இந்தியாவில் வளமான ஒரு புரட்சி வெடிக்கட்டும்

இந்தியாவில் வளமான ஒரு புரட்சி வெடிக்கட்டும்

இந்தியாவில் கீழ்கண்ட காரியங்களில் புரட்சி வெடிக்கவில்லை எனில் இந்தியா மீண்டும் ஒரு அடிமைத்தனத்தில், ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுக்களிடத்தில் இந்தியா அடமானம் வைக்கப்பட்டு, பெரும்பான்மை மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு மிரட்டல்கள், கொலைகள் என்று ஒவ்வொரு நாளும் அடக்குமுறைக்குள் தள்ளப்பட்டு விடும். எனவே முதலாவது எங்கு எல்லாம் புரட்சி நடக்க வேண்டும் என்று கவனிப்போம்.

A. சத்திய சரித்திரப் புரட்சி

வரலாற்றை பொய், பித்தலாட்டங்கள் மற்றும் கட்டுக்கதைகள் கொண்டு திரித்து, உணர்ச்சியை தூண்டி விட்டு வரலாற்று தடயங்களை அழிப்பதர்க்கு எதிராக புரட்சி வெடிக்க வேண்டும்.

B. இன வெறி, மத வெறி மற்றும் ஜாதி வெறிக்கு எதிரான சமுதாய புரட்சி

பிறப்பில் ஒரு ஜாதி, ஒரு இனம் மற்றும் ஒரு மதம் தான் ஒசத்தி என்று சொல்லி மக்களை தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லி பிறப்பின் அடிப்படையில் பிரிக்கும் பிராமணிய சூழ்ச்சியின் சக்திகளுக்கு எதிராக எல்லாரும் பொதுவானவர்கள் என்கிற கண்ணோட்டத்தில், பொய் வழிபாடுகள், பொது இடங்களை வழிபாட்டின் பெயரால் ஆக்கிரமிக்கும் சக்திகளுக்கு எதிராக புரட்சி வெடிக்க வேண்டும்.

C. கல்வியில் புரட்சி

பணம் படைத்தோர், உயர்ந்தோர் என்று பெயர்பெற்றவர்கள் தான் படிக்க முடியும் என்று கல்வியை வைத்து செய்யும் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக புரட்சி வெடிக்க வேண்டும்.

D. நீதி, அதிகாரம், அரசாங்க மற்றும் அரசியல் புரட்சி

எழுதி கொடுத்த அரசியல் அமைப்பை மீறி, ஒரு சாரார் மட்டும் அதிகாரம் பெற்று பிறரின் நீதிகள் மறுக்கப்பட்டு, தனிகட்ச்சி தனிக்காட்டு ராஜா என்று சொல்லி, சமூகம், எல்லாரும் வேண்டும் என்கிற நிலைபாட்டில் உள்ள கட்சிகளை அழித்து, மற்றவர்களின் குரல்வளையை நெருக்கும் சக்திகளுக்கு எதிராக அதிகார பரவல் வேண்டி புரட்சி வெடிக்க வேண்டும்.

E. தொழில் மற்றும் வேலை வாய்ப்பு புரட்சி

இளைஞர்களை மூளை சலவை செய்து தீவிரவாதம், கலவரங்கள் செய்ய தூண்டி விட்டு கெடுக்கும் தன்மை மாறி, அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும், அவர்களின் திறமையை கண்டுபிடித்து , தொழில் துவங்கும் புரட்சி வெடிக்க வேண்டும்.

F. பொருளாதார புரட்சி

பணம் ஒரு சில குறிப்பிட்ட மக்கள் மற்றும் நிறுவனங்கள் கையில் குவிவதற்கு எதிராக, ஊழலுக்கு எதிராக, பொருளாதார பரவல் அடிப்படையில் புரட்சி வெடிக்க வேண்டும்.

G. மீடியா மற்றும் இயந்திர நுட்பங்களுக்கு புரட்சி

பணம் வாங்கி கொண்டு, பொய் பிரச்சாரம் செய்து, மெய்யான சமூக நன்மைகளை பிரச்சாரம் செய்யாமல் மிகைப்படுத்தி, உணர்ச்சி வசப்படுத்தும், அதே நேரத்தில் இயந்திர நுட்பங்களை தவறாக பயன்படுத்தும் நுணுக்கங்கள் மற்றும் மீடியாக்களுக்கு எதிராக புரட்சி வெடிக்க வேண்டும்.

