யோசுவா’வே
KIRUBAN JOSHUA -வே

ஆசீர்வாதத்திற்கு,
அதாவது
BLESSY-க்கு
அருகே அமர்ந்திருக்கும்  
மணமகனே

போதகர்
பெமிலிட்டன்- விண்ணரசி 
அவர்களின் இளைய
சுதந்திரமே

தமிழ் கிறிஸ்டியன்
நெட்ஒர்க்

www.tcnmedia.in
என்ற வலைத்தளத்தின்
சொந்தக்காரர்
போதகர் பெவிஸ்டன்
அவர்களின்
அன்புத் தம்பியே   

கிருபைக்கும்
ஆசீர்வாதத்திற்கும்
சொந்தக்காரனே


பரமன் குறிச்சியில்
பனைமரங்களுக்கு நடுவே
நீதியில் பிரியப்படுகிற

நீ
ஒரு நீதிமான்     
    
எப்படிச் சொல்லுகிறேன்
என்றுதானே கேட்கிறாய்
நீதிமான் பனையைப் போல
செழித்து, லீபனோனிலுள்ள
கேதுருவைப் போல் வளருவான்
என்றுதானே எழுதப்பட்டிருக்கிறது
(சங்கீதம் 92:12)

யாக்கோபே,
யோசுவாவே,

உன் கூடாரங்களும்
இஸ்ரவேலே,
(ஆவிக்குரிய இஸ்ரவேலே)
உன் வாசஸ்தலங்களும்
எவ்வளவு அழகானவைகள்

நீரும்
தேவ கரத்தையும்
உமது கரத்தையும்
பிடித்துகொண்டு  
ஆசீர்வாதமான
குடும்ப வாழ்வுக்குளே
பிரவேசித்துள்ள BLESSY- யும்

பரவிப்போகிற
ஆறுகளைப் போலவும்
கர்த்தர் நாட்டின
சந்தனமரங்களைப் போலவும்
தண்ணீர் அருகே


பரமன் அருகே,
குறிக்கப்பட்ட இந்த
பரமன்குறிச்சியில்  
கேதுரு விருட்சங்களை போல
இருப்பீர்களாக

இந்த பூரண கிருபை A.G. சபை
ஒலிமுகவாசலில் இருக்கிற
சகல ஜனங்களும்
மூப்பரானவர்களும்
போதகர்களும், தலைவர்களும்
சபையாருமாகிய நாங்கள்
உங்களைப் பார்த்து  

நாங்கள் சாட்சிதான்
உன் வீட்டிலே வருகிற மனைவி
BLESSY யை கர்த்தர்
வாழ்ந்திருக்கச் செய்வாராக”


வேதத்தில்
முதலாம் சாமுவேல்
இரண்டாம் சாமுவேல்

என்று இரண்டு புத்தகங்கள்
இருக்கிறது.

உங்கள் வீட்டில்
முதலாம் BLESSY
இரண்டாம் BLESSY
என்று அமைந்திருப்பது
ஆச்சரியமாய் இருக்கிறது

“நீங்கள்
பரமன்குறிச்சியில்
பாக்கியவானாயிருந்து


பூரண கிருபை சபையில்
சம்பூரண ஆசீர்வாதங்களைப்
பெற்று


தாய் நாட்டிலே
தலைநிமிர்ந்து நடந்து

இந்திய நாட்டிலே
இறையாசியுடன்
சிலுவைக்
கொடியேற்றி

ஆறுதல் FM
வானொலி மூலம்
சர்வதேச அரங்கில்
சமாதானத்தைப்
பறைசாற்றி


உலகத்திலே உயர்ந்து
புகழ்பெற்றிப்பீர்களாக”

(ரூத் 4:11)

வாழ்ந்திருக்கச்
செய்வாராக.

உங்கள்
வானொலி செய்தியாளர்  

பாஸ்டர்
ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் B.Com., M.Div.,
Radio Speaker  – AARUTHAL FM
Director – Literature Dept. tcnmedia.in
NALLAASAAN – International Award -Malaysia 2021

குறிப்பு :
22.06.2022 அன்று திருச்செந்தூர் அருகில் உள்ள
பரமன்குறிச்சியில், பூரண கிருபை AG
சபையில் வைத்து நடைபெற்ற
ஆறுதல் FM வானொலியின் அட்மின்
பாஸ்டர் கிருபன் யோசுவா – மெல்சி பிளஸ்சி
இவர்களது திருமண வைபவத்தில்
வாசிக்கப்பட்ட வாழ்த்து கவிதை
.