இனி தாமதிப்பதில்லை ஏனெனில் கர்த்தர் துரிதமாக செயல்படும் வேளை வந்தது

இனி தாமதிப்பதில்லை ஏனெனில் கர்த்தர் துரிதமாக செயல்படும் வேளை வந்தது

துரிதமான கர்த்தரின் செயல்கள் வேதத்தில் நடந்து கர்த்தருக்கு மகிமை சேர்த்து இருக்கிறது. இது எதிர்மறையான அவசரப்புத்தியோடு சேர்ந்த காரியமல்ல ஆனால் தேவனை சார்ந்து அவரது செயல்களை அவசர சூழலில் மற்றும் நிற்கதியற்ற நேரத்தில் காண்பது என்றே பொருள்படும்.

மரங்களில் தென்னை மரம், பனை மரம், மூங்கில் மரம், பேரீச்சை மரம் போன்ற இந்த வகை மரங்கள் சாதரணமாக மிகவும் காலம் தாழ்த்தி வளருவது போல தோன்றினாலும், அது கனி கொடுக்கும் பருவம் வரும் போது ஒரு அசுர வளர்ச்சி அடையும், ஒரு தீடீர் வளர்ச்சி, தீவிரமான மற்றும் வேகமான ஒரு வளர்ச்சி. இந்த வளர்ச்சி முடியும் போது இந்த வகை மரங்கள் தன் காலத்து கனிகளை கொடுக்கும். அதே போல மிகவும் பொறுத்து பொறுத்து தருணம் பார்த்த தேவன் தனது காரியத்தை செய்யும் குறித்த காலம் வந்த உடன் தீவிரமாக செயல்படுவதை தான் இங்கு குறிப்பிடுகிறேன். அப்படிப்பட்ட காலத்தில் கர்த்தர் நம்மை வைத்து இருக்கிரபடியால் அந்த தீவிர சேனையில் கர்த்தர் நம்மை இணைத்து கொள்வாராக!

வேதத்தில் தாமதத்தினால் அநேக கேடுகள் நடந்து இருக்கிறது. மோசே பர்வதத்தில் இருந்து வர தாமதம் ஆனதால் ஆரோன் ஜனத்தை வழி மாற வைத்தான். மணவாளன் வர தாமதம் ஆனதால் பத்து கன்னிகைகள் நித்திரையில் விழுந்தனர். அமாசா ராஜாவாகிய தாவீதிடம் தாமதித்து வந்ததினால் இராணுவ தளபதி என்கிற பட்டத்தை இழந்து யோவாபினால் தன் ஜீவனையும் இழந்து போனான்.

இதுவரை ஏமாற்றம், உழைப்புக்கு கேற்ற வளர்ச்சியின்மை, சலிப்பு, மற்றும் நன்மை, பிரதிபலன் எதிர்பார்த்து எதிர்பார்த்து சோர்வில் கடந்து செல்கிறீர்களா? உங்களுக்கு தான் இந்த பதிவு, தொடர்ந்து வாசியுங்கள்! கர்த்தர் நான்கு காரியங்களில் தாம் துரிதமாக செயல்பட்டு நம்மையும் அதில் அதே வேகத்தில் செயல்பட வைக்கிறார்.

A. கர்த்தர் தமது வார்த்தையை துரிதமாக நிறைவேற்றுவார்.

கர்த்தருடைய வார்த்தைக்கு வல்லமை உண்டு. அது காலம் தாழ்ந்து மறைந்து விட்டது போல தெரிந்தாலும் அது ஏற்ற காலத்தில் நிச்சயம் நடக்கும். அது பொய் சொல்லாது. அதற்கு காத்திருக்க வேண்டும். அந்த ஏற்ற காலம் வரும் போது தீடீரென, சடிதியில், தீவிரமாக கர்த்தர் தமது வார்த்தையை நிறைவேற்றுவார்.

