சபை விசுவாசக் குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.

சபை விசுவாசக் குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.

உலக அளவில் வாழும் சிறுவர்கள் புள்ளிவிவரங்கள்

இன்று என் ஜெபம்

சபை விசுவாசக் குடும்பங்களுக்காக ஜெபிப்போம்

“கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்”
(கொலோ 3:1)

1) சபையின் எல்லா விசுவாசக் குடும்பங்களுக்காக தேவனைத் ஸ்தோத்தரித்து ஜெபிப்போம்.
கலா 3:6,7

2) குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் தேவன் நல்ல சரீர சுகத்தைத் தந்தருள ஜெபிப்போம்.
யாத் 15:26

3) தேவனுடைய உன்னதமான பாதுகாப்பின் கரம் கூட இருக்க ஜெபிப்போம்.
சங் 91:1; யோபு 1:10

4) குடும்பங்களில் பரிசுத்த வாழ்க்கை காணப்பட ஜெபிப்போம்.
1 தெச 4:3,7 ; 2 தீமோ 2:21

5) குடும்பங்களிலுள்ள வாலிபப்பிள்ளைகளை தேவன் பரிசுத்தமாக காத்துக்கொள்ள ஜெபிப்போம்.
தானி 1:8; ரோமர் 6:19

6) அனுதினமும் வேதம் வாசித்து, ஜெபித்து, உபவாசிக்கிறவர்களாக இருக்க ஜெபிப்போம்.
யோசு 1:8; சங் 1:2; அப் 10:2

7) அனுதின வாழ்வில் ஐக்கியமாக இருந்து, குடும்ப ஜெபம் செய்கிறவர்களாக இருக்க ஜெபிப்போம்.
அப் 10:2

8) வேதசத்தியத்திற்கு தங்களை முழுவதும் அற்பணிக்கிறவர்களாக இருக்க ஜெபிப்போம்.
அப் 2:42; 2 கொரி 8:5

9) பரிசுத்த ஞாயிறு ஆராதனைகளில் ஒழுங்காய் கலந்துகொள்கிறவர்களாக இருக்க ஜெபிப்போம்.
எபி 10:25; யாத் 20:8

10) தேவனுடைய சித்தம் செய்கிறவர்களாக இருக்க ஜெபிப்போம்.
1 யோவா 2:17; யோவான் 4:34

11) குடும்பத்தில் கணவன் மனைவியிடையே அன்பு வளர ஜெபிப்போம்.
கொலோ 3:19
தீத்து 2:4

12) குடும்பத்தில் பிள்ளைகள் பெற்றோர்கள் உறவு வளர ஜெபிப்போம். எபேசியர் 6: 4
1 பேதுரு 3:8

13) பிள்ளைகள் தேவனை நேசிப்பவர்களாக, பெற்றோருக்கு கீழ்ப்படிகிறவர்களாக இருக்க ஜெபிப்போம்.
1 சாமுவேல் 2: 26

14) விசுவாசப்பிள்ளைகள் ஒழுக்கம் உடையவர்களாக உண்மையுள்ளவர்களாக இருக்க ஜெபிப்போம்.
அப்போஸ்தலர் 9: 31
அப்போஸ்தலர் 4: 32

15) ஒருமனம் ஐக்கியத்தில் வளர்ந்து பெருகுகிறவர்களாக இருக்க ஜெபிப்போம்.
அப்போஸ்தலர் 2: 46

16) சாட்சி வாழ்க்கை வாழ, ஆவிக்குரிய கனிகளை வெளிப்படுத்துகிறவர்களாக இருக்க ஜெபிப்போம்.
1 தீமோ 4:12 ; கலா 5 :22

17) ஒருவரை ஒருவர் நேசிக்கிறவர்களாக இருக்க ஜெபிப்போம்.
1 தெசலோனிக்கேயர் 4:9

18) மற்றவர்களுக்கு முன்மாதிரியான வாழ்க்கை வாழ்பவர்களாக இருக்க ஜெபிப்போம்.
அப் 9 :39 ; 10 :22

19) குடும்பத்தில் உள்ள பிள்ளைகளின் கல்வியை தேவன் பொறுப்பேற்று நடத்த ஜெபிப்போம்.
தானி 1:20 ; யாக்1:5

20) தேவன் நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர ஜெபிப்போம்.
சங்கீதம் 128 :2 ; 1:3

21) குடும்ப வருமானத்தை தேவன் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.
ஆதியாகமம் 26 :12 13

22) தொழில் செய்வோரை தேவன் ஆசீர்வதித்து, தொழிலின் எல்லைகளை விருத்தியாக்க ஜெபிப்போம்.
2 சாமுவேல் 5: 10

23) சொந்த வீடு இல்லாதவர்களுக்கு தேவன் சொந்த வீடு கட்ட மற்றும் வாகனங்கள் வாங்க ஜெபிப்போம். சங்கீதம் 68 :6 ; 34 :10

24) வேலையில் பதவி உயர்வை தேவன் கட்டளையிட ஜெபிப்போம்.
தானியேல் 3:30 சங்கீதம் 92: 12

25) திருமணமாகி குழந்தையில்லாத தம்பதிகளுக்கு தேவன் குழந்தை பாக்கியத்தை அருளிச் செய்ய ஜெபிப்போம்.
சங்கீதம் 34: 10
சங்கீதம் 113 :9

26) திருமணத்திற்காக காத்திருக்கும் பிள்ளைகளுக்கு திருமண தடைகள் மாறி தேவன் நியமித்த ஏற்றத் துணை கிடைக்க ஜெபிப்போம்.
ஆதியாகமம் 2 :18

27) குடும்பத்தின் பொருளாதார தேவைகளுக்காக ஜெபிப்போம்.
ஆதி 49 :25 ; பிலிப்பியர் 4 :19

28) ஊழியங்களை நேசிப்பவர்களாக இருக்க ஜெபிப்போம்.
அப்போஸ்தலர் 4: 30

29) தேவனுடைய ஊழியர்களை ஜெபத்தில்
தாங்குகிறவர்களாக இருக்க ஜெபிப்போம்.
அப்போஸ்தலர் 12 :5 ; 4: 30

30) சபை ஊழியங்களுக்காக உற்சாகமாய் கொடுப்பவர்களாக இருக்க ஜெபிப்போம்.
2 கொரிந்தியர் 8:3 ; 9:7

31) குடும்பத்திலுள்ளவர்கள் தேவனுக்கு பயன்படுகிறவர்களாக மாற ஜெபிப்போம்.
மாற்கு 16: 17

32) ஏழைகள் கைவிடப்பட்டோருக்கு இரங்குகிறவர்களாக இருக்க ஜெபிப்போம்.
சங்கீதம் 82 :3
2 கொரிந்தியர் 8:7

33) ஆத்தும பாரம் உடையவர்களாக, ஆத்தும ஆதாயம் செய்பவர்களாக இருக்க ஜெபிப்போம்.
எரேமியா 9:1
ரோமர் 1: 15

34) தேசத்தின் சேஷமத்துக்காகக் கண்ணீரோடு கதறி ஜெபிக்கிறவர்களாக இருக்க ஜெபிப்போம்.
2நாளாகமம் 7 :14

தேவன் தாமே உங்களை ஆசீர்வதித்து எழுப்புதலுக்கு உங்களை பயன்படுத்துவாராக. ஆமென்

அன்புடனும் ஜெபத்துடனும்
“எழுப்புதலை நோக்கி”
வெற்றி வாழ்வு அற்புத ஊழியங்கள்.