ஊழியர்கள் மற்றும் தேவப்பிள்ளைகளின் கனிவான கவனத்திற்கு…

மற்ற போதகர்களுக்கு, அல்லது தேவப்பிள்ளைகளுக்கு, அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தேவன் அவர்களுக்கு கொடுத்த ஜெப பதிவுகள், நல்ல கருத்துக்கள், பாடல்கள், வீடியோக்கள், இன்னும் பல காரியங்கள் உண்டு …..

மேலே சொல்லப்பட்டவைகளில் அவர்கள் பெயர், திருச்சபை லோகோ, ஊழியதின் பெயர், போன்றவை போட்டிருப்பார்கள் அது தவறு அல்ல ..

பொதுவாக நாம் யாவரும் பைபிளில் உள்ள வசனங்களை நாம் தாராளமாக பயன்படுத்தலாம். ஏனென்றால் அது தேவனுடையது. ஒரு இமேஜ் டவுன்லோட் பண்ணி அதில் வசனத்தை டைப் செய்து உங்கள் ஊழியங்களுடைய பெயரை போடலாம் இதுவும் தவறில்லை..இது ஆரோக்கியமானது.

ஆனால் இப்ப இருக்கிற நவீனகால ஊழியர்கள், தேவப்பிள்ளைகள் அவர்கள் பெயரை, திருச்சபை லோகோவை, ஊழியத்தின் பெயரை, போன்றவைகளை எடிட் செய்து அளித்துவிட்டு, எடுத்துவிட்டு.. கர்த்தர் தங்களுக்கு சொந்தமாக கொடுத்ததுமாதிரி தங்கள் பெயரை போட்டுகொள்கிறார்கள் இது தவறு. நோகாமல் நொங்கு சாப்பிடுவது தவறு.. இந்த காரியங்களில் ஊழியர்கள், தேவப்பிள்ளைகள் கொஞ்சம் கவனமாக இருப்போம்..

Pr. Jebakumar