என் வார்த்தை இனி தாமதிப்பதில்லை அதை தீவிரமாக நிறைவேற்றுவேன் என்று தீர்க்கதரிசி எரேமியா மற்றும் எசேக்கியேல் போன்றவர்களை கொண்டு கர்த்தர் விளம்பினார். யோவானுக்கு வெளிப்படுத்தும் போது என் வார்த்தைகள் சீக்கிரம் சம்பவிக்க வேண்டியவைகள் எனவே, அவைகளை முத்திரை இட வேண்டாம் என்று கர்த்தர் திருயுளம் பற்றினார்.

எனவே கர்த்தரின் சமூகத்தில் காத்து இருந்து அந்த ஏற்ற காலத்தை அறிந்து தேவனே தாமதியாதேயும் என்று தாவீது மற்றும் தானியேல் விண்ணப்பம் பண்ணினது போல ஜெபிக்க வேண்டும். அப்போது அது நிச்சயம் தாமதிப்பதில்லை.

அதுமட்டும் அல்லாது அவரது வார்த்தைக்கு தாமதமின்றி சேவிகொடுத்து கற்பனைகளை சீக்கிரம் கைகொண்டு காத்து இருக்க வேண்டும். ஏனெனில் அவரது சொல் தீவிரமாக ஊடுருவி செல்கிறது. அவரது சொல் தீவிரமாக நிறைவேறுகிறது என்றும் பார்க்கிறோம். அவர் தமது வார்த்தையை துரிதமாக அனுப்பி வல்லமையில் தாமதமின்றி செயல்படுகிறவர். எனவே ஏற்ற காலம் அறிந்து, அவரது வார்த்தைக்கு வல்லமை உண்டு என்று விசுவாசித்து, ஜெபித்து, செவிகொடுத்து காத்திருங்கள் அப்படி பட்டவர்களுக்கு கர்த்தர் துரிதமாக தமது வார்த்தையை நிறைவேற்றுவார் ஏனெனில் அவர் வார்த்தையில் உண்மை உள்ளவர்.

B. அவர் தமது செயல்களில் துரிதமானவர்.

நாமும் அப்படியே கர்த்தரின் செயல்களிலும் அவருக்கு அடுத்த காரியங்களிலும், நமது நற்கிரியைகளிலும் துரிதமாக செயல்பட வேண்டும்.

கர்த்தர் தமது ஆலயத்தில் துரிதமாக வந்து தன்னை பகைக்கிறவர்களுக்கு துரிதமாக பதிலளிப்பார் என்று வசனம் சொல்கிறது. நியாயம் துரிதமாக விசாரிப்பார் என்றும் எழுதப்பட்டு உள்ளது. அவர் இரக்கம் செய்யவும், நீதி செய்யவும், அன்பு வைக்கவும், கிருபை தரவும் துரிதமாக செயல்படுகிறார். கோபம் ஒரு நிமிசம் அவரது கிருபை நித்தியம் நித்தியம் என்று சொல்லபட்டு இருக்கிறது. அதே நேரத்தில் அவரது கோபமும் சடிதியாக செயல்படுகிறது. அதை தான் நாம் கோபாக்கினை என்று நிதானிக்கிரோம். அடிக்கடி கடிந்து கொள்ளப்பட்டும் சேவிகொடுக்கவில்லை எனில் சடுதியில் சாகாயம் இன்றி பாதிக்கப்பட வேண்டிய நிலை வரலாம்.

எனவே கீழ்கண்ட கர்த்தருடைய காரியங்களில் துரிதமாக செயல்பட வேண்டும்.

காணிக்கை

  1. முதற் பலனை தாமதிக்காமல் செலுத்தி, பொருத்தனைகளை துரிதமாக செலுத்த வேண்டும்.

