 10:2 புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள்.

உபா 18:10-13 தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள் பார்க்கிறவனும், அஞ்சனம்பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார். உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ உத்தமனாயிருக்கக்கடவாய்.

இந்த வசனங்களும் பதிலும் போதுமானதென்று நம்புகிறேன். ஜாதகம் அல்லது இராசி சின்னத்தை குறித்து உண்மையோ பொய்யோ என்று ஆலோசிக்கவோ ஆராயவோ முனைவதை விட – சகலத்தையும் ஆளுகிற, அதிகாரமுள்ள, மாற்ற, கவிழ்க்க வல்லமையுல்லவரிடத்தில் நம் நம்பிக்கை இருக்கட்டும். சனிக்கிழமை புது வீட்டுக்குள் குடியேற கூடாது என்று எனக்கு அநேகர் சொன்னார்கள் – குறிப்பாக அன்றைய தினம் நான் குடியேறினேன். 15 வருடங்களுக்கு மேலாகிவிட்டது இந்த வருடத்தோடு !!

மற்றவருக்கு முன்பாக கிறிஸ்துவிற்கு சாட்சியாக வாழ்வோம்.

Eddy Joel Silsbee
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School