Short story: Do not come to the aid of loss

ஆவிக்குரிய வாழ்வில் ஏமாற்றம், சலிப்பு, engery விரயம், போன்றவற்றால் நிரம்பி கிறிஸ்துவின் வளர்ச்சி மற்றும் கிறிஸ்துவின் வல்லமையின் பரிபூரனத்தின் வழியில் முன்னேற முடியாமல் இருக்கிறோம் என்றால், அதற்கு உரிய காரணிகளை தொடர்ந்து வாசித்து சரி செய்ய கர்த்தர் கிருபை தருவாராக!

1. தொடர்ந்து விடமுடியாத பேலவீனம் என்று நாமே சமரசம் செய்யும் பாவம்.

விடமுடியாத ஜென்ம சுபாவம், சிலுவையில் அறையப்பட விட்டு கொடுக்க முடியாத பாவ சுபாவம், ரகசிய பாவம், தொடர்ந்து சமரசம் செய்து கொண்டே இருக்கும் விடமுடியாத பாவ சாக்குபோக்கின் சுபாவம் போன்றவற்றை நாம் சரி செய்ய பிரயாசப்பட வில்லையெனில் அது கொஞ்சம் கொஞ்சமாக நமது தேவ சமூகத்தை கெடுத்து ஆவிக்குரிய வாழ்வில் நம்மை தடுமாற செய்து, பாவ ஆளுகைக்கு நேராக வந்து பரிசுத்த ஆவியின் ஆளுகையை இழந்து விடுவோம். எனவே பரிசுத்தத்தில் சமரசம் செய்யாதபடி அவர் பரிசுத்தர் ஆகையால் நாமும் பரிசுத்தமாக இருக்க வேண்டும். பரிசுத்தமின்மை எப்போதும் அசுத்ததிற்கே நம்மை கொண்டு சென்று முடிவில் பிசாசிர்க்கு இடம் கொடுத்து விடும்.

2. அதீத உலகக் கவலை மற்றும் இப்பிரபஞ்சத்தின் மேல் உள்ள அதீத ஈடுபாடு.

உலககாரியங்களுக்கு அடுத்த கவலை, உலக மேன்மையை குறித்த சிந்தனை, உலக புகழ், உலக அந்தஸ்து, உலக சம்பாத்தியம், உலக இஸ்வரிய மயக்கம், என்ன உடுப்போம், குடிப்போம் போன்றவற்றை சுற்றி சுற்றியே நாம் வாழ்க்கையை ஓட்டி கொண்டு இருப்போம் என்றால், மேலான ஆசீர்வாதங்கள் நம்மில் பலன் பெற முடியாது, பரலோகராஜியத்தின் சிந்தனை, உன்னத அனுபவங்கள், கிறிஸ்துவுக்கு அடுத்தவைகளை சிந்திக்க, தியானிக்க முடிய வில்லையேனில் நிச்சயமாக நாம் ஆவிக்குரிய சலிப்பில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து பூமிக்குரியவைகளை அல்ல பரத்துக்குரியவைகளை தேட வேண்டும். ஏனெனில் இந்த பூமிக்குரிய நன்மைகளை விட மேலான நன்மையான ஈவுகள் அவரிடம் ஏராளம் உண்டு.

3. அதீத மாம்ச சிந்தை, மாம்ச வழிகளில் காரியங்களை அடைய முயர்ச்சி எடுத்தல்.

காரணமில்லாத கோபம், எப்போதும் சண்டை போட்டு கொண்டே காரியத்தை சாதித்தல், சும்மா நீதி கேட்கிறேன் என்று எரிச்சல் அடைய செய்தல், அநியாயத்தை தட்டி கேட்கிறேன் என்று வாக்குவாதம், பிரிவினை, தேவை இல்லாமல் நமது ஸ்தானம், அழைப்பு இன்னதென்று அறிந்து அதில் நிற்காமல் பிறருக்காக வாதாடுகிரேன் என்று தேவையில்லாத விசயங்களில் மூக்கை நுழைத்து ஒரு பரபரப்பாக மாம்ச கிரியைகளை வெளிப்படுத்தி ஆவியின் கணிகளான அன்பு சந்தோசம், சமாதானம் , தயவு, சகித்தல், பொறுமை, நற்குணம், விசுவாசம், சாந்தம் போன்ற நற்குணங்களை கொஞ்சமும் வெளிப்படுத்தாமல் இருந்தால் முடிவில் வாழ்வு சலிப்பாகவே மாறி விடும். மாம்ச சிந்தை மரணம் ஆனால் ஆவியின் சிந்தையோ ஜீவனும் ஆரோக்கியமாக இருக்கும்.