ஊழியம்

2.அபிசேசகம் பண்ணவேண்டியவர்களை சீக்கிரம் அபிசேகம் பண்ண வேண்டும் ஏனெனில் அவரது ஊழியம் முடங்க கூடாது. II ராஜ 9:3

சபை (வீட்டு காரியங்கள் கூட இதில் அடங்கும்)

  1. கர்த்தருடைய வீட்டில் உள்ள காரியங்கள் தாமதம் ஆனால் பவுல் Timothy கொண்டு ஒழுங்கு படுத்தியது போல நாமும் ஒழுங்கு படுத்த வேண்டும். பவுலோ சில சபைகளுக்கு சீக்கிரம் வந்து சரி செய்வேன் என்று சொல்கிறார். சில சபைகளுக்கு சீக்கிரமாக Timothyயை அனுப்புகிறார். (கர்த்தர் மோசேயை துரிதப்படுத்தி மலையில் இருந்து கீழே அனுப்புகிறார்) இன்னொரு இடத்தில் கோபாக்கினையை நிறுத்த சீக்கிரமாக பாவ நிவிர்த்தி பலியிட மோசே ஆரோனுக்கு கட்டளை கொடுக்கிறார். வீட்டிலும் சரி செய்ய வேண்டியதை அந்த அந்த நேரத்தில் துரிதமாக செய்யுங்கள் ஏனெனில் நமது நாட்கள் அஞ்சர்காரர் ஓட்டம் போன்று தீவிரமாக இருக்கிறது.
  2. ஆலய பணிகளுக்கு முடக்கம் வராமல் துரிதமாக பணம் சேகரித்து அவைகளை நிறைவேற்ற வேண்டும். வேலை தடைபடகூடாது.

போராட்டம்

  1. அமைதலாக நின்ற தாவீது தீடீரென்று துரிதமாக சீக்கிரமாக முன்னேறி கோலியாத்தை வீழ்த்தினான். அதே போன்று பிசாசின் தந்திரங்களை நிதானித்து துரிதமாக செயல்பட்டு அழிக்க வேண்டும்.

ஆராதனை

  1. மோசே கர்த்தரின் சத்தம் கேட்ட உடனே அவரை தீவிரமாக துரிதமாக பணிந்து கொண்டார். கர்த்தரை ஆராதிக்க துரிதமாக செயல்பட வேண்டும். அன்று கர்த்தரின் பஸ்காவை துரிதமாக தீவிரமாக ஆசரித்தார்கள்.

7.பலிகள் செலுத்த தாமதிக்க கூடாது. துரிதமாக கர்த்தருக்கு ஆராதனை செய்து பாஸ்கா ஆசரிக்க வேண்டும்.

உபசரிப்பு

  1. ஆபிரகாம் மற்றும் சாராள் தன்னுடைய வீட்டில் வந்த மூன்று புருஷர்களுக்கு தீவிரமாக துரிதமாக கொழுத்த விருந்து வைத்து கணப்படுத்தினர். ராகேலும் சீக்கிரமாக எழியேசருக்கும் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் வார்த்தாள். அதுவே அடையாளமாக மாறிவிட்டது. உபசரிப்பு பெரிய விடுதலையை சீக்கிரத்தில் பெற்று தரும்.

மரியாதை

  1. அபிகையாயில் தனது துராகிதனான புருசன் தாவீதுக்கு செய்ததை அறிந்து சீக்கிரமாக போய் தாவீதுக்கு தேவையானவற்றை எடுத்து கொண்டு போய் அவனை பணிந்து வணங்கி ஒரு பெரிய தண்டனையை குறைத்து விட்டாள். மரியாதை கொடுக்க வேண்டிய இடத்தில் துரிதமாக கொடுத்தால் அதினால் ஒரு பெரிய ஆசீர்வாதம் இருக்கிறது.

வேலை

  1. வேலை செய்யும் போது துரிதமாக நேர்த்தியாக சுறுசுறுப்பாக செய்ய வேண்டும். அபிமலெக்கு தன் கோடாரியை கொண்டு துரிதமாக வெட்டி பேர் பெறுகிறான். குணசாலியான ஸ்த்ரீயும் அப்படியே இருக்கிறாள்.

