கொரொனாவின் தீவிரம் மாற ஜெபிப்போம்

கொரொனாவின் தீவிரம் மாற ஜெபிப்போம்

1. உலகிலேயே அதிகம் கொரொனா பாதித்த நாடாய் அமெரிக்காவை தள்ளி இந்தியா முதலிடம் 1 நாளுக்கு 3 லட்சம் பேர் பாதிப்பு இதற்காய் ஜெபிப்போம்..

2. ஆக்ஸிஜன் குறைபாட்டால் உயிர்கள் இனி பறிபோகாமல் இருக்க ஜெபிப்போம்

3. கொரொனா எவ்வளவு பாதிப்புள்ளது என நாம் இந்தியாவிடம் கற்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது இந்த இழி நிலை மாற ஜெபிப்போம்

4. சுகாதார அமைச்சர்கள் இதை சரியான முறையில் கையாள ஜெபிப்போம்

5. ஊரடங்கு கட்டுப்பாடுகள் மக்களுக்கு எந்த வித பாதிப்பையும் உண்டாக்காதபடி ஜெபிப்போம்

6. இந்த நோயை தடுக்க முன்வரிசையில் நிற்கும் மருத்துவர்களுக்கு பாதிப்பு உண்டாகாமல் இருக்க ஜெபிப்போம்

7. தமிழ்நாட்டில் 1 நாளில் 14,000 பேர் பாதிக்கப்படுகின்றனர் இந்நிலை மாற ஜெபிப்போம்

8. விரைவில் இந்த நோய் குறித்த பயம், திகில் மாறி உலகில் சமாதானம் நிலவ ஜெபிப்போம்

9. நோயாளிகள் படுக்க கூட வசதி இன்றி ஒரே படுக்கையில் சிகிச்சை பார்க்கும் நிலைமை மாற ஜெபிப்போம்