சின்ன எரிச்சல்தான் காயினின் சாபத்திற்குக் காரணம்

சின்ன எதிர்பார்ப்புதான் லோத்தின் குடும்பம் சிதையக் காரணம்

சின்ன தடுமாற்றம்தான் இஸ்மவேல் பிறப்பின் காரணம்

சின்ன சகிப்புத்தன்மையற்ற காரியம் தான் ஏசாவின் ஆசீர்வாத இறப்பிற்குக் காரணம்.

சின்ன கோபம்தான் மோசே கானானை இழக்க காரணம்.

சின்ன ஆசைதான் சிம்சோன் அழிவை காணக் காரணம்.

சின்ன கீழ்ப்படியாமைதான் சவுல் தேவ கோபம் சுமக்கக் காரணம்

இப்படி வேதத்தில் வீழ்ந்தவர்கள் எல்லாம் சின்னது தானே இன்று நினைத்த காரியங்களே,

ஆதலால் சிறிய காரியம் என நினைத்து சீரழிந்து போவதை விட,
சின்ன காரியம் என்றாலும் தேவையற்ற சுபாவங்களை சாகடித்திடுவோம்.