கர்த்தருக்குக் காத்திருக்குதல்
என்பது சும்மா
உட்கார்ந்துகொண்டு
ஒரு மா….திரியாய் எதையோ
சிந்தித்துக்கொண்டு
வித்தியாசமாய்
நடந்துகொள்வதல்ல.


காத்திருக்குதல்
என்பது கடினமானது.

வேலை, சில வேளைகளில்
கடினமாய் இருக்கும், அதை
எளிதாக செய்துவிடுவோம்

ஆனால்
காத்திருக்கும்போது
நம்முடைய மனம்
அமைதியாய் இருக்காது.
அலைபாய்ந்து
கொண்டிருக்கும்  

மனம் அடிக்கடி
மரம் விட்டு மரம்
தாவிக்கொண்டிருக்கும்

கண்கள் அடிக்கடி
கடிகாரத்தைப்
பார்த்துக்கொண்டிருக்கும்

எப்போது விடியும்
என்றைக்கு முடியும்
என்று கேள்வி மேல்
கேள்வி கேட்டுக்
கொண்டிருக்கும்
 
இதெல்லாம்
காத்திருக்கும்போது
மனிதனின் மனதில்
ஓடிக்கொண்டேயிருக்கும்

உங்களுடைய
காத்திருக்குதல் என்பது
அர்த்தமுள்ளது
அதோடுகூட ஆவிக்குரிய
ரீதியாக அது அதிக பயனுள்ளது.


கர்த்தருக்குக்
காத்திருக்கிறவர்களோ
புதுப்பெலனடைந்து,
கழுகுகளைப்போலச்
செட்டைகளை அடித்து
எழும்புவார்கள்;
அவர்கள் ஓடினாலும்
இளைப்படையார்கள்,
நடந்தாலும்
சோர்ந்துபோகார்கள்.

 (ஏசாயா 40:31)

தாவீது எதைச் செய்தாரோ
அதையே விசுவாசத்தைக்
கூட்டுவதற்காக நாமும்
செய்யமுற்படலாம்

அமைதியாய்
காத்திருக்கவேண்டும்  
We must wait silently

சங்கீதம் 62-ல் முதல் வசனமும்
5 -ம் வசனமும் இதைத்தான்
வலியுறுத்துகிறது.


காத்திருக்கும்போது நம்முடைய
சோதனைகளை எல்லாரிடமும்
சொல்லுவதற்காக
அதை பயன்படுத்தக்கூடாது    

சிலர் தங்களது சோதனைகளை
வேதனைகளை மீண்டும் மீண்டும்
ஆண்டவரிடம் ஜெபத்தின் மூலம்
சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

அதுபோல நாமும்
சொல்லவேண்டுவதில்லை.

ஒரு குழந்தை தனது
தாயின் அல்லது
தகப்பனின் தோளில்
சாய்ந்திருக்கும்போது
சத்தமிட்டுக்கொண்டு
இங்கும் அங்கும்
புரண்டு அழுதுகொண்டிருக்க
வேண்டிய அவசியமில்லை.


அதிகப் பேச்சு
சிலவேளைகளில்
விசுவாசக் குறைவை
வெளிப்படுத்திவிடும்

எனவே  பேச்சைக் குறைத்து
விசுவாசத்தைக் கூட்டுவோம்


சொற்களின் மிகுதியில்
பாவமில்லாமற்போகாது;
தன் உதடுகளை
அடக்குகிறவனோ புத்திமான்.

நீதிமொழிகள் 10:19

1) பெருமையான பேச்சு
அப்படியே, நாவானதும் சிறிய
அவயவமாயிருந்தும்
பெருமையானவைகளைப்
பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு
எவ்வளவு பெரிய காட்டைக்
கொளுத்திவிடுகிறது!
( யாக் 3:5)

2) மேட்டிமையான பேச்சு
 இனி மேட்டிமையான பேச்சைப்
பேசாதிருங்கள்;
அகந்தையான பேச்சு
உங்கள் வாயிலிருந்து
 புறப்படவேண்டாம்;
கர்த்தர் ஞானமுள்ள தேவன்;
அவர் செய்கைகள்
யதார்த்தமல்லவோ?
(1 சாமு 2:3)

3) அகந்தையான பேச்சு
அகந்தையான பேச்சு உங்கள்
வாயிலிருந்து புறப்படவேண்டாம்;
கர்த்தர் ஞானமுள்ள தேவன்;
அவர் செய்கைகள்
யதார்த்தமல்லவோ?
(1 சாமு 2:3)

இவைகளையெல்லாம்
விட்டுவிட்டு
கர்த்தருக்கு
காத்திருக்கும்போது
எப்படிப்

பேசவேண்டுமென்றால்

1) சுருக்கமான
வார்த்தையாக இருக்க
வேண்டும்

தேவசமுகத்தில்
நீ துணிகரமாய்
உன் வாயினால் பேசாமலும்,
மனம்பதறி
ஒரு வார்த்தையையும்
சொல்லாமலும் இரு;
தேவன் வானத்திலிருக்கிறார்;
நீ பூமியிலிருக்கிறாய்,
ஆதலால் உன் வார்த்தைகள்
சுருக்கமாயிருப்பதாக.
(பிரச 5:2)

2) மற்றவர்களை
பெலப்படுத்தும்
வார்த்தைகளை

பேச வேண்டும்
விழுகிறவனை உம்முடைய
வார்த்தைகளால்
நிற்கப்பண்ணி, தள்ளாடுகிற
முழங்கால்களைப்
பலப்படுத்தினீர். (யோபு 4:4)

3) நல்ல வார்த்தைகளை
பேச வேண்டும்
கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள்
வாயிலிருந்து புறப்படவேண்டாம்;
பக்திவிருத்திக்கு ஏதுவான
நல்ல வார்த்தை உண்டானால்
அதையே கேட்கிறவனுக்குப்
பிரயோஜனமுண்டாகும்படி
பேசுங்கள்.(எபேசி 4:29)

தேவனையே நோக்கி
என் ஆத்துமா
அமர்ந்திருக்கிறது;
அவரால் என் இரட்சிப்பு வரும்.
என் ஆத்துமாவே,
தேவனையே நோக்கி
அமர்ந்திரு
; நான் நம்புகிறது
அவராலே வரும்.

Pastor J. Israel Vidya Prakash B.Com., M.Div.,
Director – Literature Dept. tcnmedia.in
Radio Speaker: Aaruthal FM Daily
Nallaasaan – International Award, Malaysia -2021