H. சினிமா கேளிக்கைகளுக்கு எதிரான புரட்சி

மக்களின் கற்பு நிலை மற்றும் அறம் சார்ந்த நெறிகளுக்கு எதிரான காட்சிகளை உருவாக்கி திசை திருப்பும் சினிமா ஸ்டார்ஸ் மற்றும் கேளிக்கைகளுக்கு எதிராக புரட்சி வெடிக்க வேண்டும்.

I. விவசாய புரட்சி மற்றும் உற்பத்தியில் புரட்சி

நாட்டில் விவசாயத்தை குறைத்து மதிப்பிட்டு, நிலத்தை ஆக்கிரமித்து, முதலாளித்துவத்தை புகுத்தும் காரியங்களுக்கு எதிராக புரட்சி வெடிக்க வேண்டும்.

J. அறம் சார்ந்த சிந்தையியல் புரட்சி

மதத்தின் பெயரால் பொய் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு பிறரை பகைக்கும், பிறருக்கு விரோதமாக தீது செய்யும் எண்ணங்களுக்கு எதிராக புரட்சி வெடிக்க வேண்டும்.

மேற்கண்ட காரியங்களில் ஒரு நல்ல புரட்சி வர வேண்டுமெனில் பரலோக ஆளுகை வரவேண்டும். பரலோக ஆளுகை வர வேண்டுமெனில் ஒருவர் சிலுவை சுமக்க வேண்டும். அன்று ரோம மற்றும் யூத சக்திகளின் இதே மனோபாவத்தை வெற்றி கொள்ள நமது இயேசு கிறிஸ்து சிலுவை சுமந்து நமக்கு இரட்ச்சகராக மாறினார். இன்றும் இதே சக்திகளுக்கு எதிராக இயேசு கிறிஸ்துவே வழியும் சத்தியமும் ஜீவனுமாக இருக்கிறார்.

சிலுவை சுமக்க சபை தயரா?

அப்படியென்றால் நமது கிறிஸ்துவின் சபையில் முதலில் புரட்சி வெடிக்க வேண்டும்

என்ன புரட்சி? அதை தான் நாம் எழுப்புதல் என்று சொல்கிறோம்!

  1. தனிமனித, சபை, மற்றும் கிறிஸ்தவ குடும்பங்களில் ஒழுக்கம், பரிசுத்தம் மற்றும் ஒருமைப்பாடு போன்ற காரியங்களில் புரட்சி வெடிக்க வேண்டும்.
  2. ஜெபத்தில் புரட்சி வெடிக்க வேண்டும். ஊக்கமான ஜெப புரட்சி வெடிக்க வேண்டும்.
  3. வசனப் புரட்சி வெடிக்க வேண்டும். சத்தியத்தை சத்தியமாக, தியானிக்க பிரசங்கிக்க புரட்சி வெடிக்க வேண்டும்.
  4. வல்லமை புரட்சி ( power புரட்சி) வெடிக்க வேண்டும். பரிசுத்த ஆவியின் வல்லமையால் நடக்கும் அற்புத, அடையாலங்களால் வரும் சாட்சிகளின் புரட்சி வெடிக்க வேண்டும்.
  5. மிஷனரி புரட்சி வெடிக்க வேண்டும். தேசம் எங்கும் சுற்றி திரிந்து சிலுவை சுமந்து கிறிஸ்துவை வெளிப்படுத்தும் புரட்சி வெடிக்க வேண்டும்.
  6. சுவிசேஷ புரட்சி, ஆத்தும அறுவடையின் புரட்சி வெடிக்க வேண்டும். ஆத்தும தாகம் பெருகி எல்லாரும் சுவிசேஷம் அறிவிக்கும் புரட்சி வெடிக்க வேண்டும்.
  7. கடைசியாக உபதேசம் அறிவித்து, வரபோகும் ராஜியம் வர காத்து இருக்கும், என்ன பாடுகள் வந்தாலும் கிறிஸ்துவில் நிலை நிற்க, ஊழியர்களை எழுப்ப, அடுத்த தலைமுறைக்கு மாதிரியாக விசுவாச போராட்டம் நடத்தும் வைராக்கிய புரட்சி வெடிக்க வேண்டும்.

இந்தியாவில் இதுவரை இருந்த ஓரளவு மாற்றங்கள் கூட கிறிஸ்துவால், கிறிஸ்தவத்தால் வந்ததே, அதையும் இழந்து போகாமல் இருக்க நமக்குள் புரட்சி வெடிக்கட்டும். இல்லையெனில் கிறிஸ்துவின் ஆயிரம் வருட அரசாட்ச்சியில் பார்க்கலாம் என்று விட்டு விடுவோம்!

செலின்