
அடிகளால் உண்டான
காயங்களும்
அவதூறான
வார்த்தைகளால்
உண்டான
உள்மனக்காயங்களும்
உட்காவலறையில்
போடப்பட்டபோது
சந்தித்த
சிறைவாசங்களும்
உபவாசங்களும்
எல்லாச் சபைகளைக்
குறித்தும் உண்டான
கவலைகளும்
வருத்தங்களும்
நாள்தோறும்
நெருக்கிய போதிலும்
பவுலைப்
பொறுத்தமட்டில்
அவைகளெல்லாம்
எளிதாய்
ஆவியாகிப்போகும்
திரவங்களே!
இத்தனை
நெருக்கங்களுக்கு ஊடே
“ஆசையாய்
தொடருகிறேன்“
என்று முழங்கிய
பரிசுத்த பவுலை
வாட்டியெடுத்த
அத்தனை
உபத்திரவங்களும்
இலேசான
உப(திரவங்களே).