4. அதீத வாய் கொழுப்பு மற்றும் அதீத சம்பாசணை.

சொற்களின் மிகுதி நம்மை சலிப்பிர்க்குள் கொண்டு செல்லும், அவசரப்பட்டு பேசும் மதியீனமான வார்த்தைகள், வீணான பெருமையான வார்த்தைகள், பிறரை குற்றம்சாட்டி கொண்டே பேசும் கோள் வார்த்தைகள், சந்தேக வார்த்தைகள் மற்றும் பரியாசவார்த்தைகள் நம்மை கெடுத்து விடும். குழியில் தள்ளி விடும். சில ரகசியத்தை நேரத்திற்கு முன் சொல்ல கூடாத இடத்தில் போட்டு உடைப்பதால் வரும் ஆபத்து நமது ஆவிக்குரிய வாழ்வில் சோர்வை கொண்டு வந்து, அந்த வார்த்தைகள் நம்மை வெறுமை அடைய செய்து விடும். எனவே சமயோதித புத்தியோடு, விவேகத்தோடு, ஞானத்தோடு நடந்து கொள்வது மிகவும் அவசியம். ஒருவன் சொல் தவராதவனானால் அவன் பூரண புருசன். கிருபையின் வார்த்தைகள் மற்றும் உப்பினால் சாரமேற்றப்பட்ட வார்த்தைகள் மிகவும் நல்ல வார்த்தைகள். வள வள வென்று பேசாமல் சமயத்திற்கு ஏற்ற வார்த்தைகள் பேச கற்று கொள்ள வேண்டும். நாவு பொல்லாத உலகம் அவைகள் அடக்கபட வேண்டும்.

5. அதீத சாவல்கள் மற்றும் போராட்டம் நிறைந்த வாழ்வு.

தேவையில்லாத ஆணியை பிடுங்க போய் வீணான போராட்டங்களை சந்தித்தல், அதீத இரக்கம் பாராட்டி வீணான சிக்கல்களில் மாட்டி கொள்தல், பிறருக்கு உதவி செய்கின்றோம் என்று வீண் அலுவல்களில் சிக்கி கொண்டு பிறரது சவால்கள் மற்றும் போராட்டங்களை வீணான நிலைகளில் ஏற்று கொண்டு எப்போதும் ஒருவித சாவல்களில் வாழும் அர்த்தமற்ற வாழ்வு. அவனவன் தன் அழைப்பு, தேவ நீதியை புரிந்து, இரக்கம் பாராட்ட வேண்டியவர்களுக்கு தயவு பாராட்டி, அவனவன் சிலுவையை சுமந்து, அவனவன் தன் காரியத்தையும், தேவன் கொடுத்த அழைப்பில் மட்டும் நின்று செயல்பட்டால் அதில் வீணான விரயங்கள் வருவது இல்லை. கர்த்தர் அவரவருக்கு கொடுக்கும் பாடுகளில் அதற்குரிய போக்கையும், கிருபையும், அவற்றை சந்திக்கும் திரானியையும் வைத்து இருக்கிறார். தேவ சித்தம் இல்லாத, கர்த்தர் கொடுக்காத பாடுகளை வீணாக ஏற்று கொண்டால் அதின் நிமித்தம் நமக்கு கிடைப்பது ஏமாற்றமே!

6. அதீத திருப்தியின்மை மற்றும் அக்கரைக்கு இக்கரை பச்சை என்கிற மனோபாவம்.

