
பாதைகளில் தடைகள் இருந்தால்
அதைத் தகர்த்துவிட்டுத்தான்
செல்லவேண்டும் என்றில்லை
தவிர்த்துவிட்டும் செல்லலாம்
எறும்பைப் போல!
“நீ எறும்பினிடத்தில் போய்
அதின் வழிகளைப் பார்த்து
ஞானத்தைக் கற்றுக்கொள்”
(நீதிமொழிகள் 6:6)
வாழ்க்கைப் பாதையில்
பாறைகளும் குன்றுகளும்
மலைபோல்
நிற்கும்போது,
மலைத்து நிற்காமல்
திகைத்துப் போகாமல்
எறும்பைப் போல,
திசைமாறி
புதிய பாதை
ஒன்றைக் கண்டுபிடித்து
பக்குவமாய்
முன்னேறிச் செல்ல
கற்றுக்கொள்
பாறைகளும் குன்றுகளும்
பல ஆண்டுகளாக
அங்கேதான்
படுத்துக் கிடக்கும்!
எறும்போ, அந்தப் பாறையை
பார்த்து அலட்சியம்பண்ணிவிட்டு
அந்த பாறைக்குப் பக்கத்திலேயே
புதிய பாதையில் பயணமாகும்
பிரபுவும், தலைவனும், அதிகாரியும்
இல்லாதிருந்தும்,
எறும்புக்கு இவ்வளவு ஞானம்
இருக்குமானால்
எம்பெருமான் இயேசுவின்
பிள்ளைகளுக்கு எவ்வளவு
ஞானம் இருக்கவேண்டும்?
“சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்
போய், அதின் வழிகளை பார்த்து,
ஞானத்தைக் கற்றுக்கொள்”.
என்ற நீதிமொழிகள் 6: 6 ஐப்
பாரு,
பயணத்தைத் தொடரு!

கர்த்தரின் எழுத்தாணி
நல்லாசான்
பாஸ்டர் இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
எழுத்தாளர் / வானொலி செய்தியாளர்
91-77080 73718
17.04.2023