ஆண்டவரே ஏன் இப்படி?
Why Lord?

“என்னை ஏன் பெலவீனப் படுத்தி விட்டீர்?
“நீ என் பெலத்தைச் சார்ந்து வாழப் பழகிக் கொள்வதற்காக”..

“எனக்கு ஆதரவானவர்களை ஏன் அப்புறப்படுத்தினீர்?”
” நிலையற்ற மனிதர்களை சார்ந்து வாழ்வது சரியல்ல என்பதால்.. “

குழப்பமான சூழ்நிலைகளை ஏன் எனக்கு அனுமதித்தீர்?”…
” தெளிவான முடிவுகளை எடுக்கும் பயிற்சியை நீ பெறுவதற்காக”…

” நான் கேட்டதையெல்லாம் நீர் ஏன் தரவில்லை?”
” உனக்கு எது தேவையோ அதை மட்டுமே நான் தர விரும்புவதால்”….

” அநீதியாளர்களை ஏன் எனக்கு எதிராக ஜெயிக்கவிட்டீர்?”
” நீதியினிமித்தம் துன்பப் படுவது அவசியம் என்பதால்”…..

“விசுவாசித்துக் கேட்டவைகளை நீர் அருள வில்லையே -ஏன்?”
“சரியானவைகளை நீ விசுவசித்துப் பழகுவதற்காக”…..

” மற்றவர்களை மாற்றாமல் என்னையே நீர் மாறச் சொல்கிறீரே?”..
” என்னை நேசிக்கிறவர்களைத்தான் நான் மாற்ற விரும்புகிறேன்”….

“அவசியமான சில நன்மைகளை நீர் எனக்குத் தரவில்லையே?”
” மிகத் தேவையானது இல்லாமலும் நீ வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்பதால்”….

“ஏன் எனது நல்லத் திட்டங்களை நீர் தோல்வியடையச் செய்தீரே?”
” அதைவிட நல்ல திட்டங்களை உனக்காக நான் வைத்திருப்பதால்”….

” வேறு சிலருக்கு நீர் அளித்த உயர்வை எனக்கு நீர் தரவில்லையே?”
“அவர்களின் அழைப்பு வேறு, உன் அழைப்பு வேறு என்பதால்”…

“நீண்ட காலம் என்னை காக்க வைத்து விட்டீரே?”
“நான் தரும் நன்மைகள் உன்னில் நிலைத்திருக்க அந்த காத்திருப்பு அவசியம் என்பதால்”…..

” நான் மட்டும் சிறு தவறு செய்தாலும் தண்டித்து விடுகிறீரே?”
” என் பிள்ளையிடம் சிறு தவறும் இல்லாத பரிசுத்த வாழ்வை விரும்புவதால்”….

” என்னுடைய பல கேள்விகளுக்கு நீர் பதில் தருவதேயில்லையே?”
” நீ விளக்கங்களைச் சார்ந்தல்ல, விசுவாசத்தைச் சார்ந்து வாழ்வதற்காக”….

city revival AG church