செய்கின்ற வேலையில் திருப்தியின்மை, போகின்ற சபையை குறித்து திருப்தியின்மை, பெற்ற குடும்பத்தை குறித்து திருப்தியின்மை, எப்போதும் எல்லாவற்றையும் பிறகாரியங்களோடு ஒப்பிட்டு பார்த்து, இது சரியில்லை, அங்கு பிறந்து இருந்தால் நலமாக இருக்கும், அந்த சபைக்கு போனால் நன்றாக இருக்கும், அங்கே போனால் விடுதலை என்று மனதை அலைபாய விட்டு கொடுத்து அலைந்து திரியும் வீணான அலச்சல்கார்களாக இருந்தால் முடிவில் இருக்கும் உற்சாகத்தையும் இழந்து மொத்தத்தில வாழ்வு ஒரு விரக்தியாகவே மாறி விடும். எனவே இருக்கிற சபையில், இருக்கிற குடும்பத்தில், இருக்கிற சமுதாயத்தில், செய்கின்ற வேலையில் உண்மையோடு, கர்த்தருக்கு பயந்து போதும் என்கிற நல்ல எண்ணத்தோடு செயல்பட்டால் கர்த்தர் ஏற்ற காலத்தில் உயர்த்துவதும் அன்றி எல்லா நிலைகளிலும் வர வர விருத்தியும் அடைய செய்வார்.

7. அதீத மேன்மையை எதிர்பார்த்து சின்ன சின்ன காரியங்களை உதாசீனம் செய்தல்.

பெரிய எதிர்பார்ப்பு கொண்டு, செய்ய வேண்டிய சின்ன காரியங்களில் கோட்டை விடுதல். கர்த்தருக்கு என்று கொடுக்கும் விசயமாகட்டும் சிலர் விருந்தாளி பாஸ்டர் வந்தால் அதிகமாக கொடுத்து தங்கள் சொந்த போதகரை மறந்து விடுவார்கள். சிலர் ஊருக்கே சாப்பாடு போட்டு தன் சொந்த குடும்பத்தை மறந்து விடுவார்கள். சிலர் முழு இந்தியாவுக்கே சுவிசேஷம் அறிவித்து கடைசியில் பக்கத்து வீட்டுக்கு சுவிசேஷம் அறிவிக்காமல் விட்டு விடுவது போல தான் இந்த மனோபாவம். கொஞ்சத்தில் உண்மை, கொஞ்சத்தில் உத்தமம் இருந்தால் அனேகத்தில் மேல் ஒரு ஆளுமையை கர்த்தர் தருவார். சிலர் வருடத்தில் நாற்பது நாட்கள் உபவாசம் இருந்து ஒரு நாளில் நான்கு நிமிடம் ஜெபிக்க முடியாதவர்கள் போல இருப்பது தான் மிகவும் கொடிய காரியம்.

எனவே

ஆவிக்குரிய காரியங்களை பாரம்பரியமாக பார்க்காமல் கிறிஸ்துவில் உள்ள உறவின் அடிப்படையில் பார்க்க வேண்டும்.

ஆவிக்குரிய காரியங்களான ஜெபம், வசன தியானம், ஊழியம் போன்றவற்றை கடமைக்கேன்று செய்யாமல் அன்பின் அடிப்படையில் செய்ய வேண்டும்.

தேவனிடம் எதையும் பெரிதாக எதிர்பார்க்காமல் அவர் யார் என்கிற விசுவாசத்தின் அடிப்படையில் அவரை நம்பி விசுவாசிக்க வேண்டும்.

அனுதினமும் நம்மை தாழ்த்தி சுயபரிசோதனை செய்து அவரது இரத்தத்தால் வசனத்தால் நம்மை சுத்திகரித்து கிருபையில் அவரது சத்துவத்தில் பலப்பட வேண்டும்.

நமது அழைப்புக்கு மிஞ்சின மற்றும் நமது திறானிக்கு மிஞ்சின கருமங்களில் தலையிடாமல் தேவ சித்தத்தின் படி கர்த்தர் நமக்கு தந்த சிலுவை மற்றும் ஊழியத்தை நிறைவேற்ற கவனம் வேண்டும்.

தேவன் நம்மை ஏற்படுத்தின ஸ்தானத்தில் உறுதியாக இருந்து போதும் என்கிற திருப்தியில் வாழ கற்று கொள்ள வேண்டும்.

சிறிய சிறிய காரியங்களில் கற்றுக்கொள்ளவும், அவைகளில் உண்மையாக இருக்கவும் நிதானித்து செயல்படவும் அவரின் சித்தத்தில் வளர வேண்டும்.

கர்த்தர் தாமே நம்மை பெலப்படுத்தி, சீர்படுத்தி, ஸ்திரப்படுத்தி, உறுதிப்படுத்தி உற்சாகமான ஆவியினால் நிரப்பி நம்மை ஆசீர்வதிப்பாராக!

செலின்