C. கர்த்தர் தமது இரட்ச்சிப்பை விடுதலையை துரிதமாக நடப்பிக்கிறார்.

ஆரம்பத்தில் துரிதமாக கிடைக்கும் சுதந்திரம் தங்காது அதினால் தான் முடுவுபரியந்தம் நிலை நிற்பவன் தான் இரட்ச்சிக்க படுவான் என்று கர்த்தருடைய வசனம் சொல்கிறது. கழுகு தன் பிள்ளையை எப்படி பறக்க கற்று கொடுக்கும் போது மேலில் இருந்து கீழே தள்ளிவிட்டு, தரையில் விழும் போது தாங்கி பிடிக்கிறதோ அப்படியே கர்த்தரும் ஏற்ற வேளையில் துரிதமாக நம்மை தாங்கி விடுவிப்பதில் வல்லவர்.

எகிப்தில் இருந்து தமது ஜனத்தை துரிதமாக நடத்தி சென்று பார்வோன் கைக்கும், அவன் சேனைக்கும் தப்புவித்து செங்கடலை கடக்க உதவி செய்தார். எிகிப்திலிருந்து எகிப்திய ஜனங்களே இவர்களை தங்களை விட்டு போக துரிதப்படுத்தினார்கள் என்று வசனம் சொல்கிறது. எந்த ஜனம் அவர்களை வேலை செய்ய துரிதப்படுத்தினார்களோ அவர்களே இவர்கள் கானனுக்கு போக துரிதப்படுத்தினார்கள் அதுதான் இரட்ச்சிப்பு.

லோத்து தாமதிப்பதை கர்த்தர் கண்டு அவனை துரிதப்படுத்தி தீவிரமாக மலைக்கு அனுப்பி பாதுகாத்தார்.

யோசேப்பு தீவிரமாக பார்வோனால் அரண்மனைக்கு வரவழைக்க பட்டான். அவனது நீண்ட கால பாடுகளின் வாழ்வு ஒரே நிமிடத்தில் துரிதமாக மாறியது. அதி சீக்கிரத்தில் நீங்கும் இந்த லேசான உபத்திரவம் என்பது இதுதான். உன் சுகவாழ்வு சீக்கிரம் துளிர்க்கும் இது கர்த்தரின் வார்த்தை.

ஆமான் எவ்வளவு துரிதமாக செயல்பட்டு ராஜாவின் முத்திரை மோதிரம் கொண்டு யூதர்களை அழிக்க பார்த்து நகல்களை அனுப்பி, ராஜாவும் அவனும் குடிக்க உட்கார்ந்தார்களோ அவ்வளவு துரிதமாக கர்த்தர் எஸ்தர் மூலம் செயல்பட்டு காரியத்தை மாற்றி கொடுத்தார். எதிராளியின் வேகத்தை விட கர்த்தரின் வேகம் அதிகம் என்பதை நாம் உணர்ந்தால் அதுவே துரிதமான விடுதலையை நமக்கு பெற்று தரும்.

தானியேல் துரிதமாக ராஜாவிடம் அழைக்கப் பட்டான் அங்கு உயர்த்தபட்டான். ராஜாவை சிங்ககேபிக்கு கர்த்தர் துரிதமாக கொண்டு சென்று சிங்க கெபிக்குள் பாதுகாத்த தேவன் தானியேலை ராஜாவை கொண்டே வெளியே கொண்டு வந்தார்.

எனவே அவரது விடுதலைக்கு இரட்ச்சிப்புக்கு காத்து இருகிறவர்களே பயப்படாதிருங்கள் அவர் சீக்கிரம் சத்திருவை வெற்றி கொள்ள வைப்பார். மரியாள் போதகர் வந்து இருக்கிறார் என்று அறிந்த உடனே சீக்கிரம் எழுந்து அவரிடம் வந்து விடுதலையை பெற்றது போல துரிதமாக அவரிடம் வாருங்கள். அவர் சீக்கிரம் விடுதலையை தருவார். சிரைப்பட்டவன் சீக்கிரம் விடுதலை ஆவான். பேதிருவை பார்த்து தூதன் சொன்னது போல இன்றும் சொல்கிறார், பேதிருவே சீக்கிரம் எழும்பி உன் பாதரட்ச்சையை தொடுத்து கொள். ஏனெனில் அவர் சீக்கிரம் நியாயம் செய்வார். சகேயுவே சீக்கிரம் இறங்கி வா, இன்று உன் வீட்டிற்கு இரட்ச்சிப்பு வரப்போகிறது. அவர் இதை சீக்கிரம் செய்து முடிப்பார். விசுவாசியுங்கள்.

D. கர்த்தர் சீக்கிரம் வருகிறார். அவருடைய நாள் சீக்கிரம் வருகிறது.

உலகின் சம்பவங்கள், கர்த்தர் தமது வருகைக்கு முன் நடக்கும் என்று சொன்ன அடையாளங்கள் துரிதமாக நிறைவேறுகிறது என்பதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.

அவருடைய நாள் சீக்கிரம் வருகிறது. அவர் தாமதிக்கிரார் என்று சிலர் எண்ணுவது போல தாமதிப்பது இல்லை. அவர் ஏற்ற வேளையில் துரிதமாக சீக்கிரமாக வருவார்.

நாமும் சீக்கிரம் இந்த கூடாரத்தை விட்டு ஒன்றில் அங்கு அவரை சந்திக்க வேண்டும். இல்லையெனில் அவர் வர எதிர்கொண்டு செல்ல வேண்டும். இனி காலம் செல்லாது. அவர் சீக்கிரம் வருகிறார்.

எனவே துரிதமாக சில காரியங்களை நாம் செய்ய வேண்டும்.

  1. அவரது சுவிசேஷத்தை விட்டு, கிருபையை விட்டு சீக்கிரம் பின்வாங்கி போகாமல் அதை துரிதமாக அறிவிக்க வேண்டும். அவர் உயிர்த்தெழுந்தார் சீக்கிரம் போய் சொல்லுங்கள். பவுல் தாமதமின்றி இயேசு கிறிஸ்துவை குறித்து பிரசங்கம் செய்தான். கொர்நல்யு சீக்கிரமாக பேதிருவை அழைத்தது போன்று சீக்கிரம் செயல்படுவோம்.
  2. சீக்கிரம் அவர் நம்மிடம் வந்து விளக்கு தண்டை எடுத்து போடாதபடி எந்த நிலையில் விழுந்தோம் என்பதை அறிந்து மனம் திரும்ப வேண்டும். சீக்கிரம் நல்மனம் பொருந்து என்று கர்த்தருடைய வசனம் சொல்கிறது.
  3. பாவங்களை அறிக்கை செய்து ஞானஸ்நானம் எடுப்பதற்கு தாமதம் கூடாது. துரிதமாக செயல்பட்டு பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் பரிசுத்தவான்கள் கையில் தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் எடுக்க வேண்டும். பரிசுத்த ஆவிக்குரிய சபையில் ஐக்கியமாகி பரிசுத்த ஆவியின் நிறைவில் வளர்ந்து வரங்கள் கனிகளில் செயல்பட்டு சாட்ச்சியின் வாழ்வு வாழ வேண்டும்.
  4. சீக்கிரமாக நமக்கு உரியதை பிடித்து கொண்டு சரி செய்ய வேண்டியதை சரி செய்து, கர்த்தருடைய வசனத்தை துரிதமாக கைக்கொள்ள வேண்டும்.

ஏனெனில் பரிசுத்தம் ஆகிறவன் இன்னும் பரிசுத்தம் ஆகட்டும் அவர் வருகிறார். பூமியை நிதானத்தோடும் நியாயம் தீர்க்கவும், பூலோகத்தில் நீதி விசாரிக்கவும் அவனவனுடைய செய்கைக்கு தக்க பலனோடு அவர் சீக்கிரம் வருகிறார். துரிதமாக செயல்பட்டு அவரை சந்திப்போம்.

செலின்